Saturday, November 5, 2011

விபூதி பாதம் சூத்ரம் 41 - 56


ENGLISH


41. சமான ஜயாத்பராஜ்ஜவலனம் 

சமானன் நாடி வசப் பட யோகியை சுற்றி ஒளி படரும்

மனிதனுக்கு இடதுநாசி வலதுநாசி இரண்டிருக்கு
எனினுமதில் ஒன்றில்மட்டும் விடுதலாக மூச்சிருக்கு
தனித்திருந்து சம்யமத்தில் சமானநாடி வென்றவர்க்கு
இனித்துடலும் விளங்குவண்ணம் சோதி ஒன்று ஒளிர்ந்திருக்கு

समानजयाज्ज्वलनम् ॥४०॥
samāna-jayāj-jvalanam ||40||
Mastery over metabolic energy (samana-vayu) engenders inner fire. ||40||
samana (समान, samāna) = samana vayu (समानवायु, samāna-vāyu); metabolic energy; a metaphysical energy that is responsible for metabolism.
jayat (जयात्, jayāt) = by mastery
jvalanam (ज्वलनम्, jvalanam) = (acc. from jvalana (ज्वलन, jvalana)) fire
Thanks to:

--------------------------------------------------------------------------------------------
42. சீரோத் ராகாசயோ சம்பந்த சம்யமாத்
திவ்யம் ச்ரோத்ரம்

ஆகாயத்தை நினைத்து செய்யும் த்யானத்தால் செவி சிறப்புத் திறன் பெறும்

நிறைந்திருக்கும் ண்டபிண்ட றைந்திருக்கும் ஒமிலே
பரந்தகாற்றும் மறைந்திருக்கும் பரந்தவான வெளியிலே
திறந்தவானை சம்யமத்தில் நினைத்துப்பார்க்கும் திறனிலே
சிறந்துதோன்றும் தெய்வஒலி சித்தன்கொண்ட செவியிலே


श्रोत्राकाशयोः संबन्धसंयमात् दिव्यं श्रोत्रम् ॥४१॥
śrotra-ākāśayoḥ saṁbandha-saṁyamāt divyaṁ śrotram ||41||
Meditation (samyama) on the relationship between space and the power of hearing engenders the divine power of hearing. ||41||
shrotra (श्रोत्र, śrotra) = ear; hearing
akasha (आकाश, ākāśa) = space; ether
sanbandha (संबन्ध, saṁbandha) = relationship; connection
sanyama (संयम, saṁyama) = deep contemplation; meditation
divya (दिव्य, divya) = divine; higher
shrotram (श्रोत्रम्, śrotram) = hearing

Thanks to:
--------------------------------------------------------------------------------------------
43. காய ஆகசயோ: சம்பந்த சம்யமால் வகுதூல
சமாபந்தேஸ் சாஆகாச கமனம்

பரந்ததான வான்கடல் பிறந்ததான உன்னுடல்
இணைந்திருக்கும் தொடர்பினில் கொண்டதான சம்யமம்
மாற்றிடும் உடல்தனின் எடைதனைக் குறைவதாய்
அளித்திடும் திறன்தனை வான்தனில் பறப்பதாய்

कायाकाशयोः संबन्धसंयमात् लघुतूलसमापत्तेश्चाकाश गमनम् ॥४२॥
kāyākāśayoḥ saṁbandha-saṁyamāt laghu-tūla-samāpatteśca-ākāśa gamanam ||42||

Meditating (samyama) on the relationship between the body and space and contemplating (samapatti) the lightness of cotton engender the ability to move through space weightlessly. ||42||

kaya (काय, kāya) = body
akasha (आकाश, ākāśa) = space; ether
sanbandha (संबन्ध, saṁbandha) = relationship; connection
sanyama (संयम, saṁyama) = deep contemplation; meditation
laghu (लघु, laghu) = light
tula (तूल, tūla) = cotton
samapatti (समापत्ति, samāpatti) = connection; becoming; meditation
cha (च, ca) = and
akasha (आकाश, ākāśa) = space; ether
gamanam (गमनम्, gamanam) = movement; to move

Thanks to:

--------------------------------------------------------------------------------------------
44. பகிர கல்பிதா வ்ருத்திர் மகாவிதேஹா தத:
ப்ரகாசா வாரணஷய:

தன் நினைவு மட்டுமல்லாது பரந்த அகண்ட வளி நினைவலைகளில் சம்யமம் கொள்ள ஆத்மனை மறைத்திருக்கும் அறியாமை என்னும் திரை விலகும்
தன்னில்பிறந்த நினைவில்கொண்ட சம்யமத்தின் முடிவிலும்
இன்னும்இருக்கும் தன்னலத்தில் கொண்டவந்த நினைவுமே
அதனைப்போக்கக் கொள்ளவேண்டும் வெளியின்எண்ண சம்யமம்
அதுவாய்விலகும் ஆன்மம்மூடி நிற்குமறி யாமையும்
----------------------------

தன்னின்புறம்பட்ட நினைவுமே இன்னும்அறிந்திடா புதுமையே
எனினும்அவைதனை விடாமலே செய்யும்சம்யமம் தன்னிலே
மண்ணில்புதைந்திடா ஆன்மத்தை மூடுமரி யாமைநீக்கியே
கண்ணில்தெரிந்திடச் செய்திடும் பின்னேதோன்றிடும் அற்புதம்..!


தன்னின் புறம்பட்ட = தனக்கு அப்பாற்பட்ட - வெளியில் உள்ள
(Cosmic consciousness)

बहिरकल्पिता वृत्तिः महाविदेहा ततः प्रकाशावरणक्षयः ॥४३॥
bahir-akalpitā vṛttiḥ mahā-videhā tataḥ prakāśa-āvaraṇa-kṣayaḥ ||43||
Meditating on unimaginable external thought waves gives rise to maximum disembodiment. This in turn lifts the veil on the true self. ||43||
bahih (बहिः, bahiḥ) = external
akalpita (अकल्पिता, akalpitā) = unimaginable
vritti (वृत्ति, vṛtti) = wave; thought wave
maha (मह, maha) = large; maximum
videha (विदेहा, videhā) = disembodiment
tatah (ततः, tataḥ) = thence
prakasha (प्रकाश, prakāśa) = light; here: the true self
avarana (आवरण, āvaraṇa) = covering; veil
kshayah (क्षयः, kṣayaḥ) = remove; destroy; reduce

Thanks to:

--------------------------------------------------------------------------------------------
45. ச்தூலஸ்வரூப சூக்ஷ்மான் வயார்த்தவத்வ 
சம்யமாத் பூதஜய:

பஞ்சபூதங்களின் தன்மை,காரணம்,அவைகள் இயங்கும் வரிசை ஆகியவை மீது கொண்ட சம்யமம் பஞ்ச பூதங்களால் ஏற்படும் தடைகளை வெற்றி கொள்ள உதவும்

இயற்கைகொண்ட உலகமே இறைவன்மாயச் செயலுமே
இயைந்தஐந்து பூதமும் எதிலுமிருக்க லாகுதே 
அமைந்த தன்மேல்சம்யமம் கொள்ளக்கிடைக்கும் வெற்றியால் 
உலகத்தடைகள் போக்கலாம் விரைவில்நோக்கில் சேரலாம்

स्थूलस्वरूपसूक्ष्मान्वयार्थवत्त्वसंयमात् भूतजयः ॥४४॥
sthūla-svarūpa-sūkṣma-anvaya-arthavattva-saṁyamāt bhūtajayaḥ ||44||
Meditating on the outer manifestations, true nature, underlying principle, temporal sequence, and purpose of something engenders mastery (jaya) of the physical elements (bhutas). ||44||

sthula (स्थूल, sthūla) = the external aspects of something
svarupa (स्वरूप, svarūpa) = own form; true nature; true form
sukshma (सूक्ष्म, sūkṣma) = subtle; the subtle underlying principle
anvaya (अन्वय, anvaya) = sequence; all-pervasive
artha vattva (अर्थवत्त्व, artha-vattva) = purposefulness; function
sanyama (संयम, saṁyama) = deep contemplation; meditation
bhuta (भूत, bhūta) = the five elements; matter
jayah (जयः, jayaḥ) = (nom.) victory, mastery; control

Thanks to:
--------------------------------------------------------------------------------------------


46. ததோ அணிமாஆதி பிராதுர் பாவ: 
காயா சம்பத் தத் தரமான பிகாதஸ்ச

பஞ்ச பூதங்கள் மேல் கொண்ட சம்யமம் அணிமா முதற்கொண்ட அட்டமா சித்திகளை கொடுக்கும்

உலகில்தோன்றும் யாவிலும் நிறைந்தமூலப் பொருட்களாம் 
நிலமும்நீரும் காற்றுதீ எங்கும்நிறையா காசமாம் 
புலனிருத்தி அதனிடம் சித்தன்கொண்ட சம்யமம் 
அளித்திடும் பலன்களாம் அட்டமகா சித்தியாம் 

உடல்சுருக்க மணிமாவாம் அதன்பெருக்க மகிமாவாம் 
படுமேகாற்றின் லேசுமாய் உடலும்சித்து லகிமாவால் 
எடைமிகுந்த யானைபோல் கனத்திருக்கும் கரிமாவால் 
தடையுமின்றி எங்குமுடல் செல்லுமுடன் பிராத்தியால்
அடைந்தவரின் விருப்பம்யாவும் தருமப்பிரா காமியா 
படைத்திடவும் திறனைத்தரும் சித்துமா மீசத்தியம் 
படைத்ததைக்கைப் படுத்தலாக்கும் சித்துமாம்வ சித்துவம் 
கிடைத்தஇவை யாவும்கொண்டு அடையவேணும் சத்தியம்

ततोऽणिमादिप्रादुर्भावः कायसंपत् तद्धरानभिघात्श्च ॥४५॥
tato-'ṇimādi-prādurbhāvaḥ kāyasaṁpat tad-dharānabhighātśca ||45||
This mastery engenders the ability to make the body appear to be extremely small, as well as attainment of an absolutely physical body and its indestructible integrity. ||45|
|
tatah (ततः, tataḥ) = thence
animan (अणिमन्, aṇiman) = capacity to make the body extremely small; the eight supernatural abilities (siddhis): very small; huge; light; heavy; attain the maximally remote; influence other living beings via the mind; influence non-living matter; materialization and dematerialization
pradurbhavah (प्रादुर्भावः, prādurbhāvaḥ) = manifestation
kaya (काय, kāya) = body
sanpat (संपत्, saṁpat) = absoluteness; perfection
tat (तत्, tat) = whose; their
dharma (धर्म, dharma) = function; task; fullfillment of a duty
anabhighata (अनभिघात, anabhighāta) = non-resistance; without obstruction
cha (च, ca) = and

Thanks to:
--------------------------------------------------------------------------------------------
47. ரூப லாவண்ய பல வஜ்ரசம்கனன 
த்வானி காயசம்பத்

நல்ல உடலே செல்வம். அந்த செல்வத்தின் பகுதிகளாவன அழகு, நளினம், ஆற்றல் (சக்தி) , திடம், மட்டுமுள்ள உடல் லட்சணங்கள் யாவும் அமைந்த குறையற்ற நிறைவு.

உலகிலமைந்த செல்வம்யாவும் உடலைப்பட்டே அமையுது 
அளவில்லாம லிருந்தும்செல்வம் அழகில்லாமல் ஏனது ? 
உடலும்கொண்ட செல்வமாக எப்படியாம் ஆகுது 
எனவும்கேள்வி கேட்கபதில் இப்படித்தான் இருக்குது 

அழகுநளினம் அடக்கலாகா ஆற்றல்திடமும் கூடவே 
பழுதில்லாத மற்றபிற அமைப்பும் கூடலாகவே 
எழுந்தஉடல் விலையில்லாத செல்வமாகக் கூடுமே 
விழுதுபட்ட மரமதாக சிறந்துபயன் கூட்டுமே

रूपलावण्यबलवज्रसंहननत्वानि कायसंपत् ॥४६॥
rūpa-lāvaṇya-bala-vajra-saṁhananatvāni kāyasaṁpat ||46||
The perfection of the body includes beauty, gracefulness, strength, and adamantine hardness. ||46||

rupa (रूप, rūpa) = beauty; correct form
lavanya (लावण्य, lāvaṇya) = gracefulness; charm; ability to attract
bala (बल, bala) = strength; energy
vajra (वज्र, vajra) = diamond; adamantine hardness
sanhana natvani (संहननत्वानि, saṁhana-natvāni) = hardness; strength; steadiness
kaya (काय, kāya) = body
sanpat (संपत्, saṁpat) = absoluteness; perfection

Thanks to:
--------------------------------------------------------------------------------------------
48. கரகணஸ்வரூபாஸ்மிதான் வயார்த்தவத்வ 
சமயமா திந்திரிய ஜயா:

ஐந்து புலன்களை ஆட்சிக்கு கொண்டு வருவதன் மூலம் யோக வெற்றி கொள்ளலாம்

மனமுமைந்து புலனின்பின்னே ஓயாமலே செல்லுது 
கணமுமது வசப்படவே புலப்படாமே கொல்லுது 
தினமுமெது செய்வதென சூத்திரமே சொல்வது 
வினயத்துடன் படித்திடவே காத்திரமாய்த் தெரியுது 

கிரகணமென்ற உணர்தலில் ஸ்வரூப முந்தன்தன்மையில் 
அஸ்மிதத்தில் தோன்றுகின்ற தானென்றவுள் ளுணர்ச்சியில் 
எதிலுமுள்ள நோக்கம்தன்னில் அமைந்திருக்கும் தொடர்பினில் 
புலனைவெல்ல தேவைஇவை யாவின்மீதில் சம்யமம்

ग्रहणस्वरूपास्मितावयार्थवत्त्वसंयमातिन्द्रिय जयः ॥४७॥
grahaṇa-svarūpa-asmitā-avaya-arthavattva-saṁyamāt-indriya jayaḥ ||47||
Meditation (samyama) on the process of perception, its actual form, your I-ness, and the purpose of your life engenders mastery (jaya) over the senses. ||47||

grahana (ग्रहण, grahaṇa) = process of perception
svarupa (स्वरूप, svarūpa) = own form; own essence
asmita (अस्मिता, asmitā) = I-ness; individuality
anvaya (अन्वय, anvaya) = connectedness; connection
arthavattva (अर्थवत्त्व, arthavattva) = purposefulness; function
sanyama (संयम, saṁyama) = deep contemplation; meditation
indriya (इन्द्रिय, indriya) = organs of perception
jayah (जयः, jayaḥ) = mastery

Thanks to:

--------------------------------------------------------------------------------------------
49. ததோ மனோஜவித்வம் விகரண பாவ:
பிரதான ஜயஸ்ச

ஐந்து புலன்களை ஆட்சிக்கு கொண்டு வருவதன் மூலம் மனதின் இயக்கம் மேம்படும்

புலனில்மனது அழுந்திடாத திறமைவந்து சேர்வதால் 
உலகும்வெல்ல லாகுது சித்தம்தெளிவு கொள்ளுது 
மனதின்வேகம் கூடுது மேன்மைகொண்டு இயங்குது 
தினத்தில்கொள்ளும் யோகத்துக்கு மிகவுமிது உதவுது

ततो मनोजवित्वं विकरणभावः प्रधानजयश्च ॥४८॥
tato mano-javitvaṁ vikaraṇa-bhāvaḥ pradhāna-jayaś-ca ||48||
This results in quickness of mind, liberation from the sense organs, and mastery (jaya) over matter. ||48||

tatah (ततः, tataḥ) = thence
mano (मनो, mano) = mind; understanding
javitvam (जवित्वं, javitvaṁ) = quickness; speed
vikarana (विकरण, vikaraṇa) = tool; here: the sense organs
bhavah (भावः, bhāvaḥ) = liberation; independence
pradhana (प्रधान, pradhāna) = matter; nature; creation
jaya (जय, jaya) = mastery
cha (च, ca) = and

Thanks to:
--------------------------------------------------------------------------------------------
50. சத்வ புருஷன் யதாக்யாதி மாத்ரஸ்ய ஸர்வ பாலா 
திஷ்டாத்ருவம் சர்வ ஞாத்ருத்வம்ச

உலகம் மாயம் என்றும் உண்மை மறைந்து உய்யும் என்றும் அறிதல் வேண்டும்

உண்மைஎது மாயமெது என்றுநீயும் அறியணும் 
திண்மையான முயற்சிகொண்டு சம்யமம்நீ புரியணும் 
உலகம்வேறு *உனதுவேறு என்பதைநீ உணரணும் 
பிறகுபரந்த அண்டஉணர்வும் காணும்திறனும் பெருகிடும்

*உனது = உன்னுடைய ஆன்மா

सत्त्वपुरुषान्यताख्यातिमात्रस्य सर्वभावाधिष्ठातृत्वं सर्वज्ञातृत्वं च ॥४९॥
sattva-puruṣa-anyatā-khyātimātrasya sarva-bhāvā-adhiṣṭhātṛtvaṁ sarva-jñātṛtvaṁ ca ||49||
Mastery of feelings and omniscience can only be attained through knowledge of the difference between the physical world and the true self. ||49||

sattva (सत्त्व, sattva) = purity; one of the three gunas (गुणस्, guṇas); the physical world
purusha (पुरुष, puruṣa) = the true self
anyata (अन्यत, anyata) = difference; distinction between
khyati (ख्याति, khyāti) = knowledge; embodiment
matra (मात्र, mātra) = only; merely
sarva (सर्व, sarva) = all
bhava (भाव, bhāva) = feelings; emotions
adhishthatritvam (अधिष्ठाटृत्वं, adhiṣṭhāṭṛtvaṁ) = mastery; supremacy; omnipotence
sarva (सर्व, sarva) = all
jnatritva (ज्ञातृट्व, jñātṛṭva) = knowledge; wisdom
cha (च, ca) = and

Thanks to:
--------------------------------------------------------------------------------------------
51. தத்வைராக்யாதபி தோஷ பீஜக்ஷயே கைவல்யம் 

உலகை மறந்த அண்ட உணர்வினையும் துறக்க கைவல்யம் கிட்டும்


உலகம்மறந்த தாகத்தோன்றும் அண்டமான உணர்விலே
விலகியேத்தான் தனித்திருக்கும் ஆன்மமந்த நினைவிலே
பழகியதனை பிடித்தம்கொண்டு இருந்திடாமல் துறந்திடு
அழகியதாம் விழுமியதாம் கைவல்யமே கொண்டிடு


तद्वैराग्यादपि दोषबीजक्षये कैवल्यम् ॥५०॥
tad-vairāgyād-api doṣa-bīja-kṣaye kaivalyam ||50||
Non-attachment (vairagya) even from that omiscience destroys the foundation of all dysbalances (dosha) and results in liberation (kaivalya). ||50||

tad (तद्, tad) = (acc. sg. n. /nom. sg. n.) that
vairagyat (वैराग्यत्, vairāgyat) = (ab. sg. n. from vairagya (वैराग्य, vairāgya)) desirelessness; non-attachment; dispassion
api (अपि, api) = (conj./prep.) even
dosha (दोष, doṣa) = (iic.) impurity; dysbalances
bija (बीज, bīja) = (iic.) seed; foundation
kshaye (क्षये, kṣaye) = (loc. sg. m./acc. du. n./nom. du. n./loc. sg. n. /acc.du. f./nom. du. f . from kshaya (क्षय, kṣaya)) destruction
kaivalyam (कैवल्यम्, kaivalyam) = (acc. sg. n./nom. sg. n. from kaivalya (कैवल्य, kaivalya)) liberation; enlightenment

Thanks to:
--------------------------------------------------------------------------------------------
52. ஸ்தான்யுபநி மந்த்ரணே சங்கஸ்மயாகரணம்
புணர நிஷ்ட பிரசங்காத்


யோக முன்னேற்ற அனுபவங்களும் விபூதிகளும் விளைவிக்கும் மேலுலக தேவர்களின் ஈர்ப்பை தவிர்க்க வேண்டும்

உலகமாயை விலகயோகப் பயன்கள்யாவும் உதவுமே 
பிறக்கும்விண்ணின் உலகம்வாழும் தேவர்களின் அழைப்புமே 
சிறக்கும்வண்ணம் இருப்பதாகத் தோன்றுகின்ற தாயினும் 
பிணைப்பதாக அமையும்அதனை விலக்கவேண்டும் முன்னமே

स्थान्युपनिमन्त्रणे सङ्गस्मयाकरणं पुनरनिष्टप्रसङ्गात् ॥५१॥
sthāny-upa-nimantraṇe saṅga-smaya-akaraṇaṁ punar-aniṣṭa-prasaṅgāt ||51||
When the celestial beings beckon, the yogi should avoid forming any attachment to this complacency, since this contact can reinstate undesirable attachment. ||51||

sthani (स्थानि, sthāni) = celestial beings
upanimantrane (उपनिमन्त्रणे, upanimantraṇe) = invitation; on being invited by
sanga (सङ्ग, saṅga) = acceptance; attachment
smaya (स्मय, smaya) = pride; enjoyment
akaranam (अकरणं, akaraṇaṁ) = he should avoid; to refuse
punah (पुनः, punaḥ) = again
anishta (अनिष्ट, aniṣṭa) = undesirable
prasangat (प्रसण्गात्, prasaṇgāt) = as a result of the contact

Thanks to:

--------------------------------------------------------------------------------------------
53. க்ஷண தத்க்ரமயோ: சம்யமாத்
விவேக ஜம் ஞானம்

காலத்தின் மிகச் சிறிய பொழுதிலும் (கணத்தில்) அதன் தொடர்ச்சியிலும் செய்யும் சம்யமத்தால் விவேகம் உண்டாகிறது

காலம்தொட்டு தொடர்ச்சியாக நின்றிருக்கும் காலமும் 
ஞாலம்பட்டு நடந்திருக்கும் யாவுக்குமே சாட்சியாம் 
காலக்கணக்கில் சிறியதான கணத்தினிலே தொடர்ச்சியாய் 
கொள்ளுகின்ற சம்யமத்தால் எழுவதே விவேகமாம்

क्षणतत्क्रमयोः संयमात् विवेकजंज्ञानम् ॥५२॥
kṣaṇa-tat-kramayoḥ saṁyamāt vivekajaṁ-jñānam ||52||
Meditation (samyama) on the moments and their succession give rise to knowledge (jnana) that is born from discernment (viveka). ||52||

kshana (क्षण, kṣaṇa) = (iic.) moment; instant; infinitesimal time
tat (तत्, tat) = (acc. sg. n./nom. sg. n. from tad (तद्, tad)) its
kramayoh (क्रमयोः, kramayoḥ) = (loc. du. m./g. du. m. from krama (क्रम, krama)) sequence; succession
sanyamat (संयमात्, saṁyamāt) = (abl. sg. m. from sanyama (संयमा, saṁyamā)) through contemplation; meditation
viveka (विवेक, viveka) = (iic.) discernment
jam (जम्, jam) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n., ja (ज, ja)) born of; from
jnanam (ज्ञानम्, jñānam) = (acc. sg. n. / nom. sg. n. from jnana (ज्ञान, jñāna)) knowledge

Thanks to:

--------------------------------------------------------------------------------------------
54. ஜாதி லட்சண தேனாசரண்யதானவச்சேதாத் 
துவ்ய யோஸ்தத: ப்ரதிபத்தி

ஜாதி (பிரிவு-Category) , லட்சண ( வரையறுக்கும் அம்சங்கள்-Attributes ), இடம் (position in space) ஆகியவற்றைக் கொண்டும் அறிய முடியாததை விவேகம் கொண்டு அறியலாம்

யோகம்கொண்ட முன்னேற்றத்தால் விபூதிகை கூடுது 
விவேகத்தால் அறியும்திறன் வேகமாகக் கூடுது 
ஜாதிலட்சண இடமுமான மூன்றில்விளங் காதது 
மீதியின்றித் தெரியும் கொண்ட விவேகத்தால் தானது

जातिलक्षणदेशैः अन्यतानवच्छेदात् तुल्ययोः ततः प्रतिपत्तिः ॥५३॥
jāti-lakṣaṇa-deśaiḥ anyatā-anavacchedāt tulyayoḥ tataḥ pratipattiḥ ||53||
This gives rise to knowledge of distinction between two similar objects that are not normally distinguishable on the basis of their category, characteristics, or position in space. ||53||

jati (जाति, jāti) = genus; species; category; type
lakshana (लक्षण, lakṣaṇa) = distinguishing feature
desha (देश, deśa) = position in space
anyata (अन्यत, anyata) = difference; distinction between
anavachchhedat (अनवच्छेदात्, anavacchedāt) = resulting from the absence of distinguishing features
tulyayoh (तुल्ययोः, tulyayoḥ) = of two similar objects; the same category or class
tatah (ततः, tataḥ) = thereby; from that
pratipattih (प्रतिपत्तिः, pratipattiḥ) = knowledge; understanding

Thanks to:
--------------------------------------------------------------------------------------------
55. தாரகம் சர்வ விஷயம் சர்வதா விஷயமக்ரமம் 
சேது விவேகஜம் ஞானம்

விவேக ஞானத்தால் அறிய முடியாத பொருளோ, உயிரோ, காலமோ ஒன்றுமில்லாத தாகிறது, மற்றும் அவைகளைக் கடந்ததாகிறது.

விவேகம் தந்தஞானமே உயர்ந்ததான போதமே 
மேகம்போக்கும் காற்றுமாய் ஒளியைக்கூட்டி நிற்குமே 
விவேகஞானக் கண்ணினால் அறிந்திடாத ஒன்றுமாய் உயிரோபொருளோ காலமோ இருப்பதாக இல்லையே

तारकं सर्वविषयं सर्वथाविषयमक्रमंचेति विवेकजं ज्ञानम् ॥५४॥
tārakaṁ sarva-viṣayaṁ sarvathā-viṣayam-akramaṁ-ceti vivekajaṁ jñānam ||54||
Knowledge that is born of discernment transcends all objects, all beings and all time. ||54||

tarakam (तारकम्, tārakam) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n., taraka (तारक, tāraka)) to transcend
sarva (सर्व, sarva) = (iic.) all
vishayam (विषयम्, viṣayam) = (acc. sg. m. from vishaya (विषय, viṣaya)) object
sarvatha (सर्वथा, sarvathā) = (adv.) all beings; all time; entirely
akramam (अक्रमम्, akramam) = (impft.1 sg.1, from a kram (अक्रम्, a-kram)) beyond succession; non-sequential; simultaneous
cha (च, ca) = (conj.) and
iti (इति, iti) = (prep.) completed; end
viveka (विवेक, viveka) = (iic.) discernment
jam (जम्, jam) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n., from ja (ज, ja)) born of viveka; born of discernment
jnanam (ज्ञानम्, jñānam) = (acc. sg. n. / nom. sg. n. from jnana (ज्ञान, jñāna)) knowledge

Thanks to:
--------------------------------------------------------------------------------------------
56. சத்வ புருஷயோ: சுத்தி சாம்யே கைவல்ய மிதி

இயற்கை கொண்ட உலகத்திற்கும் தன்னுணர்வான ஆன்ம உண்மைக்கும் உள்ள வேறுபாடு அறியப் படும்போது விடுதலை/ மோட்சம்/கைவல்யம் கிட்டுகிறது

உலகம்உண்மை அற்றது மாயத்தன்மை உற்றது 
விலகும்யாவும் கொண்டதனால் நிரந்தரத்தை அற்றது 
நிலவும்வானும் இருப்பதுபோல் இறைவனுடன் உறைவது 
உலவும்உடலில் உறையும்ஆன்மம் என்றஞானப் பலனது 
விளங்குகின்ற நெஞ்சினறி யாமையாவும் விலகுது 
துலங்குவதாய்த் தோன்றுமொளி கைவல்யமே தானது

sattva-puruṣayoḥ śuddhisāmye kaivalyam ||55||
Liberation (kaivalya) comes when parity between the physical world and the true self (purusha) is attained. ||55||

sattva (सत्त्व, sattva) = (iic.) purity; one of the three gunas (गुणस्, guṇas); the physical world
purushayoh (पुरुषयोह्, puruṣayoh) = (loc. du. m./g. du. m. from purusha (पुरुष, puruṣa)) consicousness; true nature; true self
shuddhi (शुद्धि, śuddhi) = (iic.) purity
samye (साम्ये, sāmye) = (acc. du. n./nom. du. n./loc. sg. n./loc. sg. m./acc. du. f./nom. du. f. from samya (साम्य, sāmya)) sameness; similarity
kaivalyam (कैवल्यम्, kaivalyam) = (acc. sg. n./nom. sg. n., kaivalya (कैवल्य, kaivalya)) liberation

Thanks to:
--------------------------------------------------------------------------------------------

இத்துடன் விபூதி பாதம் நிறைவு பெறுகிறது

31 - 40    
  



No comments:

Post a Comment