Tuesday, August 16, 2011

பதஞ்சலி யோக சூத்ரம்

முன்னுரை - என்னுரை

யோகத்துக்கு தமிழில் பொருள் செய்வதோ , பாடலாக வடிக்க வேண்டும் என்பதோ இந்த முயற்சியின் நோக்கமன்று.

காலத்தில் அழியாத யோகத்தை ஏதோ ஒரு கால கட்டத்தில் (வேறு பிறவியில் கூட)  மேற்கொண்டு இறையுடன் கலப்பது தவிர்க்க முடியாத ஒன்று.

இதன் காரணமாக பதஞ்சலி யோக சாஸ்திரத்தை  ஊன்றிப் படிக்கலானேன். அப்போது எடுக்கும் குறிப்புகளாக (நோட்ஸ்) இதை எழுதுகிறேன். இந்தக் குறிப்பு யோகம் செய்ய முனயுங்கால் (முனைந்தால் !) எனக்குப் பயனுறும் என்று கருதுகிறேன்.

இதற்குப் பல புத்தகங்கள் படித்தும் குறிப்பாக கீழ்க்கண்ட தமிழ்ப் புத்தகம் பெரிதும்  துணை புரிந்தது.

பதஞ்சலி    விளக்க உரை : சுவாமி சச்சிதானந்தா.
 வானதி பதிப்பகம். தி நகர். 
கீழ்க்கண்ட இணையப் பக்கம் சமஸ்க்ருத வார்த்தைகளின் பொருள் அறிய உதவிற்று.
Thanks to :
The english translation quoted in this work has been culled out from this site.  http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/

இந்த உந்துதலை எனக்களித்து என்நினைவில் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் என் தந்தைக்கு இதை அர்ப்பணிக்கிறேன்.

I miss you Dad..!
I wish I had you by my side to guide me..!
I hope you are ... !
   ஸ்ரீதரன்..!
---------

பத்தரின் சித்தத்தின் ஐயம்களை அறிவோ 
சித்தரின் வித்தையை அறிந்தெழுமத் திறமோ
பெற்றிலன் ஆயினும் தமிழினில் பரம 
வித்தராம் பதஞ்சலி யோகத்தின் சிரம 
சூத்திரம் யாவையும் இனித்திடத் தரவே
முந்தினேன் வித்தவி நாயகத் தருவே
வந்துனை வேண்டினேன் மெய்ப்பொருள் அறிவே
சிந்தனை விட்டுநீ எனக்கருள் குருவே ..!
----------


சுழுமுனையா லெழுவிசையால் விழுமனதை ஏற்றிப்பாழும்
கழுமதியா லெழுபிணியால் விழுமுடலைத் தேற்றிஊழின்
பழிசாரா பதஞ்சலியார் யோகதீப மேற்றிவாழும்
வழிவகையான் தொழும்செயலால் ஈசனைநீ போற்று போற்று ..!
----------

தொற்றிநாம் பின்னேசென்று தேடிடத் தகுந்த ஒன்று
காற்றிலே படர்ந்துசென்று இதம்தரும் மணமதன்று
கூற்றிலே கலந்துநின்று குளிர்தரும் வாக்குமன்று 

சேற்றிலே மலர்ந்திருந்து எழில்தரும் மலருமன்று
பற்றிலே சேர்ந்திருக்கும் உடல்பெறும் சுகமுமன்று 
சோற்றினை அரைத்தரைத்து நாவுறும் சுவையுமன்று 
பிறிதொரு உருவமற்று நிறைஉறு பரமன்என்று
புகன்றிடும் யோகமின்று பாட்டிருநூற்றில் நன்று
பயின்றிட தீபமொன்று சுடர்விடும் சஹஸ்ரத் தின்று .. !

-----------


இறை வணக்கம் ------------------------------------------------

சமாதி பாதம்

விழிப்புணர்வு
Enlightenment சாதன பாதம்
பயிற்சி
Practice


சாதனைத் தொடக்கம் & முடுக்கம்சாதனை கொடுக்கும்விபூதி பாதம்
பலன்
Results

விபூதியால் கிடைக்கும் 
(இந்தப் பாடலின் விளக்கம்)


கைவல்ய பாதம்
மோக்ஷம்
Liberation


----------------------------------------


இறை ஒடுக்கம் 
பதஞ்சலி தனியன்

(பதஞ்சலி தனிப் பாடல்கள்
Don't miss the video here)

7 comments:

 1. ஜெயமோகனின் 9 சூத்ரங்களுக்கான விளக்கங்களை படித்துவிட்டு எப்போது மற்ற சூத்ரங்களுக்கான விளக்கங்களை படிக்கமுடியும் என காத்திருந்தபோது, தங்களின் வலைக்குள் வந்து விழுந்து, கவித்துவமான தங்களின் விளக்கங்களை படித்து பேரானந்தம் அடைந்தேன்.
  - ராஜேஷ்

  ReplyDelete
 2. மிக்க நன்றி ராஜேஷ் .!

  ReplyDelete
 3. ungalul oru kavingyan yengey iththanai nal olindu irundan

  neevir vazga nin korram vazga

  inda punithapayanam thodara iraivanai vendugiren

  pnb

  ReplyDelete
 4. ஆகா, அற்புதம். நல்ல முயற்சி. வாழ்வாங்கு வாழ்க.

  ReplyDelete
 5. பதஞ்சலி யோக சூத்திரம் இந்த புத்தகம் பற்றி தகவல் ஏதும் சொல்ல முடியுமா???

  ReplyDelete
 6. பதஞ்சலி யோகம் BY சச்சிதானந்தா
  வானதி பதிப்பகம்
  http://www.tamilbooksonline.in/searchbooks1.php?code=TA003492&&bookname=PATHANJALI%20YOGAM

  ReplyDelete