Saturday, November 5, 2011

விபூதி பாதம் சூத்ரம் 1 - 10


1. தேச பந்தஸ்ய சிதஸ்ய தார :

தாரணை 

விரைந்தெழும்பும் மனத்தைக்கட்டி ஓரிடத்தின் மீதினில் 
சிறையிற்ப்பட்ட சிலையதாக நிற்கச்செய்யும் சாதனை
இரையைக் கண்டு கூர்ந்துநிற்கும்
புலியும்கொண்ட தோரணை
போன்றதாகும் நிலையின் பட்ட 
அதனின்பெயர் தாரணை

देशबन्धः चित्तस्य धार.आ ॥१॥
deśa-bandhaḥ cittasya dhāra.ā ||1||
Harmony with your thoughts and the ability to concentrate are attained by aligning the mutable aspects of humankind with a specific subject. ||1||

desha (देश, deśa) = place; location; topic; subject
bandha (बन्ध, bandha) = binding to; holding; fixing; uniting
chittasya (चित्तस्य, cittasya) = (gen.) all that is mutable/transient in humankind; consciousness
dharana (धारणा, dhāraṇā) = concentration; focusing; directing attention

Thanks to:

--------------------------------------------------------------------------------------------

2. தத்ர ப்ரத்யயைகதானதா த்யான்

தியானம் 
தியானம் என்பது அறிந்து கொள்ள வேண்டிய பொருளை நோக்கி தொடர்ந்து செல்லும் மெய்யுணர்வாகும்.

தாரணையில் ஓரிடத்தில் நிற்குமந்த மனமது 
பேரணையில் நீரதாக நின்றிடாதோர் பொருளது
மீததனில் நோக்கியேநீ தொடர்ந்துபயணம் கொள்வது 
வேறெதுவு மில்லையதன் பெயர்தான் த்யானமென்பது

तत्र प्रत्ययैकतानता ध्यानम् ॥२॥
tatra pratyaya-ikatānatā dhyānam ||2||

Allowing your thoughts to flow in an uninterrupted stream results in contemplation (dhyana). ||2||
tatra (तत्र, tatra) = (adv.) there; then
pratyaya (प्रत्यय, pratyaya) = (iic.) notion; content of mind; presented idea; cognition
eka (एक, eka) = (iic.) one
tana (तान, tāna) = ( iic.) to flow; to rove; to migrate
ekatanata (एकतानत, ekatānata) = one continuous flow
dhyanam (ध्यानम्, dhyānam) = (acc. sg. n./nom. sg. n. from dhyana (ध्यान, dhyāna)) meditation

Thanks to:

--------------------------------------------------------------------------------------------
3. ததேவார்த்தமாத்ர நிற்பாஸம் ஸ்வரூப சூன்யமிவ சமாதி


த்யானப் பொருளின் உருவம் மறைகிறது. அதன் இயற்கையான உண்மையின் அர்த்தம் மாத்திரம் பிரகாசிக்கிறது. இது தான் சமாதி.

புலர்ந்தபொழுது எழுந்துநிற்கும் இளமையான சூரியன் 
வளர்ந்தபொழுது முதிர்ந்தபகலில் வளமையான கூரிய
ஒளியினாலே மறைதலுற்று வெள்ளமாகத் தோன்றல்போல்
பொருளின்உரு மறைந்துதோன்றும் அர்த்தமேச மாதியில்

तदेवार्थमात्रनिर्भासं स्वरूपशून्यमिवसमाधिः ॥३॥
tadeva-artha-mātra-nirbhāsaṁ svarūpa-śūnyam-iva-samādhiḥ ||3||

Insight (samadhi) occurs when only the subject matter of the orientation shines forth without any being affected by the person in question. ||3||
tad (तद्, tad) = (acc. sg. n./nom. sg. n.) thus; there; hence; now
eva (एव, eva) = (prep.) the same; actually
tada (तदा, tadā) = precisely when
artha (अर्थ, artha) = (iic.) meaning; object; subject; topic
matra (मात्र, mātra) = only; alone
nirbhasa (निर्भासा, nirbhāsā) = luminous; radiant
svarupa (स्वरूप, svarūpa) = (iic.) own form; own nature; personality; subjectivity; chitta
shunyam (शून्यम्, śūnyam) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n. from sunya (सून्य, sūnya)) empty; devoid of
iva (इव, iva) = (prep.) as if
samadhih (समाधिः, samādhiḥ) = (nom. sg. m. from samadhi (समाधि, samādhi)) samadhi; goal of yoga; state of enlightenment; transcendent state; absolute knowledge

Thanks to:
--------------------------------------------------------------------------------------------

4. த்ரயமேகத்ர சம்யம :

த்யானத்தின் அக உறுப்புகளான தாரணை, த்யானம், சமாதி இவை மூன்றையும் ஓர் பொருளின் மீது நிலை பெறச் செய்வது தான் சம்ம்.

மனதைநிறுத்தும் தாரணை அதனைச்செலுத்தும் த்யானமும்
உருமறைச் சமாதியும் தனித்துத் தோன்றிடாமலே
ர்பொருளின்  மீதுநின்று ஒருங்கிணை தலாவது
வேறுமில்லை அதனின்பெயர் ஸம்யமம்   என்றானது

त्रयमेकत्र संयमः ॥४॥
trayam-ekatra saṁyamaḥ ||4||
The three processes of dharana, dhyana, and samadhi, when taken together, are the components of meditation (samyama). ||4||
trayam (त्रयम्, trayam) = (acc. sg. n./nom. sg. n. from traya (त्रय, traya)) the three
eka (एक, eka) = one
ekatra (एकत्र, ekatra) = (adv.) together; as one; at one place
sanyamah (संयमः, saṁyamaḥ) = (nom. sg. m. from sanyama (संयम, saṁyama)) literally: completely controlled or regulated; self control; absorption; meditation; the latter stages of the eight-fold path; essence of the eight-fold path

Thanks to:

--------------------------------------------------------------------------------------------

5. தஜ்ஜயாத் ப்ரக்ஞாலோக :

இதுவரையில் காண முடியாததைக் காண்பதும் அனுபவிக்க முடியாததை அனுபவிப்பதும் தான் ஒன்றாகக் காணும் காட்சியாகவும், அனுபவம் அற்புதமாகவும் அமைகிறது 

முடவன்கால்கள் பெற்றுமலையில் ஏறிச்சென்று காண்பதும் 
சிறகுமுளைத்து பறவைவானில் பறந்துசென்று காண்பதும் 
போன்றதாகும் சம்யயத்தின் பாலின்பட்ட அனுபவம் 
அற்புதத்தின் அற்புதம் காட்டும்பரமன் பொற்பதம்

तज्जयात् प्रज्ञालोकः ॥५॥
tajjayāt prajñālokaḥ ||5||
Mastery of this meditation gives rise to absolute knowledge of all that can be perceived. ||5||

tat (तत्, tat) = (acc. sg. n./nom. sg. n. from tad (तद्, tad)) that; there; from that
jayat (जयात्, jayāt) = (abl. sg. m./abl. sg. n. from jaya (जय, jaya)) mastery
prajna (प्रज्ञा, prajñā) = (nom. sg. f. from prajna (प्रज्ञा, prajñā); nom. sg. f. from prajna (प्रज्ञ, prajña)) higher consciousness; direct knowledge; absolute knowledge
alokah (आलोकः, ālokaḥ) = (nom. sg. m. from aloka (आलोक, āloka)) all that can be perceived; light; visible


Thanks to:

--------------------------------------------------------------------------------------------

6. தஸ்ய பூமிஷு விநியோக:

தாரணையும், த்யானமும், சமாதியும் யோகத்தின் முதல் மூன்று படிகளாகும்.

தாரணையைக் கொள்ளடா த்யானம்நீயும் செய்யடா 
ஓர்முனையில் ஒன்றிநீ  சமாதிகூடி  நில்லடா 
போர்முனையாம் வாழ்வினில் வேறெதுவும் தள்ளடா 
கூடும்விரைவில் தானடா கூறும்மறையின்  பொருளடா..!

तस्य भूमिषु विनियोगः ॥६॥
tasya bhūmiṣu viniyogaḥ ||6||
This meditation is carried out in the three aforementioned successive steps. ||6||
tasya (तस्य, tasya) = (g. sg. n./g. sg. m. from tad (तद्, tad)) its; whose
bhumishu (भूमिषु, bhūmiṣu) = (loc. pl. f. from bhumi (भूमि, bhūmi)) stages; states; steps; successive
viniyogah (विनियोगः, viniyogaḥ) = (nom. sg. m. from viniyoga (विनियोग, viniyoga)) application; practice

Thanks to:
--------------------------------------------------------------------------------------------

7.த்ரயம் அந்தரங்கம் பூர்வேப்ய:

தாரணையும், த்யானமும், சமாதியும் யோகத்தின் அக உறுப்புகள் எனப்படும்.


தாரணையாம் தோரணையில் 
த்யானமதாம் ஒர்முனையில் 
கூடுமச்  சமாதியுமே 
யோகம்கொண்ட அங்கமுமாம் 

त्रयमन्तरन्गं पूर्वेभ्यः ॥७॥
trayam-antarangaṁ pūrvebhyaḥ ||7||
These three steps are more internal (anga) than the previous steps. ||7||

trayam (त्रयम्, trayam) = three
antar (अन्तर्, antar) = internal
anga (अङ्ग, aṅga) = limb; part
purvebhyah (पूर्वेभ्यः, pūrvebhyaḥ) = compared to the previous ones; relative to the previous ones

Thanks to:

--------------------------------------------------------------------------------------------

8. ததபி பகிரங்கம் நிர்பீஜ அஸ்ய:

ஞானத்தின் முன் யாவும் புறமே ஆகும்


அந்தமூன்று அங்கமும் யோகத்திலே உள்ளுமாம் 
வந்தஎண்ண மடக்கியே  பொந்தத்யான வழியிலே  
நின்றநல் சமாதியும் கொண்டதாகும் விதையுமாம்  
நின்றயாவும் நின்றிட விதைகள்யாவும் சென்றிட 
ஒன்றிலா  சமாதிமுன் அவைகள்கூடப்  புறமுமாம் 

तदपि बहिरङ्गं निर्बीजस्य ॥८॥
tadapi bahiraṅgaṁ nirbījasya ||8||
However, these three steps are still external compared to ultimate knowledge (nirbija samadhi). ||8||
tat (तत्, tat) = (acc. sg. n./nom. sg. n.) that; which
api (अपि, api) = (conj./prep.) also
bahir (बहिर्, bahir) = (adv./prep.) external
anga (अङ्ग, aṅga) = (acc. sg. n./nom. sg. n./acc. sg. m.) part; limb; step
nirbija (निर्बीज, nirbīja) = (g. sg. m./g. sg. n.) seedless (samaadhi); compared to nirbija samadhi

Thanks to:


--------------------------------------------------------------------------------------------

9. வ்யுத்தான நிரோத சம்ஸ்காரயோர அபிபவ
ப்ராதுர்பாவௌ நிரோதட்சண
சித்தஅன்வயோ நிரோதபரிணாம:

எண்ணங்களை அடக்குதல் (தோன்றாமல் அழித்தல்) நிரோதமாகும். அது பரிணமிப்பது ஆங்காரமற்ற ஓங்காரமாய்.

சீறும்அலைகள் அடங்கநீயும் செல்லவேண்டும் ஆழ்கடல்
மீறும்எண்ணம் அடங்ககொள்ளும் த்யானம்பட்டு  வீழுடல்  
உதிக்குமெண்ணம் உதைத்துநீயும் அடக்குதல்  நிரோதமாம்
உதயமாகுமுண்மைத் தோற்றம் தானற்றஓம் காரமாம்

व्युत्थाननिरोधसंस्कारयोः अभिभवप्रादुर्भावौ निरोधक्षण चित्तान्वयो निरोधपरिणामः ॥९॥
vyutthāna-nirodha-saṁskārayoḥ abhibhava-prādurbhāvau nirodhakṣaṇa cittānvayo nirodha-pariṇāmaḥ ||9||

That high level of mastery called nirodhah-parinamah occurs in the moment of transition when the rising tendency of deep impressions, the subsiding tendency, and the mutable nature of humankind (chitta) converge. ||9||
vyutthana (व्युत्थान, vyutthāna) = (iic.) disjointedness
nirodha (निरोध, nirodha) = (iic.) tranquility
sanskarayoh (संस्कारयोः, saṁskārayoḥ) = (loc. du. m./g. du. m. from sanskara (संस्कार, saṁskāra)) impression based on past experience
abhi (अभि, abhi) = (prep.)
abhibhava (अभिभव, abhibhava) = (imp. 1, sg. 2) to overcome; to disappear
praduh (प्रादुः, prāduḥ) = (adv.)
bhavau (भावौ, bhāvau) = (acc. du. m./ nom. du. m., bhava (भाव, bhāva)) to ascend; to appear
nirodha (निरोध, nirodha) = (iic.) tranquility
kshana (क्षण, kṣaṇa) = (voc. sg. m., k. sa. na.) situation; moment
chitta (चित्त, citta) = (iic.) all that is mutable in human beings; mind
anvaya (अन्वय, anvaya) = connection with; relationship
nirodha (निरोध, nirodha) = (iic.) tranquility
parinamah (परिणामः, pariṇāmaḥ) = (nom. sg. m., parinama (परिणाम, pariṇāma)) transition; change; evolution
Patanjali is referring here to the transitions between the various steps of dharana, dhyana and samadhi. After dharana, or concentration, you transition to dhyana, i.e. contemplation while in a state of nirodha-parinama. This constitutes the transition to tranquility.

Thanks to:

--------------------------------------------------------------------------------------------

10. தஸ்ய பிரசாந்த வாகிதா சம்ஸ்காராத்:

நிரோதப் பரிணாமத்தால் முன் அனுபவித்திராத அமைதி கிட்டும்

அடக்கலே நிரோதமாம் அடங்குமே விரோதமாம் 
அடக்கமே சிறந்ததாம் படும்ஒளி சிரோதமாய் 
அடங்குகின்ற ஜீவனும் உயர்விலே அமர்வதாம்  
அடங்கிடா மனம்படும் இடம்கடும்  இருள்அதாம்


तस्य प्रशान्तवाहिता संस्कारत् ॥१०॥
tasya praśānta-vāhitā saṁskārat ||10||

The tranquil flow of transition to tranquility gives rise to a new impression (samskara). ||10||


tasya (तस्य, tasya) = its (referring to nirodha parinama (निरोधपरिणाम, nirodha-pariṇāma))
prashanta (प्रशान्त, praśānta) = tranquil; undisturbed
vahita (वाहिता, vāhitā) = flow
sanskara (संस्कार, saṁskāra) = impressions resulting from repeated actions; acquired habits
Each thought creates a mental impression and the creation of new connections between the brain’s neurons, thus making previous thoughts easier to recall and more familiar. The more often a thought occurs, the more anchored its neuronal path becomes. Patanjali refers to such impressions as samskaras. Even the end point of thought, which is contemplation, creates a mental impression, thus making it ever easier for us to attain this state.

Thanks to:
--------------------------------------------------------------------------------------------

<<< முதல் பக்கம் >>>

No comments:

Post a Comment