Saturday, November 5, 2011

கைவல்ய பாதம் சூத்ரம் 11 - 20

ENGLISH

11.ஹேது பலாச்ர யா லம்பனை: சங்க்ருதத்வாதே
ஷாம பாவே ததபாவ:

ஆசையின் (சம்ஸ்காரங்களின் ) மூல காரணமான அறியாமையை விலக்க விளைவும் அழிகிறது.

மனிதன்கொண்ட ஆசைதானே துன்பத்துக்குக் காரணம் 
எனினுமந்த ஆசைதோன்ற எதுதானிங்கு காரணம் ?
நினைத்திருக்க வேண்டுமிதனை நெஞ்சில் நாமுமேதினம் 
மனதினறி யாமைபோக்க ஆசைபோகு மக்கணம்

हेतुफलाश्रयालम्बनैःसंगृहीतत्वातेषामभावेतदभावः ॥११॥
hetu-phala-āśraya-ālambanaiḥ-saṁgṛhītatvāt-eṣām-abhāve-tad-abhāvaḥ ||11||
The continuity of wish and reality arises from supporting factors and external objects. If they disappear, the continuity arising from wish and reality likewise disappears. ||11||

hetu (हेतु, hetu) = cause
phala (फल, phala) = effect; fruit
ashraya (आश्रय, āśraya) = support; based on
alambanaih (आलम्बनैः, ālambanai) = support; object; contact
sangrihitatvat (संगृहीतत्वात्, saghītatvāt) = interconnection
esham (एषाम्, eām) = of these
abhave (अभावे, abhāve) = on the disappearance of; to not exist
tad (तद्, tad) = of them
abhavah (अभावः, abhāva) = (nom. from abhava (अभाव, abhāva)) disappear

Thanks to:

-----------------------------------------------------------------------------------------------
12.அதீதானாகதம் ஸ்வரூபதோ அஸ்த்யத்வ
பேதாத் தர்மாணாம்

சம்ஸ் காரங்களை அழிப்பதன் மூலம், வருங்காலத்தை நேர்ப்படுத்த இயலும் என்பதால் கடந்த காலம் என்பது முற்றிலும் உண்மை அற்றது என்று எண்ணலாகாது. கடந்த காலமும் (சம்ஸ்காரங்கள் ) வருமங்காலமும் தமக்கே உரிய குணங்களுடன் (attributes) நிகழ் காலத்துடன் இணைந்து இயங்குகின்றன. மோக்ஷம் வரையில், இருக்கும் நிஜமாகவே அவை விளங்குகின்றன. உண்மை காணும் ஞானம் பெறும் போது அவையும் உண்மையில் கலந்த உண்மையாகின்றன.

பூனைக்கண்ணை மூடுவதால் உலகும்இருண்டு போகுமா?
யானைசறுக்கி விழுவதனால் பலத்தில்குறைந்த தாகுமா?
கடந்தகாலம் மறந்ததினால் இல்லாமலே போகுமா ?
கிடந்தகோலம் உள்ளவரை நிலைத்திருக்கும் நிஜமுமாய்
உடைத்திருக்கும் தன்மைகொண்டு தொடர்ந்திருக்கும் ஒன்றுமாய்

கிடந்த கோலம் உள்ளவரை = அறியாமையில் கிடக்கும் வரையில் (Deep Slumber induced by ignorance)

अतीतानागतं स्वरूपतोऽस्तिअध्वभेदाद् धर्माणाम् ॥१२॥
atīta-anāgataṁ svarūpato-'sti-adhvabhedād dharmāṇām ||12||

The past and future exist inherently. Tasks (dharma) arise from the changes. ||12||
atita (अतीत, atīta) = past
anagatam (अनागतं, anāgata) = future
svarupatah (स्वरूपतः, svarūpata) = its own form
asti (अस्ति, asti) = exist; remain
adhva (अध्व, adhva) = path
bhedat (भेदात्, bhedāt) = owing to the variableness
adhva bhedat (अध्वभेदात्, adhva-bhedāt) = owing to differing paths; changes
dharmanam (धर्माणां, dharmāā) = (from Dharma (धर्म, Dharma)) dharma; fulfillment of an obligation; inherent characteristics

Thanks to:
-----------------------------------------------------------------------------------------------

13. தேவ்யக்த சூட்சுமா குணாத்மான:

சம்ஸ்காரங்களின் குணங்கள் சூக்குமமாகவோ, வெளியில் தெரியும்படியோ இருக்கின்றன.

தொடர்ந்திருக்கும் சம்ஸ்காரங்கள் குணங்கள்கொண்டு இயங்குது 
சூக்குமமாய் இருக்குது பௌதீகமாய்த் தெரியுது 
வாக்கும்மனமும் இல்லாலயத்தில் ஒளிரும்ஆன்ம மானது 
போக்கிலாமல் குணமில்லாமல் சாட்சியாக நிற்குது

போக்கில்லாமல் = அசைவுறாது , செயலில் படாது, நிலையான

ते व्यक्तसूक्ष्माः गुणात्मानः ॥१३॥
te vyakta-sūkṣmāḥ guṇa-atmānaḥ ||13||
These characteristics are manifest or subtle, physical or spiritual ||13||

te (ते, te) = (acc. du. n./nom. du. n./nom. pl. m./acc. du. f./nom. du. f. from tad (तद्, tad); g. sg./dat. sg. from tvad (त्वद्, tvad)) they; these
vyakta (व्यक्त, vyakta) = (iic.) manifest
sukshmah (सूक्ष्माः, sūk) = (nom. pl. m./acc. pl. f./nom. pl. f. from sukshma (सूक्ष्म, sūkma)) subtle
guna (गुण, gua) = (iic.) the three basic elements of matter; physical
atmanah (अत्मानः, atmāna) = (nom. pl. m. from atman (आत्मन्, ātman)) the absolute; spiritual

Thanks to:

-----------------------------------------------------------------------------------------------

14.பரிணாமைகத் வாத் வஸ்து தத்வம்

உலகப் பொருள்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை உடையதாக பரிணமிக்கிறது. அனைத்துக்கும் பஞ்ச பூதங்களே மூலப் பொருளான போதிலும்  ஒவ்வொன்றும் உருவாகும் முறையின் பாற்பட்டதாக தனித்தன்மையுடன் அமைகிறது.

உலகில்தோன்றும் யாவும்விளங்கும் தனித்திருக்கும் தன்மையால்
சிலதுஒன்றித் தோன்றிடினும் இருக்கும்பிரிக்கும் தன்மையாம் 
அலகில்சேரும் பஞ்சபூதம் தானும்மூலம் ஆயினும் 
உலகில்பிறக்கும் முறையில்மாற்றம் தனித்ததன்மை அளித்திடும்

परिणामैकत्वात् वस्तुतत्त्वम् ॥१४॥
pariṇāma-ikatvāt vastu-tattvam ||14||
The uniqueness of change comprises the essence of everything. ||15||

parinama (परिणाम, pariāma) = (iic.) change
ekatvat (एकत्वात्, ekatvāt) = (abl. sg. n. from ekatva (एकत्व, ekatva)) unique
vastu (वस्तु, vastu) = (acc. sg. n./nom. sg. n.) object
tattvam (तत्त्वम्, tattvam) = (acc. sg. n./nom. sg. n. from tattva (तत्त्व, tattva)) essence; truth; particularity

Thanks to:

-----------------------------------------------------------------------------------------------

15.வஸ்து சாம்யே சித்தபோதாத் தயோர்
விபக்க: பந்த்தா:

உலக வஸ்துக்கள் யாவும் ஒருபடித்தான முறையில்(homogeneous) நடுநிலையில்(neutral) இருக்கின்றன. பொருட்களின் அழகும் விகாரமும் பார்ப்பவரால் / உணர்பவரால் வேறு வேறாகப் பார்க்கவோ / உணரவோ படுகின்றன.

உண்ணும்உணவைச் சுவைத்துச் சிலரும் ஆஹாஓஹோ என்கிறார் 
இன்னும்சிலரோ அதனைவிடுத்து விலகிதூரம் ஓடுறார்
உணவில்குறையா உண்பார்குறையா அறியநீயும் முயல்கையில் 
உணவிலில்லை வேறுபாடு உணர்விலேதான் தெரியுது 
உலகம்கூட ஓர்நிலையாய் எப்போதுமே இருக்குது 
உணர்வினாலே பொருளின்தன்மை மாறியதாய்த் தெரியுது 

वस्तुसाम्ये चित्तभेदात्तयोर्विभक्तः पन्थाः ॥१५॥
vastusāmye citta-bhedāt-tayorvibhaktaḥ panthāḥ ||15||
That which is mutable in us (chitta) takes various paths to the same object, perception of which thus differs from one person another . ||15||

vastu (वस्तु, vastu) = (acc. sg. n./nom. sg. n.) object
samye (साम्ये, sāmye) = (acc. du. n./nom. du. n./loc. sg. n./loc. sg. m./acc. du. f./nom. du. f. from samya (साम्य, sāmya)) sameness
chitta (चित्त, citta) = (iic.) mind; spirit; all that is mutable in human beings
bhedat (भेदात्, bhedāt) = (abl. sg. m. from bheda (भेद, bheda)) change; diversity
tayoh (तयोः, tayo) = (loc. du. n./g. du. n./loc. du. m. g. du. m./loc. du. f. from tad (तद्, tad)) whose
vibhaktah (विभक्तः, vibhakta) = (nom. sg. m. from vibhakta (विभक्त, vibhakta)) different; separation
panthah (पन्थाः, panthā) = (nom. sg. m. from pathin (पथिन्, pathin)) traveler; paths

Thanks to:

-----------------------------------------------------------------------------------------------
16.ந சைகசித்த தந்தரம் வஸ்து
தத பிரமாணகம் ததா கிம்ஸ்யாத்

உலக வஸ்துக்கள் யாவும் ஒரு சிலரின் உணர்தலை மட்டும் நம்பி இருப்பதில்லை. அவ்வாறாயின் அவர்கள் உணர்தலை இழந்தால் என்னாகும்?. அப்பொருட்கள் இல்லாமல் போய் விடும். அவ்வாறு நடப்பதில்லையே. இயற்கையும் / மாயையும் இறைவன் படைப்பு. மனித கற்பனையின் படைப்பல்ல.

நினைவில்நமது கற்பனையில் ஆயிரமாய்த் தோன்றுது 
நினவுகளைய அவையும்மறைந்து காணாமலேப் போகுது
இயற்கைபடைத்த உலகைச்சிலரின் சித்தம் செய்ததென்பது 
உண்மையென்னில் உணர்வுமறையப் பொருள்மறைந்தா போகுது?

न चैकचित्ततन्त्रं चेद्वस्तु तदप्रमाणकं तदा किं स्यात् ॥१६॥
na caika-citta-tantraṁ cedvastu tad-apramāṇakaṁ tadā kiṁ syāt ||16||
Nor does an object depend on that which is mutable in human beings; for if it did, then what would happen to the object if it were not perceived? ||16||
na (, na) = (part.) not
cha (, ca) = (conj.) and
eka (एक, eka) = (iic. from ekachitta (एकचित्त, ekacitta)) one
chitta (चित्त, citta) = mind; spirit; all that is mutable in human beings;
tantram (तन्त्रम्, tantram) = (tantram (तन्त्रम्, tantram) = acc. sg. n./nom. sg. n. from tandra (तन्द्र, tandra)) dependent
chet (चेत्, cet) = (conj. from ched (चेद्, ced)) is
vastu (वस्तु, vastu) = (acc. sg. n./nom. sg. n.) object; thing
tat (तत्, tat) = (acc. sg. n./nom. sg. n. from tad (तद्, tad)) thatz
apramanakam (अप्रमाणकं, apramāaka) = (iic. from apramana (अप्रमाण, apramāa)) not recognized; not perceived
tada (तदा, tadā) = (adv.) then
kim (किम्, kim) = (acc. sg. n./nom. sg. n. from ka (, ka)) what
syat (स्यात्, syāt) = (adv.) happen

Thanks to:

-----------------------------------------------------------------------------------------------
17.தாது பராகா பேட்சித்வாச்
சித்தஸ்யவஸ்து ஞாதா ஞாதம்

ஒரு பொருளின் பிறப்பு மனதைப் பொறுத்ததல்ல எனினும் (போன சூத்திரம்) , மனம் ஒரு பொருளைப் பற்றுவதும் பற்றாததும் மனநிலையையும் அந்தப் பொருள் மனதில் ஏற்படுத்தும் போதுமான பதிவையும் பொறுத்தே அமைகிறது.

வெள்ளைத்தாளில் வெள்ளைவண்ண எழுத்துஎங்கே தெரியுது
தெள்ளியதாய்த் தெரியும்கருப்பு வண்ணமையின் எழுத்தது 
உள்ளத்திலே பொருள்புகுந்து எண்ணம்கொண்டு நிற்பதும் 
உள்ளத்திலே அதுகொடுக்கும் வண்ணம்கொண்டு அமைந்திடும்

तदुपरागापेक्षित्वात् चित्तस्य वस्तुज्ञाताज्ञातं ॥१७॥
tad-uparāga-apekṣitvāt cittasya vastu-jñātājñātaṁ ||17||
However, whether an object, situation or person is understood or misjudged depends on the emotional preconceptions and the expectations of that which is mutable in human beings. ||17||
tad (तद्, tad) = that; whose
uparaga (उपराग, uparāga) = coloring; to be near; excite; cause; provoke
tad uparaga (तदुपराग, tad-uparāga) = emotional preconception
apekshitvat (अपेक्षित्वात्, apekitvāt) = our expectations; to expect
chittasya (चित्तस्य, cittasya) = for or through chitta, all that is mutable in human beings;
vastu (वस्तु, vastu) = object; situation; person
jnata (ज्ञात, jñāta) = known; recognized
ajnatam (अज्ञातं, ajñāta) = not known; misjudged

Thanks to:
-----------------------------------------------------------------------------------------------
18.சதா ஞாதாஸ் சித்த வருத்தையஸ்தத் ப்ரபோ:
புருஷஸ்யா பரிணாமித்வாத்

ஆன்மா அறியாமையால் விளையும் மயக்கத்துக்கப்பாற் பட்டது. சுதந்திரம் உடையது.

கிளியும்தங்கம் எனினும்கூட்டில் இருந்திடவா விரும்புது 
வெளியில்சென்று வானில்பறந்து சுதந்திரமாய்த் திரியுது 
மேலிருந்து நிலைத்திருக்க கீழ்நடப்பு தெரியுது
கீழ்நடக்கும் எதுவுமதை பாதிக்காமல் போகுது 

உள்ளிருக்கும் ஆன்மம்என்றும் சுதந்திரம்தான் கொள்ளுது
உள்ளம்கொள்ளும் பற்றுக்கெல்லாம் அப்பாலேதான் நிற்குது
வெள்ளம்போல துன்பம்வரினும் கலக்கம் எங்குகொள்ளுது 
தெள்ளதெளிய இந்தஉண்மை ஞானம்ஒளிரத் தெரியுது

सदाज्ञाताः चित्तव्र्त्तयः तत्प्रभोः पुरुषस्यापरिणामित्वात् ॥१८॥
sadājñātāḥ citta-vrttayaḥ tat-prabhoḥ puruṣasya-apariṇāmitvāt ||18||
The true self can always observe the misconceptions (vritti) in that which is mutable in human beings, because this pure self (purusha) is not in motion. ||18||
sada (सदा, sadā) = always
jnatah (ज्ञाताः, jñātā) = known
chitta (चित्त, citta) = all that is mutable in human beings; mind; spirit
vrittayah (वृत्तयः, vttaya) = waves; thought waves, misconceptions
tat prabhoh (तत्प्रभोः, tat-prabho) = from one’s master; master
purushasya (पुरुषस्य, puruasya) =~~ = the true self; drashtu
~skt~apari.naamitvaat~~ = owing to immutability

Thanks to:
-----------------------------------------------------------------------------------------------
19. ந தத் ஸ்வாபாஸம் த்ருச்யத்வரத்

மனமாது, தானே எந்த பொருளையும் உணர முடியாது. உயிரின் துணை கொண்டு தான் செயல் பட முடியும்.

நெய்யும்திரியும் கொண்டதனால் விளக்கு எரியமுடியுமா?
நெருப்பில்லாமல் தானொளிர்ந்து ஒளிகொடுத்து நிற்குமா ?
விருப்புவெறுப்பு கொண்டுமனம் ஒன்றைப்பற்றி நிற்பதும் 
உயிர்கொடுக்கும் ஒளியினாலே மட்டுமென்றே அறிந்திடு

न तत्स्वाभासं दृश्यत्वात् ॥१९॥
na tat-svābhāsa dśyatvāt ||19||
As that which is mutable in human beings is not inherently identifiable, it is a perceptible object. ||19||
na (, na) = (part.) not
tat (तत्, tat) = (acc. sg. n./nom. sg. n. from tad (तद्, tad)) whose
sva (स्वा, svā) = (nom. sg. f. from sva (स्व, sva)) itself
bhasam (भासम्, bhāsam) = (acc. sg. m. from bhasa (भास, bhāsa)) illuminating; luminous; identifiable; recognizable
sva bhasam (स्वाभासम्, svā-bhāsam) = self illuminating; inherently recognizable
drishyatvat (दृश्यत्वात्, dśyatvāt) = perceptibility; a perceptible object

Thanks to:

-----------------------------------------------------------------------------------------------
20. ஏக சமே சோபாயானவதாரணம்

மனம் சுய ஒளி (இறை சக்தி ) அற்றது . அதனால் அது தன்னையும் தனக்கு வெளியே உள்ள எதனையும் தானாக அறிந்து கொள்ள இயலாது.

இருள்படாத சூரியன் ஒளிர்ந்திடாத போதிலே
ஒளிர்ந்திடாது சந்திரன் மயக்கிடாது மனதையே 
ஒளிர்ந்திடாத மனத்துமே செயல்படாது தன்னிலே 
அறிந்திடாது தன்னையும் பயன்படாது தானுமாய் 

एक समये चोभयानवधारणम् ॥२०॥
eka samaye c-obhaya-an-avadhāraṇam ||20||
Nor can both the mind and the illuminating process be cognized simultaneously. ||20||
eka (एक, eka) = one
samaye (समये, samaye) = situation; moment
eka samaye (एकसमये, eka-samaye) = simultaneously
cha (, ca) = and
ubhaya (उभय, ubhaya) = both
an (अन्, an) = not
avadharanam (अवधारणं, avadhāraa) = recognize; understand; carry out

Thanks to:
-----------------------------------------------------------------------------------------------

இந்த சூத்திரங்களில் கூறப்படுவதால் சாரம்:
ஆசையின் (சம்ஸ்காரங்களின் ) மூல காரணமான அறியாமையை விலக்க விளைவும் அழிகிறது.

சம்ஸ் காரங்களை அழிப்பதன் மூலம், வருங்காலத்தை நேர்ப்படுத்த இயலும் என்பதால் கடந்த காலம் என்பது முற்றிலும் உண்மை அற்றது என்று எண்ணலாகாது. கடந்த காலமும் (சம்ஸ்காரங்கள் ) வருமங்காலமும் தமக்கே உரிய குணங்களுடன் (attributes) நிகழ் காலத்துடன் இணைந்து இயங்குகின்றன. மோக்ஷம் வரையில், இருக்கும் நிஜமாகவே அவை விளங்குகின்றன. உண்மை காணும் ஞானம் பெறும் போது அவையும் உண்மையில் கலந்த உண்மையாகின்றன.

சம்ஸ்காரங்களின் குணங்கள் சூக்குமமாகவோ, வெளியில் தெரியும்படியோ இருக்கின்றன.

உலகப் பொருள்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை உடையதாக பரிணமிக்கிறது. அனைத்துக்கும் பஞ்ச பூதங்களே மூலப் பொருளான போதிலும்  ஒவ்வொன்றும் உருவாகும் முறையின் பாற்பட்டதாக தனித்தன்மையுடன் அமைகிறது.

உலக வஸ்துக்கள் யாவும் ஒருபடித்தான முறையில்(homogeneous) நடுநிலையில்(neutral) இருக்கின்றன. பொருட்களின் அழகும் விகாரமும் பார்ப்பவரால் / உணர்பவரால் வேறு வேறாகப் பார்க்கவோ / உணரவோ படுகின்றன.

உலக வஸ்துக்கள் யாவும் ஒரு சிலரின் உணர்தலை மட்டும் நம்பி இருப்பதில்லை. அவ்வாறாயின் அவர்கள் உணர்தலை இழந்தால் என்னாகும்?. அப்பொருட்கள் இல்லாமல் போய் விடும். அவ்வாறு நடப்பதில்லையே. இயற்கையும் / மாயையும் இறைவன் படைப்பு. மனித கற்பனையின் படைப்பல்ல.

ஒரு பொருளின் பிறப்பு மனதைப் பொறுத்ததல்ல எனினும் (போன சூத்திரம்) , மனம் ஒரு பொருளைப் பற்றுவதும் பற்றாததும் மனநிலையையும் அந்தப் பொருள் மனதில் ஏற்படுத்தும் போதுமான பதிவையும் பொறுத்தே அமைகிறது.

ஆன்மா அறியாமையால் விளையும் மயக்கத்துக்கப்பாற் பட்டது. சுதந்திரம் உடையது.

மனமானது, தானே எந்த பொருளையும் உணர முடியாது. உயிரின் துணை கொண்டு தான் செயல் பட முடியும்.

    1 - 10                              21 - 34                         

<<< முதல் பக்கம் >>>

No comments:

Post a Comment