Saturday, August 20, 2011

சமாதி பாதம் சூத்ரம் 12 - 20

12. அப்யாஸ வைராக்யாப்யாம்
தன்னிரோத : || 

மனம் அடக்குதல்

மன அலைகளை அடக்க வேண்டுவது பற்றற்ற தன்மையே. அதைப்பெற வைராக்யப்  பயிற்சியே வழி.

தொற்றுநோயின் வலியெனப் பற்றித்தொடரும் மனவலை   
முற்றுமொழிய வழியெனக்  கற்றுப்பழகும் ஓர்கலை
ஒட்டுவெட்டுஇன்றியே நடுவில்நிற்கும் ஓர்நிலை 
மட்டுமென்றே சொல்லுது யோகமென்ற பெருங்கலை..!

இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க

अभ्यासवैराग्याभ्यां तन्निरोधः ॥१२॥
abhyāsa-vairāgya-ābhyāṁ tan-nirodhaḥ ||12||
The state of yoga is attained via a balance between assiduousness(abhyasa) and imperturbability (vairagya) 

abhyasa (अभ्यास, abhyāsa) = assiduousness; cheerfulness; practice
vairagya (वैराग्य, vairāgya) = imperturbability; indifference
abhyam (आभ्यां, ābhyāṁ) = both
tan (तन्, tan) = this
nirodha (निरोध, nirodha) = tranquility; tranquility of all mutable things, i.e. attaining the state of yoga.

Thanks to:
-----------------------------------------------------------------------------

13. தத்ர ஸ்திதௌ
யத்னோப்யாஸ ||

சாதனை

சாதனையின் மூலம் செயல் படுதல் ஆன்மீக முன்னேற்றத்தின் முதல் படி 
கனியிதென்ப தாலேஇனிமை நாவில்தோன்றக் கூடுமோ
மலரின்பேரைச் சொல்லக்கேட்கின் நறுமணமும் கமழுமோ
மலரை முகரல் கனியை உண்ணல் போன்றசெயலின் முயற்சிபோல்
உலகில் வேண்டும் யோகம்கூட இடைவிடாத பயிற்சியே..! 
तत्र स्थितौ यत्नोऽभ्यासः ॥१३॥
tatra sthitau yatno-'bhyāsaḥ ||13||
Assiduousness means resolutely adhering to one’s practice of yoga. ||13||

tatra (तत्र, tatra) = (adv.) here; there; so that
sthitau (स्थितौ, sthitau) = (nom. du. m./acc. du. m.) resolutely; continuously; constantly;
yatna (यत्न, yatna) = (nom. sg. m.) effort; practice
abhyasah (अभ्यासः, abhyāsaḥ) = (nom. sg. m. from abhyasa (अभ्यास, abhyāsa)) cheerfulness; assiduousness

Thanks to :
-----------------------------------------------------------------------------

14. ஸ து தீர்க கால நைரந்தர்ய 
சத்கார சேவிதோ த்ருடபூமி : ||

இடையறா சாதனை

இடையறாத  சாதனையே பற்றுறாத வைராக்கியம் (நடுவிருத்தல், நடுநிலைப்படுதல்) தரும்

கடலலையை எதிர்க்கும்கலத்தில் நங்கூரம்போ லாவது
மனவலையை நிறுத்துமந்த நடுவிலமைவ தென்பது
காலைமாலை என்றுநாமும் காலம்கடத்தச் செய்வது
போலிராது இடைவிடாது ஞாலம்கடந்து உய்வது..!

இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க 

स तु दीर्घकाल नैरन्तर्य सत्कारादरासेवितो दृढभूमिः ॥१४॥
sa tu dīrghakāla nairantarya satkāra-ādara-āsevito dṛḍhabhūmiḥ ||14||
Success can definitely be achieved via sound and continuous practice over an extended period of time, carried out in a serious and thoughtful manner. ||14||
sa (स, sa) = the same
tu (तु, tu) = in fact; in any case
dirgha (दीर्घ, dīrgha) = long
kala (काल, kāla) = time
nairantarya (नैरन्तर्य, nairantarya) = continuous; uninterrupted
satkara (सत्कार, satkāra) = seriousness; care
adara (आदर, ādara) = respect; consideration for others
asevito (आसेवितो, āsevito) = (from asevita (आसेवित, āsevita)) practiced; followed; continued
dridha (दृढ, dṛḍha) = sound; well founded
bhumih (भूमिः, bhūmiḥ) = (nom. from bhumi (भूमि, bhūmi)) basis; foundation; earth

Thanks to:
-----------------------------------------------------------------------------

15. த்ரிஷ்டானு ச்ரவிகவிஷய வித்ருஷ்ணஸ்ய 
வசீகார சமஜ்ஞா வைராக்யம் 

வைராக்கியம்  என்பது என்ன ?

கண்ணாலும் காதாலும் ஏற்படும் ஆசைகள் அடங்கி மனதலைகள் இயக்கத்தில் நடுநிலை வகித்து இருக்குங்கால் வைராக்கியம் ஏற்படுகிறது 


மனதினலையில் சாய்ந்துராமல் நடுவில்நிற்கும் நிலையது
கண்ணில்காணும் காட்சியாலும் அசைவுறாத சிலையது
செவியில்கேட்கும் செய்தியாலும் குலைந்திடாத மலையது
புவியில்தேவை யோகம்வெல்ல மனதின்உறுதி என்பது
दृष्टानुश्रविकविषयवितृष्णस्य वशीकारसंज्णा वैराग्यम् ॥१५॥
dṛṣṭa-anuśravika-viṣaya-vitṛṣṇasya vaśīkāra-saṁjṇā vairāgyam ||15||

Imperturbability results from a balance in the consciousness, and when the desire for all things that we see or have heard of is extinguished. ||15||
drishta (दृष्ट, dṛṣṭa) = seen; visible
anushravika (आनुश्रविक, ānuśravika) = heard of from others
vishaya (विषय, viṣaya) = entity; object; thing
trishna (तृष्ण, tṛṣṇa) = desire; thirst
vitrishna (वितृष्न, vitṛṣna) = adipsy (lack of thirst)
vitrishnasya (वितृष्णस्य, vitṛṣṇasya) = he who lacks thirst
vashikara (वशिकार, vaśikāra) = balance; the same
sanjna (संज्ञा, saṁjñā) = consciously
vairagyam (वैराग्यम्, vairāgyam) = (acc. from vairagya (वैराग्य, vairāgya)) imperturbability; indifference; non-attachment
Thanks to:

-----------------------------------------------------------------------------


16. தத்பரம் புருஷக்யாதேர் 
குணவைத்ருஷ்ண்யம் ||


எல்லாவற்றிலும் உயர்ந்ததான வைராக்கியம் என்பது ஆன்ம தத்துவத்தில் மட்டுமே நிலைத்திருப்பது. இந்நிலையில் வேறெந்த ஆசையும்  தொடாததாகிறது. 

தன்னில்உறைந்திட்ட பரம்பொருள்தொட்டவன்
மண்ணில்பிறந்திட்ட சுகம்தனைவிட்டவன்
தன்னில்ஒளிர்விட்ட சத்தியசோதிமுன்
விண்ணில்இருண்டிட்ட வட்டமாம்சூரியன்..!

இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க 

तत्परं पुरुषख्यातेः गुणवैतृष्ण्यम् ॥१६॥
tatparaṁ puruṣa-khyāteḥ guṇa-vaitṛṣṇyam ||16||
The highest state of imperturbability arises from the experience of the true self; in this state even the basic elements of nature lose their power over us. || 16||

tat (तत्, tat) = that; which; whose
param (परं, paraṁ) = highest
purusha (पुरुष, puruṣa) = the true self; the immutable self; synonym of drashtu; literally: inhabitant
khyati (ख्याति, khyāti) = understanding; manifestation; consciousness; experience
guna (गुण, guṇa) = the three basic elements of nature
vaitrishnyam (वैतृष्ण्यम्, vaitṛṣṇyam) = (acc. from vaitrishnya (वैतृष्ण्य, vaitṛṣṇya)) state of non-thirst
Thanks to:

-----------------------------------------------------------------------------

17. விதர்க விசாரானந்தாஸ்மிதானுகமாத்
சம்ப்ராஜ்ஞாத

சம்ப்ரக்ஞாத சமாதி (தூய அறிவு)

தர்க்கம், விசாரம், ஆனந்தம், இயற்கையோடியைதல் இந்த நான்கும் கொண்டு தூய அறிவைப் பெறலாகும் 

தர்க்கம்கொண்டு தெளிவது நினைந்துஉருகி நிற்பது
சிற்சபையில் சிவனும்கொண்ட ஆனந்தமாய் இருப்பது
விரிந்திருக்கு மியற்கையிலே இயைந்திருக்க லாவது
பொருந்திப்பயிலக் கிடைப்பது தூய்மையான அறிவது..! 
அமணைவென்று வீழ்த்திட நாவுக்கரசர் கொண்டது
சிவனைநோக்கி யோகியர் நினைந்துநினைந்து விண்டது
யமனைப்போக்கி அன்னாரும் ஆனந்தமாய்க் கண்டது
தானுமாகி நில்லாமல் இயற்கையோடி ணைந்தது
யாவுமாகக் கொள்ளத்தூய அறிவுஅவர்கள் பெற்றது..!
 

वितर्कविचारानन्दास्मितारुपानुगमात्संप्रज्ञातः ॥१७॥
vitarka-vicāra-ānanda-asmitā-rupa-anugamāt-saṁprajñātaḥ ||17||
This absolute knowledge is engendered incrementally by divination, experience, joy, and ultimately the feeling of oneness. ||17||

vitarka (वितर्क, vitarka) = divination; opinion; thoughts
vichara (विचार, vicāra) = experience; concentration; reflection
ananda (आनन्द, ānanda) = happiness; joy; bliss
asmita (अस्मिता, asmitā) = feeling of oneness; sense of self
rupa (रूप, rūpa) = form; nature
asmita rupa (अस्मितारूप, asmitā-rūpa) = feeling of oneness with nature and with one’s own form
anugamat (अनुगमात्, anugamāt) = resulting from these steps
sanprajnata (संप्रज्ञात, saṁprajñāta) = (nom. from sanprajnata (संप्रज्ञात, saṁprajñāta)) absolute knowledge
Thanks to:
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-1/item/vitarka-vichara-ananda-asmita-rupa-anugamat/
-----------------------------------------------------------------------------

18. விராம பிரத்யயாப்யாஸ பூர்வ :
சம்ஸ்கார சேஷோசன்ய :
அசம்ப்ரக்ஞாத சமாதி

சம்ப்ரக்ஞாத சமாதியில் ஆணவம் தூய்மை படுகிறது. ஆயினும் சம்ப்ரக்ஞாத சமாதியின் மன அலைகளின் பதிவுகள் தங்கி இருக்கின்றன.
இவை யாவும் நீங்கப் பெறுதல் அசம்ப்ரக்ஞாத சமாதியில் நிகழ்வதாகும். 


தர்க்கம்முதல் இயைதல்வரை பயின்றுவந்த நெஞ்சிலே 
தாக்கம்கொண்டு மனஅலைகள் துளைத்தெடுப்ப தில்லையே
அந்ததூய நிலையிலாகும் செயலும்கூட மிச்சமே 
வைத்திருக்கும் பதிவைநீக்கச் செய்யவேண்டும் யோகமே..!

இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க 
 

विरामप्रत्ययाभ्यासपूर्वः संस्कारशेषोऽन्यः ॥१८॥
virāma-pratyaya-abhyāsa-pūrvaḥ saṁskāra-śeṣo-'nyaḥ ||18||

The other state of insight, which is based on persistent practice, arises when all perception has been extinguished and only non-manifest impressions remain. ||18||
virama (विराम, virāma) = (iic.) come to rest; cease; let go
pratyaya (प्रत्यय, pratyaya) = (iic.) accurate perception; insight; impression; that which is in the mind
abhyasa (अभ्यास, abhyāsa) = (abl. sg. f ./g. sg. f.) assidousness; enthusiastic practice
purvah (पूर्वः, pūrvaḥ) = (nom. sg. m. from purva (पूर्व, pūrva)) the previous; unmanifested; earlier; past
sanskara (संस्कार, saṁskāra) = (iic.) impressions from the past or from a previous life; our tendencies
shesha (शेष, śeṣa) = (nom. sg. m.) that which remains
anyah (अन्यः, anyaḥ) = (nom. sg. m. from anya (अन्य, anya)) the other (the other form of insight)


-----------------------------------------------------------------------------
19. பவப்ரத்யயோ விதேஹ
ப்ரக்ருதி லயானாம் ||

யோகம் பிறவி தாண்டித் தொடரும்

யோகப் பயிற்சியில் சம்ப்ரக்ஞாத சமாதி கூடு முன் உடலைத் துறப்பவர் மீண்டும் பிறக்குங்கால் அந்தப் பதிவுகளுடன் பிறக்கின்றனர்.  அடுத்த பிறவியில் முற் பிறவியில் விட்ட இடததிலின்று யோகம் தொடர்கிறது.
யோகமேற்ற சாதகன் பாகமாகச் செத்திடில் 
மீதமுற்ற சாதனை வேகமாய்த் தொடர்ந்திடும்
வீதம்செய்த மாதொரு  பாகனைப்ப ணிந்திடும் 
போதம்செய்த நெஞ்சினில் யோகம்கூடி நின்றிடும் ..!
 

भवप्रत्ययो विदेहप्रकृतिलयानम् ॥१९॥
bhava-pratyayo videha-prakṛti-layānam ||19||
Some people are born with true insight, whereas others attain it via a divine body or oneness with nature. ||19||

bhava (भव, bhava) = (iic.) origin; genesis; birth; provenance
pratyayah (प्रत्ययः, pratyayaḥ) = (nom. sg. m. from pratyaya (प्रत्यय, pratyaya)) true perception; insight; cause; certainty; that which is in the mind
videha (विदेह, videha) = (iic.) special body, divine body, non-corporeal
prakriti (प्रकृति, prakṛti) = (iic.) nature
laya (लय, laya) = (iic.) dissolution, fusion
prakriti layana (प्रकृतिलयन, prakṛti-layana) = becoming one with nature /prakriti; oneness with nature

-----------------------------------------------------------------------------
 
20. ச்ரத்தா வீர்ய ஸ்ம்ருதி ஸமாதி
பிரக்ஞா பூர்வக இதரேஷாம்  

சாதனைக்கு துணை நிற்பவை கிடைக்கப் பெரும்

சிலர்க்கு அசம்ப்ரக்ஞாத சமாதியில் நம்பிக்கை, ஆற்றல், நினைவு, அடக்கம்,விவேகம் ஆகிய இவை ஏற்ப்பட்டு சாதனையில் முன்னேற்றம் தருகிறது.

செல்லுமொரு விடமிருக்கப்  பாதைபலது  உள்ளபோல்
யோகம்தேறும் சாதகர் விகுதியைப் பொருத்ததாய்
வேகம்சேர ஆண்டவன் தந்திடுவான் நம்பிக்கை
விவேகமாற்றல் நினைவடக்கம் என்னுமிந்த வைந்தையும்..!

श्रद्धावीर्यस्मृति समाधिप्रज्ञापूर्वक इतरेषाम् ॥२०॥
śraddhā-vīrya-smṛti samādhi-prajñā-pūrvaka itareṣām ||20||
And then there are some for whom trust, determination, memory and divination lay the groundwork for insight. ||20||

shraddha (श्रद्धा, śraddhā) = (nom. sg. f.) trust; certainty; faith; conviction
virya (वीर्य, vīrya) = (iic.) determination; energy; force
smriti (स्मृति, smṛti) = (iic.) recollections; memory
prajna (प्रज्ञा, prajñā) = (nom. sg. f.) divination; knowledge
samadhi (समाधि, samādhi) = (iic.) goal of yoga; enlightenment
samadhi prajna (समाधिप्रज्ञा, samādhi-prajñā) = divination of the goal of yoga
purvaka (पूर्वक, pūrvaka) = (iic.) precede
itaresha (इतरेषा, itareṣā) = for others


------------------------------------------------------------------------------------

PREVIOUS                                                                                  NEXT

No comments:

Post a Comment