Saturday, November 5, 2011

சாதன பாதம் சூத்ரம் 21 - 29


ENGLISH



21. ததர்த்த ஏவ திருஸ்யஸ் யாத்மா
ஆத்மா சாட்சியே (ஆத்மாவின் பற்றற்ற தன்மை )
எதிலும் படாத ஆத்மா சாட்சி பூதமாக மட்டும் உள்ளது
அனைத்தையும் ஆத்மாவாகக் காண்பது தான் பற்றற்ற தன்மை 

உலகில்காணும் காட்சியாவும் கொள்ளனுப  வங்கள்யாவும்
புலனைக்கொண்டு உணர்வது ஆன்மமென்று கொள்வது
கலந்தவறி யாமையால்  வந்தபொய்மை தானது 
விலகிநிற்கும் ஆன்மம்வெறும்   சாட்சியாய்த் தானுள்ளது

तदर्थ एव दृश्यस्यात्मा ॥२१॥
tadartha eva dṛśyasya-ātmā ||21||
Physical objects can only be deemed to such if perceived by the true self (atma) ||21||

tad (तद्, tad) = whose
artha (अर्थ, artha) = purpose; goal
eva (एव, eva) = alone; only
drishyasya (दृश्यस्य, dṛśyasya) = the seen; prakriti; creation; cosmos
atma (आत्मा, ātmā) = being; nature; self; true self; drastu

Thanks to:
 -------------------------------------------------------------------------------------------------

 22. க்ருதார்த்தம் ப்ரதி நாஸ்தம் 
அபி அனாஸ்தம் தட் அன்ய சாதாரணத்வாத்

அனைத்தையும் ஆத்மாவாகக் காணும் பற்றற்ற தன்மை ஏற்பட்டபிறகு அந்த ஒருமை ஜீவாத்மாவுக்கு வந்த பிறகும் , ப்ரக்ருதி தன்ணனிலும் வேறுபட்டது என்ற உணர்வு ஜீவாத்மாவைப் பொறுத்த வரையில் மறைந்து விட்டாலும் , ப்ரக்ருதி மறையவில்லை. அதன் பொதுவான தன்மையால் ( மாயையின் ஆட்சியால்) அது மற்ற ஜீவன்களுக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இதை உணர்ந்த ஞானிகள் (ராமகிருஷ்ணர் ,ரமணர்,காஞ்சி முனிவர் போன்றவர்கள்) நம்முடைய பார்வைக்கு பிரகிருதியின் தொடர்புடன் நாம் இருப்பது போலத் தெரிகிறார்கள்.வெளியில் மனிதனாகவும் உள்ளே முற்றும் உணர்ந்த இறைவனாகவும் உடலுடன் இருக்கும் வரை காட்சியளிக்கிறார்கள்.
நம்மைப் போல நமக்காக இருக்கிறார்கள், நமைக் காக்க இருக்கிறார்கள்.

புலனின்பிடியை விட்டவர் பலனில்பற்று அற்றவர்
புலனின்பட்ட நினைவுகள் எதுவுமறவே  அற்றவர்
எனினும்  தங்கும்சூக்கும வடிவதான அதிர்வுகள்
மனிதஉலகில்  மற்றவர் உணர்வதாக  விளைவுகள்

कृतार्थं प्रतिनष्टंप्यनष्टं तदन्य साधारणत्वात् ॥२२॥
kṛtārthaṁ pratinaṣṭaṁ-apy-anaṣṭaṁ tadanya sādhāraṇatvāt ||22||
Once an object has fulfilled its purpose, it does not disappear but instead remains in existence as such for others; for the object is valid for all. ||22||

krita (कृट, kṛṭa) = completed
artham (अर्थं, arthaṁ) = purpose; sense; goal
prati (प्रति, prati) = for
nashtam (नष्टम्, naṣṭam) = destroyed; non-existent
apy (अप्य्, apy) = although
anashtam (अनष्टं, anaṣṭaṁ) = not destroyed; existing; remaining in existence
tat (तत्, tat) = than that
anya (अन्य, anya) = other; different
sadharanatvat (साधारनत्वात्, sādhāranatvāt) = for it is universal; universality

-------------------------------------------------------------------------------------------------

23. ஸ்வஸ்வாமி சக்த்யோ:
ஸ்வரூபோபலப்தி ஹேது:
ஸம்யோக: ||

இயற்கையில் இயைந்திருக்கவே இறைக்காட்சி பெறமுடியும். 
தன்னைப் படைத்தவன் படைத்த இயற்கையை உணர்ந்து அதனுடன் இயந்திருப்பது, தன்னை உணர மிகவும் இன்றியமையாதது.
 
வெள்ளைத்தாளில் எழுதும் மையும் கருமையானதாகுமே 
கொடியவாளும்  அடங்கும்கிள்ளை மென்மையான பேச்சிலே
நேரும்எதிரும் சேரவேண்டும் மின்னின்சக்தி தோன்றவே 
பாரும்உயிரும் சேரவேண்டும் இறையின்காட்சி தோன்றவே   

** பார் = உலகம் / இயற்கை

இயற்கையைச் சொல்வது மாயைஎன்று 


உயிர்  சக்தியாம்ஆன்மத்தை உண்மைஎன்று
இரண்டுமே இருப்பது ஒன்றுககொன்று
முரண்டிடத்  தெரிவது உண்மைஅன்று   
வெளுத்திட்ட  தாளினில் எழுத்தைசென்று
எழுதிடும் மைவண்ணம்  கருப்பேஅன்றி
தாளினில் இயைந்திட்ட வெண்மைஅன்று
பழுத்ததாய் முதிர்ந்திட்ட சித்தம்சென்று
முழுவதாய் கலந்திட இயற்கைநன்று 
எழுவதாயத் தோன்றிடும் தீபம்ஒன்று 
தொழுவதாய் ஆகிடும் சஹஸ்ரம்சென்று  

स्वस्वामिशक्त्योः स्वरूपोप्लब्धिहेतुः संयोगः ॥२३॥
svasvāmi-śaktyoḥ svarūp-oplabdhi-hetuḥ saṁyogaḥ ||23||
The sole purpose of linking the mutable with the extant is to recognize the true enduring form. ||23||

sva (स्व, sva) = their own; here: that which is mutable; chitta; prakriti
svami (स्वामि, svāmi) = master; the true self; drashtu, atma
shaktyoh (शक्त्योः, śaktyoḥ) = (from shakti (शक्ति, śakti)) power; energy, force, the mutable self; chitta
svarupa (स्वरूप, svarūpa) = own form; true nature; true form
upalabdhi (उपलब्धि, upalabdhi) = to experience; to occur; to manifest
hetuh (हेतुः, hetuḥ) = (nom. from hetu (हेतु, hetu)) cause; reason; purpose
sanyogah (संयोगः, saṁyogaḥ) = (nom. from sanyoga (संयोग, saṁyoga)) unity; bond; identification

Thanks to:

-------------------------------------------------------------------------------------------------
 24. தஸ்ய ஹேதுர்  அவித்யா 

உடலைத் தான் எனக் கருதுவது ,அதாவது ஆன்மாவாகக் கருதுவது அறியாமையால் விளைவது. 

நீரில்தன்னைக் கண்டசிம்மம் வேறாய்எண்ணிக் கொள்ளுது
துயிலின்கனவில் கொண்டதுன்பம் மருளக்கூடச் செய்யுது
போன்றதாகும் உடலைப்புலனை ஆன்மாவாகக் கொள்வது
அறியாமையால் வந்ததென்று சூத்திரமும் சொல்லுது

तस्य हेतुरविद्या ॥२४॥
tasya hetur-avidyā ||24||
The root cause of identification with the mutable is a lack of insight (avidya). ||24||

tasya (तस्य, tasya) = (g. sg. n./g. sg. m. from tad (तद्, tad)) whose
hetuh (हेतुः, hetuḥ) = (nom. sg. m. from hetu (हेतु, hetu)) cause
avidya (अविद्या, avidyā) = (nom. sg. f.) ignorance; confusion; lack of insight

Thanks to:
-------------------------------------------------------------------------------------------------

25 ததபாவாத் சம்யோக வாலோ 
ஹாநம் தத்ருசே: கைவல்யம் ||

அறியாமை நீங்கியதும் உடலை ஆன்மாவாக நினைக்கும் உடற் பற்றும் விலகுகிறது 
___________
இருட்டறையில் சிறியவிளக்கும்  இருட்டைக்கணத்தில் போக்குது 
துவண்டமலரும் கதிரவனைக் காணமலர்ச்சி கொள்ளுது
 மனதில்உறங்கும் ஆணவத்தின் இருளகலும் போதினில்
உலகம்தன்னில் கொண்டமோகம் நீங்கித்தன்னில்  போகுது

तदभाबात्संयोगाभावो हानं तद्दृशेः कैवल्यम् ॥२५॥
tad-abhābāt-saṁyoga-abhāvo hānaṁ taddṛśeḥ kaivalyam ||25||
When a lack of insight (avidya) disappears, this identification likewise disappears. Once this identification has completely disappeared, liberation (kaivalya) of the true self (drashtu) has occurred. ||25||

tad (तद्, tad) = whose
abhava (अभाव, abhāva) = to overcome; to disappear
sanyoga (संयोग, saṁyoga) = unity; bond; identification
hana (हान, hāna) = reliquish; cease
tat (तत्, tat) = that; which; whose
drisheh (दृशेः, dṛśeḥ) = the seer
kaivalyam (कैवल्यम्, kaivalyam) = (acc. from kaivalya (कैवल्य, kaivalya)) liberation; redemption

Thanks to:

-------------------------------------------------------------------------------------------------
26 விவேகக்யா த்ரவிப்லவா 

ஹானோபாய :||

விவேகம் தெளிவைக் கொடுத்து சாதனையை இலக்கை நோக்கிச் செலுத்தும் 

பகுத்தறிதல் என்பது அன்னப்பறவை பாலும்நீரும் பிரிக்குமறிவைப் போன்றது
தொகுத்தறிவுஎன்பது மலரின்தேனை வண்டுகூட்டில் தொகுத்துச்சேர்த்தல் போன்றது
பகுத்தறிவும்தொகுத்தறிவும் சேர்விவேகமானது தேனும்பாலும் சேர்ந்தினிக்கும் பெருத்தறிவுசேர்க்குது நல்லபாதைகாட்டுது..!

विवेकख्यातिरविप्लवा हानोपायः ॥२६॥
viveka-khyātir-aviplavā hānopāyaḥ ||26||
The capacity to make distinctions (viveka) and uninterrupted insight are the path to this goal. ||26||

viveka (विवेक, viveka) = (iic.) capacity to make distinctions; differentiation
khyatih (ख्यातिः, khyātiḥ) = (nom. sg. f. from khyati (ख्याति, khyāti)) insight; understanding
a viplava (अविप्लव, a-viplava) = uninterrupted; steady
hana (हान, hāna) = goal; end
upayah (उपायः, upāyaḥ) = (nom. from upaya (उपाय, upāya)) means
hanopayah (हनोपायः, hanopāyaḥ) = (nom. from hanopaya (हनोपाय, hanopāya)) means to an end

Thanks to:
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-2/item/viveka-khyatir-aviplava-hanopayah-26/
-------------------------------------------------------------------------------------------------

27. தஸ்ய சப்தத்தா ப்ராந்தபூமி:

பிரக்ஞ்ஜா: ||

ஒருவருடைய அறிவு ஏழு படிகளை உடையது

Śrī Patañjali clarified that in developing the discriminative insight, one moves 
through seven stages. It does not come overnight. One develops it step-bystep.
(OR)
The realization of this [difference] at the highest stage is sevenfold [viz. a) kârya vimukti: 1. everything is known, 2. nothing remains to be known, 3. the kleça's are overcome, 4. the viveka is attained; b) citta-vimukti: 5. the buddhi has attained its purpose, 6. the guṇa's are defeated, 7. the samâdhi is accomplished].

இந்த சூத்திரத்தில் உள்ள ஏழு  பல விதமாக உரை காணப்படுகிறது. சிலர் ஏழு சக்கரங்களைக் குறிப்பிடுகின்றனர். சிலர் அஷ்டாங்க யோகத்தின் முதல் ஏழு நிலைகளைக் குறிப்பதாகக் கூறுகின்றனர்.எட்டாவது நிலையான சமாதியில் இலக்கு எட்டப்படுகிறது.
இன்னும் சிலர் கார்ய முக்தி சித்த முக்தி என்பவற்றை எட்டும் ஏழு நிலைகள் என்கிறார்கள்.


காலம்கடக்கும்  நாளுமேழு ஞாலம்கிடக்கும்  கடலுமேழு 
மனம்மயக்கும்  சுரமுமேழு சூலதாரிநீலகண்டன் கொண்டதான எண்ணுமேழு
ஞானம்கொள்ளும் வண்ணம்நிறைந்து  அறிவுகொள்ளப் பாதையாகச்
பதஞ்சலியார் சொல்லுகின்ற யோகம்கொண்ட படியுமேழு 

तस्य सप्तधा प्रान्तभूमिः प्रज्ञ ॥२७॥
tasya saptadhā prānta-bhūmiḥ prajña ||27||
This path to insight has seven steps. ||27||

tasya (तस्य, tasya) = this
saptadha (सप्तधा, saptadhā) = seven-fold
pranta (प्रान्त, prānta) = path; edge
bhumih (भूमिः, bhūmiḥ) = ranking; level
prajna (प्रज्ञा, prajñā) = insight; recognition
In his Yoga Sutra, Patanjali (पतञ्जलि, Patañjali) says that there are many paths to the state of yoga and that each person needs to choose the path that suits him or her. Patanjali (पतञ्जलि, Patañjali) points out paths for particularly intelligent people, for individuals who have unusual physical strength, for people for whom devotion comes easily, and for people who are already very close to achieving a state of yoga [YS I.19 ff].
Patanjali (पतञ्जलि, Patañjali)’s eight-fold path is a path for individuals who do not have all of the aforementioned abilities – in other words a kind of “Yoga for Dummies” for people who are not particularly intelligent, physically strong, spiritual, and so on. But the eight-fold path is a systematic and direct path to yoga for such individuals nonetheless. The various yoga traditions hold differing views as to whether the eight elements of the eight-fold path are a series of steps, limbs that are on a par with each other, or a series of parallel practices.
This controversy notwithstanding, the eight-fold path tradition is based, literally, on the aforementioned statement from ~’s Yoga Sutrani (योग सूत्रानि, Yoga Sūtrāni). In ashtanga yoga (अष्टाङ्गयोग, aṣṭāṅga-yoga), the eight limbs are regarded as a series of interrelated steps along a path. Just as a monk climbs a narrow ladder to a temple rung by rung, so does a yogi (योगी, yogī) only take the next step along his spiritual path after having passed through the previous stage, and thus reaches a state of yoga by passing through the eight stages in succession.

 Thanks to:
-------------------------------------------------------------------------------------------------

28. யோக அங்க அனுஷ் நாத 
சுத்திக்ஷயே ஞான தீப்திரா 
விவேகக் யாதே: ||

அட்டாங்க யோகம் பட்டங்கு பலனே

பரந்தஉலகின் பகுதியாவும் தெளிவுறவே நாம்அறிய
அமைந்திருக்கும் திசைகளாக இருப்பதிங்கு எட்டது
படர்ந்துசென்று புலன்தனிலே படர்வதான மனதின்பட்டு
கிடந்துராமல்  காக்கும்யோகம் கொண்டவங்கம் எட்டது


இருக்கப் புலனில் திட்டென
பறக்கும் மனது சிட்டென  
இறுக்கப் பிடிக்க சட்டென 
 இருக்குப் படிக்கல் எட்டென
சிறக்கப் பழக கட்டென*
துரத்தும் துன்பம்  விட்டன
துலங்கும் சித்தம் பட்டென
விளங்கும்   ஞானம் சட்டென..!

योगाङ्गानुष्ठानादशुद्धिक्षये ज्ञानदीप्तिराविवेकख्यातेः ॥२८॥
yoga-aṅga-anuṣṭhānād-aśuddhi-kṣaye jñāna-dīptir-āviveka-khyāteḥ ||28||
Through practice of these limbs of yoga, impurity is overcome and wisdom and an enduring capacity to make disinctions are achieved. ||28||
yoga (योग, yoga) = yoga
anga (आङ्ग, āṅga) = limb; part
anushthanad (अनुष्ठानाद्, anuṣṭhānād) = (from anushthana (अनुष्ठान, anuṣṭhāna)) exercise; practice
ashuddhi (अशुद्धि, aśuddhi) = impurity
kshaye (क्षये, kṣaye) = overcome; reduce; destroy
jnana (ज्ञान, jñāna) = knowledge; wisdom
diptih (दीप्तिः, dīptiḥ) = (from dipti (दीप्ति, dīpti)) to illuminate; to radiate; light
a (आ, ā) = limitless; endless
viveka (विवेक, viveka) = the ability to make distinctions
khyateh (ख्यातेह्, khyāteh) = (from khyati (ख्याति, khyāti)) enduring; uninterrupted; continuous

Thanks to:

-------------------------------------------------------------------------------------------------
 29. யம, நியம, ஆஸன, ப்ராணாயாம, பிரத்தியாகார, தாரணா, த்யான,

ஸமாதயோஸ்ஷ்டாவங்கானி: || 

ENGLISH



அட்டாங்க யோகம்
இயமமென்றுரைப்பது அற்றது  விலக்குது 
நியமமென்றுரைப்பது வரையறை செய்வது
ஆசனமாவது இருக்கையின் தோரணை
ப்ராணாயாமம்தான்    மூச்சதன் ஓர்துணை
பிரத்யாகாரமோ   புலன்படும்  பேரணை
தாரணையாவது ஒருமுகச் சிந்தனை
த்யனமதாவது காட்டிடும் பரமனை
சமாதியிலேதான்  முடியுமுன்   சாதனை..!

"Love All Serve All"   , "Help Evert Hurt Never"


என்னும் இரண்டு மஹா வாக்யங்களைச் சிறந்த வழிகாட்டுதலாக ஸ்ரீ சத்ய சாய் பாபா கூறியுள்ளார்.
இந்த வழிகாட்டுதல்களை வாழ்க்கையில் மேற்கொள்ள ஆரம்பித்தால் சித்த சுத்தி ஏற்பட்டு சித்தம் வ்ருத்திகள் இல்லாமல் , நிர்மலமாய் ஆகி ஆன்ம உணர்வில் திளைக்க வழி செய்கிறது.


இந்த வழிகாட்டுதல்கள் இந்த சூத்திரத்தில் சாதகன் மேற்கொள்ள வேண்டுவனவாக கூறப்படும் யமம் , முதலான யோக சாதனைகளுக்கு அடிப்படையாக இருப்பதால் ,எளிதில் புரியக் கூடிய இந்த சாதனை ஒரு சிறந்த வரப்ரசாதமாகவே மக்கட்குலத்திற்குத் திகழ்கிறது. "மானவ சேவையே மாதவ சேவை".
यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधयोऽष्टावङ्गानि ॥२९॥
yama niyama-āsana prāṇāyāma pratyāhāra dhāraṇā dhyāna samādhayo-'ṣṭāvaṅgāni ||29||
The limbs of the eight-fold path are as follows: respect for others (yama) and yourself (niyama); harmony with your body (asana), your energy (pranayama), your thoughts (dharana), and your emotions (pratyahara); contemplation (dhyana); ecstasy (samadhi). ||29||

yama (यम, yama) = (iic.) respect for others; ethical and moral codes of conduct; codes of conduct
niyama (नियम, niyama) = respect for yourself; code of conduct vis-à-vis yourself
asana (आसन, āsana) = body posture; seat; harmony with your body
pranayama (प्राणायाम, prāṇāyāma) = breath control; harmony with vital energy
pratyahara (प्रत्याहार, pratyāhāra) = (iic.) withdrawal of the senses; harmony with emotions
dharana (धारणा, dhāraṇā) = (nom. pl. m./acc. pl. f./nom. pl. f.) concentration; harmony with thoughts
dhyana (ध्यान, dhyāna) = (iic.) contemplation; meditation
samadhayah (समाधयः, samādhayaḥ) = (nom. pl. m. from samadhaya (समाधय, samādhaya)) ecstasy; samadhi; goal of yoga; enlightenment; transcendent state
ashta (अष्ट, aṣṭa) = respect
angani (अङ्गानि, aṅgāni) = (acc. pl. n./nom. pl. n. from anga (अङ्ग, aṅga)) limbs


Thanks to:
  
-------------------------------------------------------------------------------------------------

  
மேலே கூறப்பட்ட சூத்திரங்களில் பேசப்படுவன.
ஆத்மாவின் பற்றற்ற தன்மை ,ஆத்மாவிற்கு ப்ருகிருதிக்கும் உள்ள தொடர்பு , அறியாமை மற்றும் வைராக்யம் , ஆத்மசாக்ஷத்காரம்,அஷ்டாங்க யோகம்.


-------------------------------------------------------------------------------------------------
PREVIOUS                                                                                  NEXT

<<< முதல் பக்கம் >>>

No comments:

Post a Comment