Saturday, November 5, 2011

சாதன பாதம் சூத்ரம் 11 - 20



ENGLISH


11. த்யான ஹேயாஸ் தத்வ்ருத்தய: ||

த்யானம் தடை அறுக்கும்
அறியாமை, ஆணவம், விருப்பு, வெறுப்பு, மரண பயம் (உடல் பற்று) ஆகிய துன்பங்கள் செயல் முறையில் மேற்கொள்ளும் த்யானத்தினால் மறைந்து போகக்கூடியவை.

வீரஅனுமன்  செய்தது கடலைத்தாண்டிச் சென்றது 
கோரராவ ணன்சபை தனிலுமிருக்கை கொண்டது 
சீரும்தீயில் பட்டவால் இலங்கைசுட்டெ ரித்தது 
நெறியின்தடைகள் யாவையும் அவனும்வென்றே வந்தது
ஈரநெஞ்சில் ராமனின் த்யானம்கொண்டே தானது 
dhyāna heyāḥ tad-vṛttayaḥ ||11||
Medidating (dhyana) on that which we wish to overcome eliminates such misconceptions that arise from human mutability (vritti). ||11|
dhyana (ध्यान, dhyāna) = meditation, contemplation
heyah (हेयाः, heyāḥ) = (nom. pl. m. from heyah (हेयः, heyaḥ)) to avoid; to overcome
tad (तद्, tad) = whose; these
vrittayah (वृत्तयः, vṛttayaḥ) = (from vritti (वृत्ति, vṛtti)) thought waves; waves; chitta turbidity

Thanks to:
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-2/item/dhyana-heyah-tad-vrittayah-11/

--------------------------------------------------------------------------------------------------
12. க்லேச மூல: கர்மாசயோ
த்ருஷ்டாத்ருஷ்ட ஜன்ம வேதநீய ||

இந்த தடைகளே செயல்களுக்கும் அவற்றின்  விளைவுகளுக்கும் விளை நிலமாகின்றன. சில  விளைவுகள் செயலைத் தொடர்ந்து உடனே வருபவையாகவும் , சில  பின்விளைவுகளாகவும் ஏற்படுகின்றன.

வாயிலிட்ட உணவுசெரிக்க நேரம்சற்று பிடிக்குது 
தீயிலிட்ட கற்பூரமோ உடனேபற்றி எரியுது 
செயலின்விளைவும் உடனேசிலது செயலைத்தொடர்ந்து வருகுது  
வயலின்விளைச்சல் போலச்சிலது பின்னாலேதான் தோன்றுது ..! 

क्लेशमूलः कर्माशयो दृष्टादृष्टजन्मवेदनीयः ॥१२॥
kleśa-mūlaḥ karma-aśayo dṛṣṭa-adṛṣṭa-janma-vedanīyaḥ ||12||
Obstacles (kleshas) are the breeding ground for tendencies that give rise to actions and the consequences (karma) thereof. Such obstacles are experienced as visible or invisible obstacles. ||12||

klesha (क्लेश, kleśa) = obstacles on the spiritual path
mulah (मूलः, mūlaḥ) = (nom. from mula (मूल, mūla)) root; cause; basis
karma (कर्म, karma) = actions and consequences
ashayah (अशयः, aśayaḥ) = (nom. from ashaya (अशय, aśaya)) tendencies; holdover
drishta (दृष्ट, dṛṣṭa) = visible; present
adrishta (अदृष्ट, adṛṣṭa) = concealed; future
janma (जन्म, janma) = life; world; domain
vedaniyah (वेदनीयः, vedanīyaḥ) = (nom. vedaniya (वेदनीय, vedanīya)) to experience; to take notice
Thanks to :
--------------------------------------------------------------------------------------------------
13. ஸதி   மூலே தத்விபாகோ 
ஜாத்யாயுர் போகா : ||

கர்ம வினை
கர்ம வினையைப் பொறுத்தே ஒருவனின் வாழ்க்கை அமைகிறது

சிற்பிசெய்யும் சிலையினழகு உளியின்திறனில் இருக்குது
வெற்றிதோல்வி  போரில்வீரன் செயலதனால் அமையுது 
பெற்றிருக்கும் இன்பதுன்பம் வாழ்வில்நமக்கு அமைவது 
பற்றிநாமும் செய்திருக்கும் கருமத்தாலே தானது..!

सति मूले तद्विपाको जात्यायुर्भोगाः ॥१३॥
sati mūle tad-vipāko jāty-āyur-bhogāḥ ||13||
The outcome of these circumstances is manifested by a person’s station in life, longevity, and the extent to which they achieve happiness. ||13||

sati (सति, sati) = (loc. sg. m. /loc.sg.n. sat) to be there
mule (मूले, mūle) = (loc. sg. n. /acc. du. n./nom. du. n. from mula (मूल, mūla)) root; cause; basis
tat (तत्, tat) = (acc. sg. n./nom. sg. n.) whose
vipaka (विपाक, vipāka) = (nom. sg. m.) fruit; result; outcome
jati (जाति, jāti) = (i. sg. f.) class; caste; social class; station in life; type; quality
ayuh (आयुः, āyuḥ) = (nom. from ayu (आयु, āyu)) life; life span; duration
bhogah (भोगाः, bhogāḥ) = (nom. from bhoga (भोग, bhoga)) enjoyment; happiness
--------------------------------------------------------------------------------------------------
14. தே உற்லாத பரிதாப பலா :
புண்யா புண்ய ஹெதுத் வாத்

செயலும் விளைவும்
கர்ம விளைவுகள் நன்றும் தீதுமாக இருப்பது செய்யும் கர்மத்தை பொருத்தது. நற்செயல்கள் நல்விளைவையும் தீவினைகள் தீய விளைவுகளையும் அளிக்கின்றன.

நெல்லைவிதைக்க விளையும்பயிரும் நெல்லாயங்கே  ஆகுது
தொல்லைகொடுக்கும் முள்ளும்கூட விதையினால்தான் தோன்றுது 
இல்லையின்பம்  என்றுநாமும் கவலைகொண்டு அழுவதும்
தில்லைநாதன் பாதம்கண்டு நெஞ்சினிலே மகிழ்வதும் 
இல்லைவேறு மொன்றால்நமது வினையின் விளைச்சல்தானது..!

सति मूले तद्विपाको जात्यायुर्भोगाः ॥१३॥
sati mūle tad-vipāko jāty-āyur-bhogāḥ ||13||
The outcome of these circumstances is manifested by a person’s station in life, longevity, and the extent to which they achieve happiness. ||13||

sati (सति, sati) = (loc. sg. m. /loc.sg.n. sat) to be there
mule (मूले, mūle) = (loc. sg. n. /acc. du. n./nom. du. n. from mula (मूल, mūla)) root; cause; basis
tat (तत्, tat) = (acc. sg. n./nom. sg. n.) whose
vipaka (विपाक, vipāka) = (nom. sg. m.) fruit; result; outcome
jati (जाति, jāti) = (i. sg. f.) class; caste; social class; station in life; type; quality
ayuh (आयुः, āyuḥ) = (nom. from ayu (आयु, āyu)) life; life span; duration
bhogah (भोगाः, bhogāḥ) = (nom. from bhoga (भोग, bhoga)) enjoyment; happiness
Thanks to:
--------------------------------------------------------------------------------------------------
15. பரிணாம தாப சம்ஸ்காரது :
கினகர் குண வருத்தி விரோதாச்ச  
து : க்கமேவ சர்வம் விவேகின :

வினைகள் யாவும் துன்பமே
உண்மையான அறிவுடையோருக்கு  யாவும் துன்பமே. ஏனெனில் செய்யும் கர்மம் யாவும் அவற்றின்  பதிவுகளை  (விளைவுகளாக) விட்டுச் செல்கின்றன.


கர்மம்கடந்து நிற்கும்நிலையில் மட்டும்தோன்றும் ஞானமிந்த 
கர்மம்கொடுக்கும் இன்பம்கூட துன்பமாகக் காணுமிந்த  
மர்மமுணர்ந்து யோகம்கொண்டு சாட்சியாக நிற்குமந்த
மாந்தர்யாரும் ஞானம்கொண்ட யோகியர்தான் பார்மனதே ..! 

परिणाम ताप संस्कार दुःखैः गुणवृत्तिविरोधाच्च दुःखमेव सर्वं विवेकिनः ॥१५॥
pariṇāma tāpa saṁskāra duḥkhaiḥ guṇa-vṛtti-virodhācca duḥkham-eva sarvaṁ vivekinaḥ ||15||
Suffering is caused by change in the outside world, as well as impressions, desires (samsakra), misconceptions (vritti) and conflict. Suffering is omnipresent for those who have the capacity to differentiate. ||15||

parinama (परिणाम, pariṇāma) = change
tapas (तापस्, tāpas) = desire
sanskara (संस्कार, saṁskāra) = impressions
duhkhaih (दुःखैः, duḥkhaiḥ) = (nom. from duhkha (दुःख, duḥkha)) pain; suffering
guna (गुण, guṇa) = the three basic elements of matter; nature
vritti (वृत्ति, vṛtti) = waves; thought waves, misconceptions; veil; lack of clarity;
virodha (विरोधा, virodhā) = resistance; conflict
cha (च, ca) = and
duhkham (दुःखम्, duḥkham) = (acc. from duhkha (दुःख, duḥkha)) pain; suffering
eva (एव, eva) = even; only
sarvam (सर्वं, sarvaṁ) = all; everywhere; always
vivekinah (विवेकिनः, vivekinaḥ) = (nom. from vivekina (विवेकिन, vivekina)) for those who have developed the capacity to make distinctions
Thanks to:
--------------------------------------------------------------------------------------------------
16. ஹேயம் துக்கம நாகதம்

பின்விளைவுகளை தடுக்கலாம்   
இனி வர இருக்கும் துன்பங்களை தடுக்க முடியும்

கோணலாகச் சுட்டபானை மீண்டும்நேராய் மாறுமோ 
ஆனாலின்று செய்யும்பானை நேராய் அமைக்கலாகுமே 
வினைகளின்று செய்வதிலே கொள்ளும் நல்லமுயற்சியால்
பனையெனவே  நாளைதோன்றும் விளைவை மாற்றலாகுமே..!


வெந்தசோறை அரிசியாக மீண்டும்மாற்றல் இயலுமா 
வந்ததுன்பம் வந்திராமல்  செய்திருத்தல் ஆகுமா
துன்பம்நாளை சேர்ந்திடாமல் தடுக்கும்வண்ண மாவது
இன்றுசெய்யும் செயலைநீயும் நல்லதாகச் செய்வது..!

हेयं दुःखमनागतम् ॥१६॥
heyaṁ duḥkham-anāgatam ||16||
But future suffering can be avoided. ||16||
heyam (हेयम्, heyam) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n. from heya (हेय, heya)) be avoided
duhkham (दुःखम्, duḥkham) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n. from duhka (दुःक, duḥka)) pain; suffering
anagatam (अनागतम्, anāgatam) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n. from anagata (अनागत, anāgata)) future
Thanks to:
--------------------------------------------------------------------------------------------------
17. த்ரஷ்ட்ரி த்ருச்யயோ :
ஸம்யோகோ ஹேய ஹேது :

துன்பத்தின் மூல காரணம்
காணப்படும் பொருளுடன் ஐக்கியப்படுத்தி பார்ப்பதால் துன்பம் ஏற்படுகிறது. பற்றே துன்பத்தின் மூல காரணம்.  Eg. இது என் உடம்பு. நான் பெரியவன். இதில் என் என்பது புறப்பற்று. நான் என்பது அகப்பற்று.

இதுஎனது அதுஉனது என்பதனால் துன்பமே
எதுவுமந்த ஆண்டவனே என்றால்விளையும் இன்பமே
உடலும்புலனும் தொடரும்மனதும்  நானேஎன்ற நினைவது
விடலுமற்ற நினவதாலே துன்பம்தானே விளையுது..!

द्रष्टृदृश्ययोः संयोगो हेयहेतुः ॥१७॥
draṣṭṛ-dṛśyayoḥ saṁyogo heyahetuḥ ||17||
For identificaiton of the true self (drashtu) with that which is mutable is the cause of suffering. ||17||

drashtri (द्रष्टृ, draṣṭṛ) = (iic.) the seer; he who perceives; the true self; drastu
drishyah (दृश्यः, dṛśyaḥ) = (loc. du. m./g. du. m./loc. du. n./g. du. n) that which is seen; experienced
sanyoga (संयोग, saṁyoga) = (nom. sg. m.) unity; bond; identification
heya (हेय, heya) = (iic.) that which should be avoided
hetuh (हेतुः, hetuḥ) = (nom. sg. m. from hetu (हेतु, hetu)) cause
Thanks to:
--------------------------------------------------------------------------------------------------

18. பிரகாச க்ரியா ஸ்திதி  சீலம்
பூதேந்த்ரியாத் மகம் 
போகா பவர் கார்த்தம் த்ருச்யம்

பூவுலகில் காணும் பொருட்கள் சத்துவ, ராஜச, தாமச குணங்களால் இனம் பிரிக்கக் கூடியவை.  உருவுற்றும் உருவற்ற சூக்குமமாகவும்  விளங்குமவை குறுகிய கால  சிற்றின்பத்தையோ , விடுதலை அளிக்கும் பேரின்பத்தையோ அளிப்பதாக இருக்கின்றன.


புவியில்தோன்றும் பொருளது மூன்றுகுணத்தில் அடங்குது 
சத்வரஜஸ தமசமென்று அந்தமூன்று மிருக்குது 
சிலதுஉருவம் கொண்டது சிலதுவடிவம் அற்றது 
சிலதுஇந்த வாழ்வினில் உலகஇன்பம் தருவது 
சிலதுநெஞ்சில் சென்றுதேடும்  பரமனையும் காட்டுது ..! 

प्रकाशक्रियास्थितिशीलं भूतेन्द्रियात्मकं भोगापवर्गार्थं दृश्यम् ॥१८॥
prakāśa-kriyā-sthiti-śīlaṁ bhūtendriya-ātmakaṁ bhoga-apavarga-arthaṁ dṛśyam ||18||
Objects and situations in the physical world can be characterized by purity (sattva), unrest (rajas), or inertia (tamas); they are physical or etheric and result in short term pleasure or long term redemption ||18||

prakasha (प्रकाश, prakāśa) = illumination; purity; light; sattva
kriya (क्रिया, kriyā) = action; activity; rajas
sthiti (स्थिति, sthiti) = stability; steadiness; tamas
shila (शील, śīla) = characteristics
bhuta (भूत, bhūta) = five elements; physical
indriya (इन्द्रिय, indriya) = sense organ; organs of perception; sense; etheric
atmakam (आत्मकं, ātmakaṁ) = such that
bhoga (भोग, bhoga) = pleasure; enjoyment
apavarga (अपवर्ग, apavarga) = liberation; fulfillment; redemption
artham (अर्थं, arthaṁ) = purpose; sense; goal
drishyam (दृश्यम्, dṛśyam) = that which is seen; perceptible; objects
--------------------------------------------------------------------------------------------------
19.  விசேஷா விசேஷ லிங்கமாத்ரா லிங்கானி குண பர்வாணி : ||

தோன்றி தோன்றா முக்குணம் 
இந்த முக்குணங்கள் (சத்துவ, ராஜச, தாமச ) வரையறுக்கப்படுபவையாகவும்(உருவம் கொண்டவை) , வரையறைக்குட்படாதவையாகவும் (அருவமாக) விளங்குகின்றன.


தொழிலில்தெய்வம் மூன்றது குணமும்அதுபோல் மூன்றது 
தெய்வம்மண்ணில் அவதரிக்க உருவம்கொண்டு தோன்றுது 
வரையரைக் கடங்கிடாத சூக்குமத்தின் அருவது
இதனைப்போன்றே குணங்கள்மூன்றும் அருஉருவா யிருக்குது..!

विशेषाविशेषलिङ्गमात्रालिङ्गानि गुणपर्वाणि ॥१९॥
viśeṣa-aviśeṣa-liṅga-mātra-aliṅgāni guṇaparvāṇi ||19||
Physical objects exhibit the following states: determinable; unspecific; symbolic; beyond symbols ||19||


vishesha (विशेष, viśeṣa) = (iic.) special; specific; different
avishesha (अविशेष, aviśeṣa) = (iic.) unspecific; undefined; indistinguishable
linga (लिङ्ग, liṅga) = (iic.) symbol
matra (मात्र, mātra) = (nom. sg. f.) reproducible; expressible
linga matra (लिङ्गमात्र, liṅga-mātra) = symbolic
alingani (अलिङ्गानि, aliṅgāni) = (acc. pl. n./nom. pl. n. from alinga (अलिङ्ग, aliṅga)) lacking a symbol; beyond symbols
guna (गुण, guṇa) = (iic.) the three basic elements of matter; nature
parvani (पर्वाणि, parvāṇi) = (acc. pl. n./nom. pl. n. from parvan (पर्वन्, parvan)) developmental levels; states; step

Thanks to:
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-2/item/vishesha-avishesha-linga-matra-alingani-gunaparvani/

--------------------------------------------------------------------------------------------------
20. த்ரிஷ்டா த்ருசிமாத்ரா கந்தோபி ப்ரத்ய அணுபக்ய : ||

பார்ப்பவர், பார்க்கப்படும் பொருள், பார்வை என்ற மூன்றில் பார்ப்பவரே சுதந்திரமுடையவர். மற்ற இரண்டும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுகின்றன.



ஆட்சிசெய்யும்  மனதில்தோன்றும் காட்சியிலே  மூன்றடா
காணும்செயலும் காட்சிப்பெருளும் காண்பவரும் தானடா
காட்சியிலே செயலும்பொருளும் நிலையினாலே திரிவது
சாட்சியாகக்  காணுமாத்மா  சுதந்திரமாய் அமையுது 




द्रष्टा दृशिमात्रः शुद्धोऽपि प्रत्ययानुपश्यः ॥२०॥
draṣṭā dṛśimātraḥ śuddho-'pi pratyaya-anupaśyaḥ ||20||
Only the true self (drashtu) sees; it is immutable, although seeing is based on accurate perception. ||20||

drashta (द्रष्टा, draṣṭā) = the seer; he who perceives; the true self; drashtu
drishi (दृशि, dṛśi) = seeing; the seeing principle
matrah (मात्रः, mātraḥ) = only
shuddha (षुद्ध, ṣuddha) = immutable; pure
api (अपि, api) = although
pratyaya (प्रत्यय, pratyaya) = accurate perception
anupashyah (अनुपश्यः, anupaśyaḥ) = (nom. from anupashya (अनुपश्य, anupaśya)) appears to see with; seeing is based on
Thanks to:
--------------------------------------------------------------------------------------------------

சாதனையின் தடைகளை களைய தியானம் உதவும் என்றும்,இந்த தடைகளே வினைகளுக்கு வினை விளைவுகளுக்கும் காரணமாக இருப்பதையும் அந்த கர்ம வினைகளைப் பற்றியும் பேசுகிறார். துன்பங்களுக்கு மூல காரணம் பற்று எனவும் அந்த பற்று உண்டாகக் காரணமாய் இருக்கும் முக்குணங்களைப் பற்றியும் பேசுகிறார்.அன்றியும் ஆத்மாவின் சுதந்திர மாற்றமில்லாத் தன்மையை சூ.20ல் சொல்கிறார் 

PREVIOUS                                                                                  NEXT

<<< முதல் பக்கம் >>>

No comments:

Post a Comment