Saturday, November 5, 2011

கைவல்ய பாதம் சூத்ரம் 1 - 10

1.ஜன மௌஷதி மந்திர தப: சமாதி ஜா: சித்தய:

இயற்கையை மீறிய சக்தி பிறப்பு, ஔஷதம் , மந்திரம் , தவம் , யோகம் ஆகியவற்றால் பெறப்படும்

உயர்ந்தநிலையை எட்டத்தேவை உயர்ந்ததான சக்தியும்
இயற்கைதன்னின் பற்றைமீற தேவைபல சாதனம்
சிறந்தபிறப்பு அரியமருந்து செய்யும்தவ யோகமும்
அறிந்துகொள்ள சூத்திரமும் சொல்வதிந்த வைந்துமே

जन्मओषधिमन्त्रतपस्समाधिजाः सिद्धयः ॥१॥
janma-oadhi-mantra-tapas-samādhi-jā siddhaya ||1||
Supernatural powers (siddhis) arise from birth, drugs, mantras, austerity, or yoga (samadhi) ||1||

janma (जन्म, janma) = (acc. sg. n./nom. sg. n. from janman (जन्मन्, janman)) birth
oshadhim (ओषधिम्, oadhim) = (acc. sg. f. from oshudhi (ओषुधि, oudhi)) drugs; herbs; medicinal herbs
mantra (मन्त्र, mantra) = (iic.) mantra; acoustic energy
tapah (तपः, tapa) = (acc. sg. n./nom. sg. n. from tapas (तपस्, tapas)) austerity; self-training
samadhi (समाधि, samādhi) = (iic.) transcendent state; the goal of yoga
jah (जाः, -jā) = (nom. pl. m./acc. pl. f./nom. pl. f. from ja (, ja)) arise from
siddhayah (सिद्धयः, siddhaya) = (nom. pl. f. from siddhi (सिद्धि, siddhi)) supernatural powers

Thanks to:

-----------------------------------------------------------------------------------------------
2. ஜாத் யந்தர பரிணாம: ப்ரக்ருத்யா பூராத்

பௌதீக மாற்றம் சூக்கும மாற்றத்திற்குத் துணை புரிகிறது.
குரங்கிலிருந்து பிறந்த மனிதன் முதலில் உருவ மாற்றம் அடைந்து , நாளடைவில் உள்ள மாற்றமும் அடைகிறான். புறத்தோற்றம் உள் தோற்றத்திற்கு பெரிதும் துணை புரிகிறது. (ஆனால் அது மட்டுமே போதாது)

குரங்கிலிருந்து பிறந்தமனிதன் வாலுடனா பிறக்கிறான் ?
மரத்திலிருந்து மரத்துக்குமே தாவிக்கொண்டா இருக்கிறான் ?
உடலின்மாற்றம் உள்ளம்வரை செல்லத்தானே செய்யுது
வெளியின்மாற்றம் உள்ளுக்குள்ளே ஊடுருவிச் செல்லுது
இதனைக்கண்டு உந்தன்வாழ்வில் பாடம்தனைக் கொண்டிடு
வெளியில்உள்ள யாவும்உள்ளே இருக்குமென்று புரிந்திடு
உள்ளிருக்கும் இறையைச்சேர வெளியில்முதலில் செயல்படு
வெளியில்செய்யும் சேவைமூலம் உள்ளமாற்றம் நாடிடு

जात्यन्तरपरिणामः प्रकृत्यापूरात् ॥२॥
jāty-antara-pariṇāmaḥ prakṛty-āpūrāt ||2||
Physical transformation engenders inner transformation of the form of existence. ||2||


jati (जाती, jātī) = (acc. du. f./nom. du. f./nom. sg. f. from jati (जाति, jāti)) form of existence; being
antara (अन्तर, antara) = (iic.) other; inner
parinamah (परिणामः, pariāma) = (nom. sg. m., from parinama (परिणाम, pariāma)) transition; change; evolution
prakritya (प्रकृत्या, praktyā) = (i. sg. f. from prakriti (प्रकृति, prakti)) creation; essence; matter; physical
apurat (आपूरात्, āpūrāt) = (abl. sg. m./abl. sg. n. from apura (आपूर, āpūra)) by filling; overflowing; flowing; completion; perfection

Thanks to:

-----------------------------------------------------------------------------------------------
3. நிமித்தம் பிரயோஜகம் பிரக்கிருத்னாம்
வாண பேதஸ்துத: க்ஷேத்திரகவத்

வெளியில் மேற்கொள்ளும் நற்செயல்கள் தேவை எனினும் உட்தேடலுக்கு (ஞானத்துக்கு) அது மட்டும் போதாது. அது வாய்க்காலில் ஓடும்நீரை பயிரிடம் செலுத்த வாய்க்கால் வெட்டி விடுவதைப் போன்றே ஆகும்.ஒரு கிரியா ஊக்கி மட்டிலுமே. .

பயிர்வளர ஏதுவாக வாய்க்கால் கொண்டநீரினை
வரப்புவெட்டிப் பயிரைச்சென்று அடையஉதவல் போலவே
புறத்திருக்கும் காரணங்கள் காரியங்கள் யாவுமே
உதவிநிற்கும் ஒன்றேயன்றிப் போதுமான தல்லவே

निमित्तमप्रयोजकं प्रकृतीनांवरणभेदस्तु ततः क्षेत्रिकवत् ॥३॥
nimittam-aprayojakaṁ prakṛtīnāṁ-varaṇa-bhedastu tataḥ kṣetrikavat ||3||

However, outer causes are not sufficient to bring about inner change, which can be likened to a farmer removing a sluice gate so as to allow water to irrigate his rice field so that rice can grow there. ||3||
nimitta (निमित्त, nimitta) = visible cause
aprayojakam (अप्रयोजकं, aprayojaka) = non-causal; not relevant
prakriti (प्रकृति, prakti) = nature; matter; creation; physical
varana (वरण, varaa) = a wall around a rice field, which is cleft when the field is irrigated, thus allowing water to flow onto the field.
bheda (भेद, bheda) = removal; splitting
tu (तु, tu) = but
tatah (ततः, tata) = thence
kshetrikavat (क्षेत्रिकवत्, ketrikavat) = like a farmer

Thanks to:
-----------------------------------------------------------------------------------------------
4. நிர்மாண சித்தாண்யஸ்மிதா மாத்ராத்

சித்தம் மாறும் தன்மையானதை நிலைத்த உண்மை என நினைக்கிறது. எனவே தானும் மாறும் தன்மையதாகிறது.

சுற்றுமுலகம் நமக்குஎன்றும் நிலையாகத்தான் தெரியுது
கற்றுத்தெளிந்த அறிவினாலே சுற்றுவது புரியுது
மாறுமியற்கை தன்னைசித்தம் நிலையெனவே நினைப்பது
வேறுமில்லை தானும்கொண்ட மாறும்தன்மை யாலதே


निर्माणचित्तान्यस्मितामात्रात् ॥४॥
nirmāa-cittāny-asmitā-mātrāt ||4||
The mutable self (chitta) is engendered solely by identification with that which is mutable. ||4||

nirmana (निर्माण, nirmāa) = (iic.) create; generate; bring forth
chittani (चित्तानि, cittāni) = (acc. pl. n./nom. pl. n. from chitta (चित्त, citta)) chitta; all that is mutable in humankind; mind
asmitah (अस्मिताः, asmitā) = (acc. pl. f./nom. pl. f. from asmita (अस्मिता, asmitā)) self centeredness; identification with that which is mutable in humankind
matrat (मात्रात्, mātrāt) = (abl. sg. m. from matra (मात्र, mātra)) alone

Thanks to:

-----------------------------------------------------------------------------------------------
5. பிரவ்ருத்திபேத பிரயோஜகம் சித்தமேகமனே கேஷாம்

யோகியின் சித்தம் ஒரு நோக்கத்தை நிறைவேற்ற பலவிதமான வடிவங்களை எடுக்கின்றது. எனினும் அவை யாவும் மாறும் தன்மையதான சித்தத்தின் வெளிப்பாடுகளே ஆகும்.
சூக்கும உடம்பின் அங்கங்களாக விளங்குபவை கரணங்கள் எனப்படும் மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகியவை ஆகும்.
மனம் - ஒன்றைப் பற்றுகிறது, அறிந்து கொள்கிறது
சித்தம் - புத்தியின் துணை கொண்டு மனம் அறிந்ததை மதிப்பிடுகிறது
அகங்காரம் - சித்தம் நினைத்ததை செயல் படுத்துகிறது.

பிளந்ததூணின் நடுவிலே எழுந்ததோற்றம் சிம்மமே 
அளந்ததங்கு வானுமே அவதரித்த வாமனன்
எடுத்தவடிவம் யாவுமே கொள்ளவைத்த நோக்கமே
படைக்கும் சித்தன்சித்தமும் யாவும்விள்ளப் பண்ணவே

விள்ளப் பண்ணுமே = நோக்கத்தை அடையும் பாதையை தெளிவுறுத்தும்

प्रवृत्तिभेदे प्रयोजकं चित्तमेकमनेकेषाम् ॥५॥
pravṛtti-bhede prayojakaṁ cittam-ekam-anekeṣām ||5||
While the forms may manifest in various ways, the mutable essence (chitta) is the underlying principle of these many forms. ||5||

pravritti (प्रवृत्ति, pravtti) = (iic.) outer (forms of) manifestation
bhede (भेदे, bhede) = (loc. sg. m. from bheda (भेद, bheda)) difference
prayojakam (प्रयोजकम्, prayojakam) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n. from prayojaka (प्रयोजक, prayojaka)) causing; directing
chittam (चित्तम्, cittam) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n. from chitta (चित्त, citta)) chitta, i.e. that which is mutable in human beings; mind
ekam (एकम्, ekam) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n. from eka (एक, eka)) one
anekesham (अनेकेषाम्, anekeām) = (g. pl. m./g. pl. n. from aneka (अनेक, aneka)) of many

Thanks to:
-----------------------------------------------------------------------------------------------
6. தத்ர த்யானஜம் அனாசயம்

த்யானத்தால் சித்தன் படைக்கும் சித்தங்கள் (எடுக்கும் மன வடிவங்கள்) மட்டுமே வினைப் பதிவு அற்றதாகும்.

ஒருவன்மனது ஒன்பதுமே ஒளித்துப்படைத்திடும் எண்பதிலே
உருவமற்றதை எண்ணுவதில் பிறந்துநின்றிடும் மெய்யறிவே
தொடரும்பதிவை அற்றதுமாய் நிறைந்துநின்றிடும் உன்னுடனே 
விரைந்துகாட்டிடும் தெள்ளனவே உன்னில்கரந்து நிற்பதனை

உருவமற்றதை எண்ணுவதில் = த்யானத்தில்
உன்னில் கரந்து நிற்பது = உன்னில் மறைந்து நிற்பது (ஆன்மா)
மனது ஒன்பது : மனதின் / புத்தியின் ஒன்பது வகையான திறம்/அறிவு (intelligence)

1 மொழியில் புலமை (Linguistic intelligence)
2 தர்க்கம் மற்றும் கணிதத்தில் புலமை
(logical-mathematical intelligence)
3 இசையின் அறிவு (musical intelligence-sensitive to sound)
4 இடம் சார்ந்த கற்பனைத் திறம்
(spatial intelligence-can imagine, understand, and represent the visual-spatial world)
5 மேம்பட்ட பொறி இயக்கம்
(bodily-kinesthetic intelligence)
6 மனித உறவு மேம்பாட்டுத் திறம் (Intrapersonal intelligence)
7 தன்னறிவு (intrapersonal intelligence- these people are intuitive and typically introverted)
8 இயற்கை இயைந்த திறம் (naturalistic intelligence)
9 ஆன்மீகத் திறம்
(Spiritual or existential intelligence- Those with this ability explore questions about life, death, and what lies beyond the subjective perspective.)

இந்த ஒவ்வொரு திறத்திலும் மற்ற எட்டு திறன்களும் ஒளிந்திருக்கின்றன (குறைந்திருப்பதால்) தெரிவதில்லை. மிகுந்திருப்பதே திறமாக வெளிப்படுகிறது.

இவ்வாறாக ஒன்பது திறன்கள் ஒவ்வொன்றிலும் ஒன்பது திறன்கள் ஒளிந்திருக்கின்றன. ஆக மொத்தம் 81 திறன்கள். அதாவது ஒவ்வொருவரின் வெளிப்பாடாகத் தோன்றும் முக்கிய திறனில் மற்ற 80 திறன்கள் ஒளிந்திருக்கின்றன.

तत्र ध्यानजमनाशयम् ॥६॥
tatra dhyānajam-anāśayam ||6||
In the various manifestations, the impression engendered by contemplation (dhyana) is free of influences. ||6||

tatra (तत्र, tatra) = (adv.) of these
dhyanajam (ध्यानजम्, dhyānajam) = (iic. from dhyana (ध्यान, dhyāna)) resulting from contemplation
ashaya (अशय, aśaya) = (iic. from asha (आश, āśa)) that which remains; lasting impression
anashayam (अनाशयम्, anāśayam) = (ca. impft. sg. from nash (नश्, naś)) free of influences

Thanks to:

-----------------------------------------------------------------------------------------------
7.கர்மா சுக்லா கிருஷ்ணம் யோகின: த்ரிவிதமிதரேசம்

யோகியின் செயல்பாடுகளில் நல்லது கெட்டது என்ற வேறுபாடுகள் கிடையாது. மற்றவர்களுக்கு நல்லது கெட்டது, இரண்டும் கலந்தது என்ற மூன்று வகை உண்டு.

கத்திகொண்டு கனியினைநீ வெட்டியுண்ண லாகுது
கத்திக்கொண்டு செய்ததினால் சத்தியமா போகுது ?
கத்திதன்னைக் கொண்டுநீ கழுத்தை வெட்டலாவது
புத்திகெட்ட தாலேவந்த கொலையுமென்றே ஆகுது

ஒன்றேஆகும் வினையும்கூட வேறாய்த்தானே தோணுது
பற்றித்தொடரும் விளைவும்வினையின் நோக்கத்தாலேஅமையுது
சுற்றிவரும் அதனைவிலக்கி செய்திருக்க லாவது
பெற்றிருக்கும் தன்மைதரும் யோகப்பயிற்சி தானது

நல்லவையாய்க் கெட்டவையாய் இரண்டும்சேர்ந்த கலப்புமாய்
உள்ளவையாம் மூன்றுவகை மாந்தருக்குத் தானது 
வெள்ளையுமாய்க் கருப்பினதாய் செய்யும் செயலுமாவது
இல்லாததாய் ஆகும்சித்தன் செய்யும்செயலில் தானது 

செய்யும்வினை யாவையுமே அவனின்செயலு மாகவே
பொய்யில்விளை மெய்யினாலே இல்லையென்று கொள்ளவே
பையிலில்லை கவலைஇல்லை என்றுகொள்ளல் போலவே
பலனுமில்லை எனதுமில்லை என்னும்சித்தன் சித்தமே

कर्माशुक्लाकृष्णं योगिनः त्रिविधमितरेषाम् ॥७॥
karma-aśukla-akṛṣṇa yogina trividham-itareām ||7||
For a yogi, the law of cause and effect (karma) is neither white nor black, but is threefold for others. ||7||
karma (कर्मा, karmā) = (nom. sg. n. from karman (कर्मन्, karman)) actions and reactions; law of cause and effect
ashukla (अशुक्ला, aśuklā) = (nom. sg. f. from shukla (शुक्ल, śukla)) not white
a krishnam (अकृष्नम्, a-kṛṣnam) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n. from a krishna (अकृष्ण, a-kṛṣṇa)) not black
yoginah (योगिनः, yogina) = (acc. pl. m./nom. pl. m. g. sg. m./abl. sg. m. from yogin (योगिन्, yogin)) for a yogi
tri (त्रि, tri) = (iic.) three
tri vidham (त्रिविधम्, tri-vidham) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n from tri vidha (त्रिविधा, tri-vidhā)) threefold
itaresham (इतरेषाम्, itareām) = (g. pl. m./g. pl. n. from itara (इतर, itara)) of the others; for others

Thanks to:
-----------------------------------------------------------------------------------------------
8.தத தத் விபாகானுஞானமேவ அபிவ்யக்தி: வாசனானாம்

செயலின் தன்மையைப் பொறுத்தே பலனும், பலன் தரும் காலமும் அமைகிறது.

நீரும்உரமும் முயன்றஉழவும் வயலில் விளைச்சலாகுது
குறைபடவும் இவற்றிலெவையும் விளைச்சல்குறைச்ச லாகுது
நிறைபடவே முதிர்ச்சிகொள்ள நேரம்கூடப் பிடிக்குது
நிலத்தினிலே நெல்விதைக்க கேழ்வரகா முளைக்குது ?
பலனும்கூட செயலால் மற்றும்முயற்சியினால் அமையுது

tata tad-vipāka-anugānām-eva-abhivyakti vāsanānām ||8||
In accordance with this law of cause and effect, the fruits ripen that correspond to the underlying desires (vasanas). ||8||

tatah (ततः, tata) = thence
tad (तद्, tad) = whose
vipaka (विपाक, vipāka) = result; fruits
tad vipaka (तद्विपाक, tad-vipāka) = ripen; come into existence
anu (अनु, anu) = (iic.) based on
gunanam (गुणानाम्, guānām) = (gen. pl. from guna (गुण, gua)) basic characteristic of nature
anu gunanam (अनुगुणानम्, anu-guānam) = accordingly; corresponding to
eva (एव, eva) = only
abhi (अभि, abhi) = to
vyakti (व्यक्ति, vyakti) = manifestation
abhi vyaktih (अभिव्यक्तिः, abhi-vyakti) = (nom. from abhi vyakti (अभिव्यक्ति, abhi-vyakti)) to appear; to manifest
vasanam (वासनाम्, vāsanām) = (acc. from vasana (वासन, vāsana)) wish; tendency; subliminal imprints

Thanks to:

-----------------------------------------------------------------------------------------------
9. ஜாதி தேச கால வ்யவஹிடானாமபி அந்தர்யாம் ஸ்ம்ருதி சம்ச்காரையோ: ஏகரூபத்வாத்

செயலின்,இது வரை, பலன் தராப் பதிவுகள் (சம்ஸ்காரம் ) கைவல்யம் கொள்ளும் வரை ( பிறவி கடந்து) ஜீவனைத் தொடரும். இனம், காலம், இடம் இவற்றைக் கடந்ததாகும்.

உடலைத்தொடரும் நிழலுமாகத் தொடரும்வினையின் பலனுமே
விடலுமில்லைக் காலதேசம் ஜாதிஎன்ற பிரிவிலே 
சாதலில்லை பலனுமிந்த மூன்றும்கொண்ட மறைவிலே
மீதமில்லை செயலும்பலனும் என்னும்வரைத் தொடருமே

जाति देश काल व्यवहितानामप्यान्तर्यां स्मृतिसंस्कारयोः एकरूपत्वात् ॥९॥
jāti deśa kāla vyavahitānām-apy-āntaryā smti-saskārayo ekarūpatvāt ||9||
Even if modality, place and time cease to exist, the continuity of wish and consequences remains, for remembrance (smriti) and impressions (samskaras) are part of the same being. ||9||

jati (जाति, jāti) = (voc. sg. f.) class; caste; social class; station in life; quality
desha (देश, deśa) = (voc. sg. m.) place
kala (काल, kāla) = (voc. sg. m./voc. sg. n. from kala (काल, kāla)) time
vyavahitanam (व्यवहितानाम्, vyavahitānām) = (g. pl. m./g. pl. n./g. pl. f. from vyavahita (व्यवहित, vyavahita)) interrupted; separated
api (अपि, api) = (iic. from ap (अप्, ap)) even; although
anantaryam (अनन्तर्यं, anantarya) = (yan (यान्, yān) = acc. pl. m. from ya (, ya); taryam (तर्याम्, taryām) = loc. sg. f. from tara (तर, tara); loc. sg. f. from tari (तरि, tari)) uninterrupted sequence; continuity
smriti (स्मृति, smti) = (iic.) remembrance
sanskarayoh (संस्कारयोः, saskārayo) = (loc. du. m./g. du. m. from sanskara (संस्कार, saskāra)) impressions
eka (एक, eka) = (iic.) one
rupa (रूप, rūpa) = form; being

Thanks to:
-----------------------------------------------------------------------------------------------

10. தாஸா மனாதித்வம் சா ஆசிஷோ நித்யத்வாத்

உயிரின் மீதும் இன்பத்தின் மீதும் ஆசை எப்போதும் இருந்து கொண்டு தானிருக்கும். இது ஆதி முதலாய்த் தொடர்வது.

பிறந்ததில் லிருந்திருக்கு மந்தவுந்த னாசையும்
உயிர்தனில் லிருந்திருக்கு மந்தவுந்த னாசையால்
வரம்பிலாப் பிறப்பினில் தொடர்ந்திருக்கு மாதலால்
தினம்தொழு சிவம்தனைக் கசிந்துநீயும் காதலால்

तासामनादित्वं चाशिषो नित्यत्वात् ॥१०॥
tāsām-anāditvaṁ cāśiṣo nityatvāt ||10||
The continuity arising from wish and reality has no beginning, for the will to live is eternal. ||10||

tasam (तासाम्, tāsām) = (g. pl. f. from tad (तद्, tad)) for these
anaditvam (अनादित्वं, anāditva) = no beginning
cha (, ca) = (conj.) and; also
ashishah (आशिषः, āśia) = (acc. pl. f./nom. pl. f./g. sg. f./abl. sg. f. from ashis (आशिस्, āśis)) the will to live
nityatvat (नित्यत्वात्, nityatvāt) = (abl. sg. n. from nityatva (नित्यत्व, nityatva)) eternal; permanent, without end

Thanks to:
-----------------------------------------------------------------------------------------------


<<< முதல் பக்கம் >>>

No comments:

Post a Comment