Friday, August 26, 2011

சமாதி பாதம் சூத்ரம் 31 - 40


ENGLISH



31. து: க்க தெளர்மனஸ்யாங்க
மேஜயத்வ     ச்வாஸ
பிரச்வாஸா விக்ஷேபஸஹபுவ : ||

மன அமைதி குறைவதை எப்படி அறிவது
இந்த அறிகுறிகளால் -
நம்பிக்கை குறைவது , துன்பம் தோன்றுவது, உடம்பில் ஏற்படும் தாளம் தவறிய நடுக்கம் , வெளியேறுகிற மூச்சுத் தடுமாற்றம்


  நம்பிக்கை குறைவு  (moodiness , depression) ஒரு காரணமும் இல்லாமல் தோன்றலாம். காரணமில்லாத ஒரு கோபம், வெறுப்பு ஆகியவை தோன்றி மனதின் அமைதியைச் சீர் குலைக்கும். இதே போன்றே மற்ற தடைகளும் நம்முடைய குணாதிசயங்களாக பூர்வ ஜென்ம வாசனையின் காரணமாக  நாம் அவ்வப்போது பாதிக்கப் படக்கூடும். இறைவன் மீதான நாட்டமோ (நாம ஜபம் ,இஷ்ட தெய்வ த்யானம்,இதிஹாசம் மற்றும் இறை நூல்களின் பாராயணம்  , சத்சங்க் கூட்டோ,  இசையின் மூலமாகவோ நாம் இவற்றை எதிர்கொள்ள வேண்டும்.
இவை எல்லாம்  மிகவும் பலன் தரும் மார்க்கங்களாக பெரியோர்களால் பரிந்துரைக்கப் படுகின்றன
நம்பிக்கைக் குறைவு

கல்லைக்கட்டி கடலிலிட்டும் கரையில்கொண்டு சேர்ப்பது
தொல்லையாவும் வெல்லும்துணை நமசிவாயம் என்றது 
இல்லைஅந்த சாவுமென்று நாவுக்கரசர் கொண்டது 
இல்லைவேறு ஒன்றுமந்த நம்பிக்கையால் தானது..! 

துன்பம்
சமைந்த-பிறகு அடுப்பிலுற்றும் சோறு கொதிப்பதில்லையே 
அமைதிகொண்ட நெஞ்சைத்துன்பம் மிதித்திருப்ப தில்லையே 
தோன்றும்துன்பம் அமைதிகெடுக்கும் அறிகுறிநீ அறிந்திடு 
ஏற்கும்யோக சாதனையால் அமைதியைநீ அடைந்திடு..!  


உடல் நடுக்கம்,மூச்சு தவறல்
நிலத்திலமைதி குறைவதாலே  நிலநடுக்கம்  தோன்றுது 
நடுவில்அமைதி குன்றுவதால் எரிமலையாய்க் குமுறுது
மூச்சின்இயக்கம், உடலில்நடுக்கம் தாளம்தவறித் தோன்றி
போச்சுநெஞ்சில் அமைதிஎன்று பிசகிடாமல் அறிந்திடு..! 

இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க

Naduvil
दुःखदौर्मनस्याङ्गमेजयत्वश्वासप्रश्वासाः विक्षेप सहभुवः ॥३१॥
duḥkha-daurmanasya-aṅgamejayatva-śvāsapraśvāsāḥ vikṣepa sahabhuvaḥ ||31||
Suffering, depression, nervousness, and agitated breathing are signs of this lack of clarity. ||31||

duhkha (दुःख, duḥkha) = pain; suffering
daurmanasya (दौर्मनस्य, daurmanasya) = melancholy; sadness; depression
angam (अङ्गम्, aṅgam) = limb; body
ejayatva (एजयत्व, ejayatva) = uneasiness
angamejayatva (अङ्गमेजयत्व, aṅgamejayatva) = nervousness
shvasa prashvasah (श्वासप्रश्वासः, śvāsa-praśvāsaḥ) = (nom. from shvasa prashvasa (श्वासप्रश्वास, śvāsa-praśvāsa)) inhaling and exhaling; agitated breathing
vikshepa (विक्षेप, vikṣepa) = dissipation; uneasiness; lack of clarity
sahabhuvah (सहभुवः, sahabhuvaḥ) = (nom. from sahabhuva (सहभुव, sahabhuva)) symptoms; secondary symptoms


Thanks to:
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-1/item/duhkha-daurmanasya-angamejayatva-shvasaprashvasah/
------------------------------------------------------------------------------------------------------

32. தத்  ப்ரதிஷேதார்த்தமேக  தத்வாப்யாஸ : || 

தடை நீக்கம்
ஒரு மனப்பட்டு ஒரே பொருளை நிலையாக சிந்திக்கும்போதுதான் த்யான முன்னேற்றத் தடைகளை நீக்க முடியும்


அலையும்மனத்தைக் கொண்டுகுரங்கு கிளைக்குகிளை தாவுது
நிலையைக்கொண்டு வட்டமிட்டு கழுகுஇரையைக் கவ்வுது
ஒன்றுநோக்கம் ஒன்றுபாதை என்றுத்யானம் பழகிட 
சென்றுசேரும் வழியில்தோன்றும் தடையும்  நீங்கும் பொடிபட..! 
tat-pratiṣedha-artham-eka-tattva-abhyāsaḥ ||32||
He who practices assiduously overcomes these obstacles. ||32||

tat (तत्, tat) = (acc. sg. n./nom. sg. n.) he who; whose
pratishedh (प्रतिषेध्, pratiṣedh) = (iic.) reduce; diminish
artam (अर्तम्, artam) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n.) meaning
eka (एक, eka) = (iic.) one
tattva (तत्त्व, tattva) = (iic.) principal; truth; topic
abhyasah (अभ्यासः, abhyāsaḥ) = (nom. sg. m. from abhyasa (अभ्यास, abhyāsa)) assiduousness; enthusiastic practice

Thanks to:

------------------------------------------------------------------------------------------------------

33. மைத்ரீ கருணா
முதிதோ பெக்ஷாணாம் ஸு கது : க்க
புண்யாபுண்யவிஷயாணாம்
பாவனாதச்சித்த  ப்ரஸாதனம் ||     

மன அமைதிக்கு வழிகள்
நட்பு , கருணை ,  மலர்ந்திருத்தல் , இன்பத்திலும் துன்பத்திலும் சம நிலை 

சுருக்கமாக எல்லோரிடமும் அன்புடன் இரூக்கப் பழகுதல், எல்லோருக்கும் இயன்ற உதவி புரிதல் என்பது மிகச் சிறந்த வழியாகும்.

நட்பு
மனது கொண்ட நட்பினாலே காழ்ப்புணர்ச்சி விலகுது
சினந்துபேசி மனம்கொதிக்கும் தன்மைகூட மாறுது  
மணந்துவீசும் மலர்வனமாய் வாழ்க்கையும்தான் மாறுது 
இயைந்தநட்பு  வாழ்க்கையாலே அமைதியும்தான் கூடுது 

கருணை
ஈரமில்லா நிலத்தில் விளைந்து எங்குபயிரும் தங்கிடும் ?
மறமுமில்லா நாட்டில்அமைதி செழித்துஎங்கும் பொங்கிடும்   
வேறுமில்லா வண்ணம்நெஞ்சை நிரப்பிடுவாய்க்  கருணையால் 
பாரமில்லா வண்ணம்நெஞ்சு நிரம்பிடுமாம் அமைதியால்..!

மலர்ச்சி

மலர்ந்துநோக்கும்  சிப்பியில்நீர் முத்துக்களாய் மாறுது 
மலையில்பெய்யும்  மழையும்விழுந்து கடலில்சென்றே சேருது 
புலர்ந்தகாலை மலர்ச்சியோடு எழுந்தமனதின் களிப்பினோடு 
வளர்ந்தஅந்த நெஞ்சமென்றும்  இருந்திருக்கும்  அமைதியோடு  


சம நிலை

இன்பதுன்பம் இரண்டிலுமே அசைவுறாத நிலையது 
உணர்வுஇன்றி ஜடமதாக வாழும்நிலை அன்றது 
வினையறுக்கக் கொள்வதாக கண்ணன் அன்றுசொன்னது 
வினையின் பயனில் பற்றுராது  இருப்பதாலேவருவது 

இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க

मैत्री करुणा मुदितोपेक्षाणांसुखदुःख पुण्यापुण्यविषयाणां भावनातः चित्तप्रसादनम् ॥३३॥
maitrī karuṇā mudito-pekṣāṇāṁ-sukha-duḥkha puṇya-apuṇya-viṣayāṇāṁ bhāvanātaḥ citta-prasādanam ||33||
All that is mutable in human beings (chitta) is harmonized through the cultivation of love (maitri), helpfulness (karuna), conviviality (mudita) and imperturbability (upeksha) in situations that are happy, painful, successful or unfortunate. ||33||

maitri (मैत्री, maitrī) = love; congeniality; friendliness
karuna (करुणा, karuṇā) = helpfulness; empathy; benevolence
mudito (मुदितो, mudito) = (from mudita (मुदिता, muditā)) conviviality; cheerfulness; exuberance
upekshana (उपेक्षन, upekṣana) = (from upeksh (उपेक्ष्, upekṣ)) imperturbability; indifference
sukha (सुख, sukha) = happiness; enjoyment
duhkha (दुःख, duḥkha) = painful; suffering
punya (पुण्य, puṇya) = successful; recompense
apunya (अपुण्य, apuṇya) = failure; sin
vishayanam (विषयानम्, viṣayānam) = (acc. vishayana (विषयान, viṣayāna)) situations
bhavanatah (भावनातः, bhāvanātaḥ) = (nom. bhavanata (भावनात, bhāvanāta)) cultivation; nurturing; development of deportments
chitta (चित्त, citta) = all that is mutable in human beings, including the mind, spirit, feelings, energy and the physical body.
prasadanam (प्रसादनम्, prasādanam) = (acc. from prasadana (प्रसादन, prasādana)) harmony; clarity; peace

Thanks to :

------------------------------------------------------------------------------------------------------
இந்த சூத்திரத்திலிருந்து ஆறு சூத்திரங்களில் பதஞ்சலி இந்தத் தடைகளை எப்படி எதிர்கொள்வது என்று சொல்கிறார்.  

34. ப்ரச்சர்தன 
விதாரணாப்யாம்   வா  பிராண ஸ்ய  :   

பிராணாயாமம் 
இந்த சூத்திரத்திலிருந்து ஆறு சூத்திரங்களில் பதஞ்சலி இந்தத் தடைகளை எப்படி எதிர்கொள்வது என்று சொல்கிறார்.  
மூச்சை நிறுத்தி வெளி விடும் ப்ராணாயாம முறை மன அமைதிக்கு துணை புரிகிறது
பிராணன் என்பது உயிர் சக்தியைக் குறிக்கிறது அது மூச்சு காற்றுடன் நேரடித் தொடர்பினால் மூச்சுப் பயிற்சி என்று கருதப்படுகிறது.

தாயைப்பிரிந்து வெளியில்சென்று ஆடிட்டாலும் சேயது 
ஓய்ந்துதிரும்பும் வரையிலந்த சேயின்மீதோர் கண்ணது
வைத்திருந்து தாய்கருத்தாய் பார்த்திருத்தல் போலவே
பாய்ந்தமூச்சை வெளிநிறுத்தி பார்த்திருத்தல் யோகமே..!


இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க

प्रच्छर्दनविधारणाभ्यां वा प्राणस्य ॥३४॥
pracchardana-vidhāraṇa-ābhyāṁ vā prāṇasya ||34||
The goal can be attained through breathing exercises involving holding your breath before exhaling. ||34||

prachchhardana (प्रच्छर्दन, pracchardana) = exhale; discharge; eject
vidharana (विधारण, vidhāraṇa) = hold in; hold back
abhya (आभ्य, ābhya) = both, and
va (वा, vā) = or (The state of yoga can also be reached by...)
pranasya (प्राणस्य, prāṇasya) = breath or prana; vital energy

Thanks to:

------------------------------------------------------------------------------------------------------

35. விஷயவதீ  வா
ப்ருவ்ருத்திருத்பன்ன  மனஸ :
ஸ்திதி  நிபந்தினீ   
மனம் நிலைப்படுத்தல்
நிலைத்திருக்கும் பொருளை சிந்தித்திருப்பதாலும் , கட்டுக்கடங்கிய சிந்தனையாலும் மனத்தை நிலைப்படுத்தலாம்
இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க


36. விசோகா வா ஜ்யோதிஷ்மதீ
ஜோதி தியானம்
நம்முள்ளே தோன்றுகின்ற ஜோதியை த்யானிப்பதன் மூலமும் யோக முன்னேற்றம் பெறலாம் 


தோன்றிமறையும் பொருளின்நினைவு மனதைஅலையச் செய்யுது 
நிலைக்கும்பொருளை மண்ணில்தேட களைத்துநிற்கலாகுது
நிலைப்படுத்த நிலையில்நிற்க நினைத்திருக்கலாவது
நினைவுதோன்றும் மனதில்ஒளிரும் ஆன்மதீபம்தானது 
विषयवती वा प्रवृत्तिरुत्पन्ना मनसः स्थिति निबन्धिनी ॥३५॥
viṣayavatī vā pravṛtti-rutpannā manasaḥ sthiti nibandhinī ||35||
- Or by contemplating things and impressions, which promotes mental stability and consolidation ||35||

vishaya (विषय, viṣaya) = entity; object; thing
vati (वती, vatī) = impressions; sensation
vat (वात्, vāt) = or, also
pravrtti (प्रव्र्त्ति, pravrtti) = conscious waves in chitta; controlled thoughts; controlled triggering of chitta; concentration
utpanna (उत्पन्ना, utpannā) = bring about; arise; come from;
manasah (मनसः, manasaḥ) = (nom. from manas (मनस्, manas)) mind; spirit; understanding
sthiti (स्थिति, sthiti) = steadiness
nibandhani (निबन्धनी, nibandhanī) = consolidate; aggregate

Thanks to:
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-1/item/vishayavati-pravritti-rutpanna-manasah-sthiti/


विशोका वा ज्योतिष्मती ॥३६॥
viśokā vā jyotiṣmatī ||36||
- Or by contemplating the inner light that is free of suffering.
||36||

vishoka (विशोका, viśokā) = free of suffering; pain free
vat (वात्, vāt) = or, also
jyoti (ज्योति, jyoti) = inner light
jyotishmati (ज्योतिष्मती, jyotiṣmatī) = concentration of the inner light

Thanks to :
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-1/item/vishoka-va-jyotishmati-36/

------------------------------------------------------------------------------------------------------

37. வீத ராக  விஷயம்  வா  சித்தம் 

மனதை ஆசையின்பார் படாமல் நிறுத்தலும் அமைதிக்கு ரு வழியாம்


கரையில் தோன்றும் அலையினாலே ஆர்ப்பரித்து இரையுது
நடுவில்சென்று பார்க்கக்கடல் அமைதியாய்த்தான்   தெரியுது 
மனதுமந்தக் கடலைப்போல  ஆசையாலே அலையுது 
யோகம்கொண்டு ஆழம்செல்ல அமைதிவந்து சேருது..!

वीतराग विषयम् वा चित्तम् ॥३७॥
vītarāga viṣayam vā cittam ||37||
- Or if what is mutable in human beings (chitta) is no longer the handmaiden of desire. ||37||

vita (वीत, vīta) = (imp. pl.) cease; stop
raga (राग, rāga) = (iic.) desire; attachment
vishayam (विषयम्, viṣayam) = (acc. sg. m. from vishaya (विषय, viṣaya)) thing
va (वा, vā) = (conj.) or; also
chittam (चित्तम्, cittam) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n. from chitta (चित्त, citta)) chitta, i.e. that which is mutable in human beings


Thanks to :
------------------------------------------------------------------------------------------------------

 38. ஸ்வப்ன  நித்ரா  ஜ்ஞானலம்பனம் வா ||

தாக்கம் போக்கும் தூககம் 
ஆழ்ந்த தூக்கத்தில் உறும்  கனவுலக அமைதியினை சிந்திக்கவும் மனதில் அமைதி சேர்கிறது


மனத்திலாடும் பாம்பின் நினைவால் பயமதுவும் தோன்றுது 
வனத்திலாடும் மயிலின்நினைவால் மனதுமாட்டம் போடுது 
மகிழ்ந்தநினைவு முகிழ்ப்பதாலே மீண்டும்தோன்றும் மகிழ்ச்சிபோல்
ஆழ்ந்ததூக்கம் கனவில்தந்த அமைதிநினைத்துப் பார்த்திடு..!

இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க

स्वप्ननिद्रा ज्ञानालम्बनम् वा ॥३८॥
svapna-nidrā jñāna-ālambanam vā ||38||
- Or through knowledge that is derived from a nocturnal dream. ||38||

svapna (स्वप्न, svapna) = dream
nidra (निद्रा, nidrā) = deep sleep
jnana (ज्ञान, jñāna) = knowledge
alambana (आलम्बन, ālambana) = based on; arise
va (वा, vā) = also; or

Thanks to :

------------------------------------------------------------------------------------------------------

39. யதாபிமதத்யானாத்வா
தான் விரும்பும் ஒன்றை த்யானிப்பதன் மூலமும் அமைதி கிட்டும். எனவே உயர்ந்ததையே விரும்பு


உற்றவிடத்தை அகற்றுதற்கு  விடமும் மருந்தாய் ஆதல்போல்
பற்றையகற்ற பற்றிடுநீ பற்றற்றானின் பற்றதை
ஏற்றுவாழக்  குறளைத்தந்த தெய்வப்புலவர்  கூற்றிது 
போற்றிப்பழகும் மனதில்அமைதி விரைவில்வந்து சேருது 

இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க

यथाभिमतध्यानाद्वा ॥३९॥
yathā-abhimata-dhyānād-vā ||39||
- Or through contemplation (dhyana) of love. ||39||

yatha (यथ, yatha) = (iic.) how
abhimata (आभिमत, ābhimata) = (iic.) love; attraction
dhyanad (ध्यानाद्, dhyānād) = (abl. sg. n. from dhyana (ध्यान, dhyāna)) meditation; concentration
va (वा, vā) = (conj.) or; also

Thanks to :

------------------------------------------------------------------------------------------------------

40. பரமாணு  பரம  மகத் வாந்தோஸஸ்ய வசீகார :

மனதை அமைதிப் படுத்தும் நோக்கினில் வெற்றிகண்ட ஒருவனின் ஆற்றல் அளவற்றதாகிறது. அணுமுதல் அண்டம்வரை அடக்கிகாட்டும் எல்லையற்ற சக்தி பிறக்கிறது அவனிடம்.


காட்டுயானை மதம்பிடித்துக் காட்டைவெறியில் அழிக்குது 
நாட்டில்பழகும் விதம்படித்து ஆக்கத்தையே அளிக்குது 
காட்டிலாறு பயனுறாது கடலில்சென்று சேருது 
கட்டியணையில் தேக்கவது ஆற்றலாய்த்தான்   மாறுது 
அலையும்மனதை நிலைக்குள்நிறுத்தி ஒருமுகத்தில் பொறுத்திடு 
அணுவில்தொடங்கி அண்டம் வரைக்கும் அடக்கும்ஆற்றல் பெற்றிடு..!
परमाणु परममहत्त्वान्तोऽस्य वशीकारः ॥४०॥
paramāṇu parama-mahattva-anto-'sya vaśīkāraḥ ||40||
A person who attains this goal has mastery over everything, from the smallest atom to the entire universe. ||40||
parama (परम, parama) = (iic.) smallest; largest; last
anu (अणु, aṇu) = (acc. sg. n./nom. sg. n.) atom
parama (परम, parama) = (iic.) smallest; largest; last
maha (मह, maha) = (acc. sg. n./nom. sg. n.) large
tvanto (त्वान्तो, tvānto) = thing
mahattva (महत्त्व, mahattva) = (acc. sg. n./nom. sg. n. from mahattva (महत्त्व, mahattva)) cosmos; universe
antah (अन्तह्, antah) = (abs.) extending
asya (अस्य, asya) = (abs.) this
vashikarah (वशीकारः, vaśīkāraḥ) = (nom. sg. m. from vashikara (वशीकार, vaśīkāra)) control; mastery

Thanks to :

------------------------------------------------------------------------------------------------------

சூத்திரங்கள் 31-40 ல்  பேசப்படுவதன் சாரம்  

சூத்திரம் 31: மன அமைதி குறைதலின் அறிகுறிகள் யாவை என்று சொல்லுகிறார்.
சூத்திரம் 32-39: மன ஒருமைப் பாட்டையும் அமைதியும் அடையும் வழிகளைச் சொல்லுகிறார்.
சூத்திரம் 40: மனதை அமைதிப் படுத்தும் நோக்கினில் வெற்றிகண்ட ஒருவனின் ஆற்றல் பற்றி சொல்லுகிறார்.



PREVIOUS                                                                                  NEXT

<<< முதல் பக்கம் >>>



No comments:

Post a Comment