Showing posts with label Vibhuthi Padham. Show all posts
Showing posts with label Vibhuthi Padham. Show all posts

Saturday, November 5, 2011

விபூதி பாதம் சூத்ரம் 21 - 30



ENGLISH




21. காயரூப சம்யமாதத் க்ராஹ்ய சக்தி ஸ்தம்பே
சக்ஷூஷ் ப்ரகாசா சம்யோகே எ ந்தர்த்யானம்   

மாயமாய் மறைதல்
உடல் மீது கொண்ட சரியான சம்யமத்தால் உடல் தெரியாமல் மாயமாய் மறையும் திறன் சித்தி யாகிறது 
பார்ப்பவர் கண்ணிலிருந்து பார்க்கும் திறனை யோகியால் பிரிக்க முடிகிறது.

மிகுந்தஒளியில் கூசும்கண்ணில் சூரியனும் மறையுது 
பகுத்தறியும் அறிவினாலே  சூரியனும் தெரியுது  
யோகம்கூட பெரியசக்தி கண்கூடாகக் கிடைக்குது
முதலில்கிடைக்கும்  கண்படாது  உருவமங்கு மறைவது  

कायरूपसंयमात् तत्ग्राह्यशक्तिस्तम्भे चक्षुः प्रकाशासंप्रयोगेऽन्तर्धानम् ॥२१॥
kāya-rūpa-saṁyamāt tat-grāhyaśakti-stambhe cakṣuḥ prakāśāsaṁprayoge-'ntardhānam ||21||

Through meditation on the form of one's own physical body, it becomes possible to impede the capacity that renders the body visible. This precludes a connection between light and the eyes and renders the body invisible to others. ||21||
kaya (काय, kāya) = (iic) body
rupa (रूप, rūpa) = (iic.) form
sanyamat (संयमात्, saṁyamāt) = (abl. sg. m. from sanyama (संयमा, saṁyamā)) by practicing contemplation; samyama; meditation
tat (तत्, tat) = (acc. sg. n./nom. sg. n. from tad (तद्, tad)) that
grahya (ग्राह्य, grāhya) = perceptible
shakti (शक्ति, śakti) = (iic.) power; capacity
arhtah (अर्ह्तः, arhtaḥ) = (nom. sg. m. from arhta (अर्ह्त, arhta)) impediment
chakshuh (चक्षुः, cakṣuḥ) = (acc. sg. n. /nom. sg. n., chakshus (चक्षुस्, cakṣus)) eye
prakasha (प्रकाश, prakāśa) = (iic.) light
asanprayoge (असंप्रयोगे, asaṁprayoge) = (loc. sg. m., asanprayoga (असंप्रयोग, asaṁprayoga)) no connection
antardhanam (अन्तर्धानम्, antardhānam) = (acc. sg. n./nom. sg. n. from antardhana (अन्तर्धान, antardhāna)) disappear; invisibility

Thanks to:

--------------------------------------------------------------------------------------------
22. ஏதேன சப்தாதி அந்தர் த்யான முக்தம்

பார்ப்பவர் கண்ணுக்கு தெரியாமல் பார்க்கும் தன்மையைப் பிரித்தல் போலவே மற்ற புலன் தன்மைகளையும் யோகியால் பிரிக்க முடிகிறது. இந்த சித்தினால்  யோகி மிக உயர்ந்த நிலைக்கு செல்கிறார்.

பார்த்தல்பிரித்து மாயமாய் மறைந்திருக்கும் சித்துபோல்
காதுகேட்டல்  நாசிமுகறல்  நாக்குசுவைத்தல்  தோலின்உணர்தல்
யாதும்கூட கைவரவே செய்திருத்தல் என்பது
யோகம்தன்னில் முனைப்பெடுத்த  சம்யமத்தால் ஆகுது

--------------------------------------------------------------------------------------------
23.சோபதிரமம் நிருபதிரமம்  ச கர்ம தத்சம்யமாத 
பரந்த ஞானம் அரிஷடேப் யோவா   

பிராரப்தம் என்னும் நின்று பலனளிக்கும் கர்மங்களின் மேலும், ஆகாம்யம் என்னும் உடன் பலனளிக்கும் கர்மங்களின் மேலும் சம்யமம் கொள்வதால் நாளை நம் வாழ்வில் நடக்கப் போவதை  அறியலாம்

நின்றுவரும் பிராரப்தம் இன்றுவரும் ஆகாம்யம்
இந்தவிரண்டு கருமம்மீது கூர்ந்துகொண்ட த்யானத்தால்
தொடரவிருக்கும் வாழ்வின்நிகழ்வு தெரிந்துநாமும் அறியலாம்
இடரைத்தவிர்த்து இறையில்படரும் வழியைநாமும் அடையலாம்

सोपक्रमं निरुपक्रमं च कर्म तत्संयमातपरान्तज्ञानम् अरिष्टेभ्यो वा 
sopa-kramaṁ nirupa-kramaṁ ca karma tatsaṁyamāt-aparāntajñānam ariṣṭebhyo vā 

Meditation (samyama) on foreseeable and unforeseeable causes and causal relationships (karma) gives rise to knowledge (jnana) concerning fate. 

sopa (सोप, sopa) = based on
krama (क्रम, krama) = sequence; succession
sopakramam (सोपक्रमं, sopakramaṁ) = based on the process; understandable; foreseeable
nirupa (निरुप, nirupa) = not supported; empty
nirupakramam (निरुपक्रमं, nirupakramaṁ) = not based on the process; unforeseeable; not understandable
cha (च, ca) = and
karma (कर्म, karma) = karma; action; cause or effect of an action; fate
tat (तत्, tat) = that
sanyamat (संयमात्, saṁyamāt) = (abl. sg. m. from sanyama (संयमा, saṁyamā)) by meditating on; by practising samyama as regards
aparanta (अपरान्त, aparānta) = death; end
jnana (ज्ञान, jñāna) = knowledge; understanding
arishta (अरिष्ट, ariṣṭa) = fate
ibhya (इभ्य, ibhya) = its
va (वा, vā) = or

Thanks to:

--------------------------------------------------------------------------------------------
24. மைத்திரியாதிஷூ பவானி

அன்பின் த்யானம் நற்பண்புகளையும் மனதின் வலிமையையும் பெருக்கும்

துன்பமான நினைவுகள் துன்பமேதான் தருகுது 
இன்பம்துய்த்த நினைவினால் இன்பம்மனதி லோங்குது 
முன்புநடந்த நிகழ்வுகள் நினைக்கமனதில் தோன்றுது 
அன்பைத்யானம் செய்திடு  பண்புபெருகும் பார்த்திடு  

मैत्र्यदिषु बलानि ॥२३॥
maitry-adiṣu balāni ||23||

Meditating on love (maitri) and the other positive attitudes (see ys 1.33) engenders the necessary strength. ||23||
maitri (मैत्री, maitrī) = love; congeniality; friendliness
adishu (आदिषु, ādiṣu) = and so on
balani (बलानि, balāni) = power; strength
Meditation enables you to determine the nature of your feelings, thoughts and actions. Selecting a trait, characteristic or emotion for samyama will result in its developing within you. However, Patanjali advises us to strengthen only positive emotions and traits through meditation, as they help us on our spiritual path. If your samyama focuses on hatred, this feeling will grow within you and will distract you from your inner path – and thus you will never attain the state of yoga. You can only progress on the path of yoga on the basis of positive characteristics. This will enable you to feel the love, empathy and gratitude that a genuinely advanced yogi emanates.

Thanks to:

--------------------------------------------------------------------------------------------

25. பலேஷூ ஹஸ்தி பலாதீனி

யானையை நினைத்து சம்யமம் கொள்ள யானையின் மிகுந்த பலமும் கைவரும்.

ராமகிருஷ்ணர் அனுமன்த்யானம் வால்முளைக்கச் செய்தது
வாமதேவர் சங்கல்பமே விண்ணைக்கடந்து நின்றது
நாமரூப த்யானத்தாலே எதுவுமாக லாகுதே
கரியைநினைத்து த்யானம்கொள்ள கரியின்பலமும் சேருதே..!


*கரி = யானை
बलेषु हस्तिबलादीनी ॥२४॥
baleṣu hastibalādīnī ||24||

Meditating on strength itself engenders the strength of an elephant. ||24||
baleshu (बलेषु, baleṣu) = in the strength
hasti (हस्ति, hasti) = elephant
baladini (बलादीनि, balādīni) = strength of

Thanks to:

--------------------------------------------------------------------------------------------

26. பிரவிர்த்திய லோக நியாசத் சூட்சும
வியவஹித விப்ரக்ருஷ்ட ஞானம்

இதயக் கமலத்தின் ஞானம் தூரம் கடக்கும், தூலத்தை  நோக்கும் திறனளிக்கும்

இதயம்தன்னில் ஓர்கமலம்  ஒளியில்விளங்கி நிற்குது
அதையேநினைத்து த்யானம்கொள்ள எதுவும்விளங்க லாகுது
உதயமாகும் சிறப்புப் பார்வை தூலம்தூரம் கடக்குமே
அதையும்கொண்டு யோகம்தொடர  ஞானப்பார்வை 
கிடைக்குமே

*தூலம் கடத்தல் = தூலப் பொருளைக் கடந்து சூக்குமத்தையும் காணும் திறன்

प्रवृत्त्यालोकन्यासात् सूक्ष्माव्यावहितविप्रकृष्टज्ञानम् ॥२५॥
pravṛtty-āloka-nyāsāt sūkṣmā-vyāvahita-viprakṛṣṭa-jñānam ||25||

Meditating on the source of the inner light gives rise to knowledge (jnana) of subtle, concealed and remote entities. ||25||
pravritti (प्रवृत्ति, pravṛtti) = source
aloka (आलोक, āloka) = inner light
nyasa (न्यासा, nyāsā) = by directing; by projecting
sukshma (सूक्ष्म, sūkṣma) = refined entities; subtle entities
vyavahita (व्यवहित, vyavahita) = hidden; concealed; veiled
viprakrishta (विप्रकृष्ट, viprakṛṣṭa) = distant; remote
jnana (ज्ञान, jñāna) = knowledge


Thanks to:

--------------------------------------------------------------------------------------------
27. புவன ஞானம் சூர்யே  சம்யமாத்

சூரியன் மேல் சம்யமம் செய்வதால் உலகில் நடக்கும் யாவும் அறியப் பெறலாம்

சூரியனும் கிரணம்கொண்டு ஒளிமயமாய்  எரிகிறான்
அறிவதாகப்  பொருளின்காட்சி நமக்குமவன் தருகிறான்
புரிவதான யோகம்தன்னில்  அவன்மேல்  த்யானம்கொண்டிட
தெரிவதாகும் புவனமெங்கும் நடக்குமெதுவும்   கண்டிட

भुवज्ञानं सूर्येसंयमात् ॥२६॥
bhuva-jñānaṁ sūrye-saṁyamāt ||26||

Meditation (samyama) on the sun gives rise to knowledge (jnana) of the ethereal and physical worlds. ||26||
bhuvana (भुवन, bhuvana) = world; realm; ethereal and physical worlds
jnana (ज्ञान, jñāna) = knowledge; understanding
surye (सूर्ये, sūrye) = (loc. from surya (सूर्य, sūrya)) concerning the sun; concerning surya
sanyamat (संयमात्, saṁyamāt) = (abl. sg. m. from sanyama (संयमा, saṁyamā)) deep contemplation; meditation

Thanks to:

--------------------------------------------------------------------------------------------
28 சந்த்ரே தாரா வியூக ஞானம்

சந்திரன்  மேல் சம்யமம் செய்வதால் வானில் இருக்கும் நட்சத்திரங்களின் அமைப்பையும் (Astronomy) அறிய முடியும் 

பானைக்கொரு சோறின்பதம் போதுமான தாகுமே
யானைக்கொரு அங்குசமே  அடக்கியாளப் போதுமே
மீனைப்போன்று வானிருக்கும் நட்சத்திர அமைப்புமே
சந்திரனை சம்யமிக்க  தோன்றுவதில் வியப்புமேன் ? 

चन्द्रे तारव्यूहज्ञानम् ॥२७॥
candre tāravyūha-jñānam ||27||

Meditating on the moon (chandra) gives rise to knowledge (jnana) concerning the arrangement of the stars. ||27||
chandre (चन्द्रे, candre) = (loc. sg. m./acc. du. n./nom. du. n./loc. sg. n./acc. du. f./nom. du. f. from chandra (चन्द्र, candra)) moon
tara (तार, tāra) = (iic.) star
vyuha (व्यूह, vyūha) = (iic.) arrangement; oneness; configuration
jnanam (ज्ञानम्, jñānam) = (acc. sg. n. / nom. sg. n. from jnana (ज्ञान, jñāna)) knowledge; insight
tara vyuha jnana (तार व्यूह ज्ञान, tāra vyūha jñāna) = knowledge concerning the arrangement of the stars; astrological knowledge

Thanks to:

--------------------------------------------------------------------------------------------
29. துருவே தக்கதி  ஞானம் 

துருவ நட்சத்திரம் மேல் செய்யும் சம்யமத்தால் விண்மீன்களின் இயக்கம் புரிபடும்

துருவனான  நட்சத்திரம் நிலைத்துவிண்ணில் நிற்குது
அருவமான உருவமான விண்ணின்பொருளைக் காணுது
பொருளதாகக் கொண்டதன்மேல் சம்யமமே கொள்வதால்
புரிவதாகத் தெரியும்விண்ணின் மீன்கள்இயக்கம் தானது

ध्रुवे तद्गतिज्ञानम् ॥२८॥
dhruve tadgati-jñānam ||28||
Meditating on the polestar engenders knowledge (jnana) of its constellation. ||28||
dhruve (ध्रुवे, dhruve) = (loc. sg. m./acc. du. n./nom. du. n./loc. sg. n./acc. du. f. nom. du. f. from ) polestar
tat (तत्, tat) = (acc. sg. n./nom. sg. n. from tad (तद्, tad)) its; their
gati (गति, gati) = (iic.) movement; constellation
jnanam (ज्ञानम्, jñānam) = (acc. sg. n. / nom. sg. n. from jnana (ज्ञान, jñāna)) knowledge; insight
Thanks to:

--------------------------------------------------------------------------------------------
30. நாபிசக்ரே காய வ்யூக ஞானம் 

நாபி சக்கரத்தின்  மேல் செய்யும் சம்யமத்தால் உடலின் அங்க இயக்கம் புரிபடும்

கடலும்கரையில் அலைகள்கொண்டு ஆர்ப்பரித்து தோன்றுது
படகில்சென்று நடுவில்காண அதனின்அமைதி தெரியுது
அதனைப்போல  உடலின்நடுவாம் நாபிமீது சம்யமம்
செய்வதனால் அங்கம்யாவும் தெள்ளத்தெளிவாய்த்  தெரிந்திடும் 

नाभिचक्रे कायव्यूहज्ञानम् 
nābhicakre kāyavyūha-jñānam 

Meditation on the energy center of the navel (nabhi chakra) gives rise to knowledge (jnana) concerning the arrangement and structure of the physical body. ||29||
nabhi (नाभि, nābhi) = (iic.) navel
chakre (चक्रे, cakre) = (acc. du. n./nom. du. n./loc. sg. n. from chakra (चक्र, cakra)) energy center; wheel
kaya (काय, kāya) = (iic) body; physical body
vyuha (व्यूह, vyūha) = (iic.) arrangement; configuration
jnanam (ज्ञानम्, jñānam) = (acc. sg. n. / nom. sg. n. from jnana (ज्ञान, jñāna)) knowledge; insight

Thanks to:
--------------------------------------------------------------------------------------------

இந்த சூத்திரங்களில் கூறப்படுவதால் சாரம்:
சித்திகள் பற்றி பேச ஆரம்பிக்கிறார் பதஞ்சலி
ஸம்யமப் பொருளைப் பொறுத்து என்னென்ன சித்திகள் கைகூடும் என்று தனித்தனியாகக் கூறுகிறார் பதஞ்சலி முனிவர்.



11 - 20                                     31 - 40


<<< முதல் பக்கம் >>>

விபூதி பாதம் சூத்ரம் 11 - 20


ENGLISH


11. சர்வார்த்த எகாக்ரதயோ: க்ஷயோ
தயௌசித்தஸ்ய  சமாதி பரிணாம : ||  

எண்ணம் அடக்கும் நிரோதப் பரிணாமமும் 
மனத்தைக் குவிக்கும் எகாக்ரதப் பரிணாமமும் கைவர, 
புலன்கள் அடங்கிடும் இறையும் புலப்படும்.

தேரில்பூட்டி நின்றகுதிரை யாவும்வேகம் கொள்ளினும்
தூரம்நிற்கும் இலக்குவேறு திசையில்அவையும் பாய்ந்திட
சேர்ந்துசெல்லும் ஒருமையிலே குதிரையாவும் இணைந்திட
விரைந்துநெருங்கும் தூரத்தோன்றும் இலக்கும்கூட கண்பட

நிரோதஏக 
சித்த
ஒருமைப் பாட்டில்மனதைக் குவித்திட
விரோதமின்றி புலனும்செய்யும் ஏவல்நீயும் பணித்திட
நிராதரவாய் நிற்கும்எண்ணம் உன்னைவிட்டு சென்றிட
சிரோதமென்று உதயமாகும் தீபம்நின்று ஒளிவிட

ஊற்றெடுக்கும் நீரும்பெருகி ஒடுமங்கு வெள்ளமாய்
தேக்கிக்கிணற்றில் சேர்த்திடவே உதவுமதுவும் திண்ணமாய்
தோன்றுமெண்ண மடக்கிநீயும் முயன்றுமனத்தைக் குவித்திடு
தோன்றுநல்ச மாதிஆற்றல் பெரிதுநீயும் அறிந்திடு


सर्वार्थता एकाग्रातयोः क्षयोदयौ चित्तस्य समाधिपरिणामः ॥११॥
sarvārthatā ekāgrātayoḥ kṣayodayau cittasya samādhi-pariṇāmaḥ ||11||

The transition to insight (samadhi-parinama) is characterized by the mutability in human beings (chitta) becoming progressively less scattered, whereas the tendency toward consolidation increases. ||11||
sarva (सर्व, sarva) = all; many
artha (अर्थ, artha) = related to
sarvarthata (सर्वार्थत, sarvārthata) = state of mental scatteredness; many objects
ekagrata (एकाग्रता, ekāgratā) = consolidation; concentration; one-pointedness; an object
kshaya (क्षय, kṣaya) = decline; dwindle; cease; progressively less
udaya (उदय, udaya) = to rise; to increase
chitta (चित्त, citta) = all that is mutable in human beings; mind
samadhi (समाधि, samādhi) = transcendent state; absolute knowledge
parinamah (परिणामः, pariṇāmaḥ) = change; evolution
This is another transition within the three steps of ashtanga yoga. Whereas the transition from concentration, or dharana, to contemplation, or dhyana, is referred to as norodha-parinama, the next transition is called samadhi-parinama, which is the transition from contemplation, or dhyana, to enlightenment, or samadhi.

Thanks to:
--------------------------------------------------------------------------------------------

12. ததாபுனா சாந்தோதிதௌ துல்யப்ரத்யயௌ
சித்தஸ்ய ஐகாக்ரதாபரிணாம :

ஏகசித்த பரிணாமத்தில் கால பேதம் மறைந்திடும்

ஏகசித்த ஒருமையில் மறையும்காலப் பன்மையும் நேற்றுஇன்று நாளையும் நிகழ்வதனில் குவிந்திடும்
போற்றுமா றுயர்ந்திடும் ஓர்நிலைக் குரித்திடும்
சாற்றுமந்த கூற்றுவனின் சாதலையும் வென்றிடும்

ततः पुनः शातोदितौ तुल्यप्रत्ययौ चित्तस्यैकाग्रतापरिणामः ॥१२॥
tataḥ punaḥ śātoditau tulya-pratyayau cittasya-ikāgratā-pariṇāmaḥ ||12||
The transition to one-pointedness, or ekagrata-parinamah, is the transition whereby human mutability (chitta) becomes perfectly balanced between arising and subsiding. ||12||
tatah (ततः, tataḥ) = (adv. from tatas (ततस्, tatas)) then
punah (पुनः, punaḥ) = (adv./conj. from punar (पुनर्, punar)) again
shanta (शान्ता, śāntā) = (per. fut. sg. 3. from sha (शा, śā)) tranquil; subsiding
uditau (उदितौ, uditau) = (acc. du. m./nom. du. m. udita (उदित, udita)) stated; ascended
tulya (तुल्य, tulya) = (iic.) identical; similar
pratyayau (प्रत्ययौ, pratyayau) = (acc. du. m./nom. du. m.) thought; impression
chittasya (चित्तस्य, cittasya) = (g. sg. m./g. sg. n. from chitta (चित्त, citta)) all that is mutable in humankind; mind
ekatmata (एकात्मता, ekātmatā) = (nom. sg. f.) aggregation; concentration; one-pointedness
parinamah (परिणामः, pariṇāmaḥ) = (nom. sg. m., parinama (परिणाम, pariṇāma)) transition; change; evolution
Ekagrata-parinama is the final transition of our consciousness, whereby the three stages of samyama (dharana, dhyana and samadhi) are completed, resulting in attainment of a state of enlightenment (samadhi) even if outer circumstances change.

Thanks to:

--------------------------------------------------------------------------------------------
13. ஏதேன பூத இந்த்ரிய ஏஷூ
தர்ம லக்ஷண அவஸ்தா பரிணாமா விக்யாத:

தர்ம லக்ஷண அவஸ்தா பரிணாமம்

தர்மம் (பொருளின் தன்மை), லட்சணம் (பொருளின் வரையறை-Definition ), அவஸ்தை( அனுபவம்) இவை மூன்றும் இணைத்து நோக்கும் சம்யமம் , புலன் ஆற்றலை விரிவடையச் செய்கிறது. 

நிரோதமெண்ண மடக்கமாம் ஏகசித்தம் ஒடுக்கமாம்
நிரோதம்கொண்ட ஏகசித்தம் உயர்நிலையைக் கொடுக்குமாம்
தருமம்பொருளின் தன்மையாம் லட்சணமதன் வரம்புமாம்
அவஸ்தையான அனுபவமும் இணைவதுவும் கூடுமாம்
பதஞ்சலியார் கூறுமந்த 
தர்மலக்ஷ்ண
 அவஸ்தையாம்
நிதம்பழக பெறுவதந்த புலனடங்கும் அமைதியாம்
இதம்பெறவே அவைவிரியும் உயர்நிலையின் விதமுமாய்
விளங்குமந்த மேல்நிலையின் அனுபவத்தின் அருளுமாம்

एतेन भूतेन्द्रियेषु धर्मलक्षणावस्था व्याख्याताः ॥१३॥
etena bhūtendriyeṣu dharma-lakṣaṇa-avasthā vyākhyātāḥ ||13||

This explains the transformation of relinquishment (dharma-parinama), characteristics (lakshana-parinama) and states into material elements of the senses. ||13||
etena (एतेन, etena) = (i. sg. m./i. sg. n. from eta (एत, eta)) by this; by these
bhuta (भूता, bhūtā) = (nom. sg. f.) elements
indriyeshu (इन्द्रियेषु, indriyeṣu) = (loc. pl. m./loc. pl. n. from indriya (इन्द्रिय, indriya)) in the sense organs
dharma (धर्म, dharma) = (acc. sg. n./nom. sg. n. from dharman (धर्मन्, dharman)) relinquishing something in the world; characteristic; feature, outer form
lakshana (लक्षणा, lakṣaṇā) = (nom. sg. f. from lakshana (लक्षण, lakṣaṇa)) attribute; feature; the inner quality of something
avasthah (अवस्थाः, avasthāḥ) = (acc. pl. f.) state; condition
parinama (परिणाम, pariṇāma) = change; evolution
vyakhya (व्याख्या, vyākhyā) = description; explanation
vyakhyatah (व्याख्याताः, vyākhyātāḥ) = (nom. pl. m./acc. pl. f./nom. pl. f. from vyakhyata (व्याख्यात, vyākhyāta)) are described
The way we perceive objects is conditioned by our prior experience. Take a laptop computer for example. A Stone Age person might have simply used it as a smooth surface to crack nuts on. In the Middle Ages it might have served as a shield in battle. Today we use laptops to compose texts, watch movies and so on. Hence we perceive everyday objects variously, depending on how we have developed. This relates to the manner in which we use such objects (dharma-parinama); the amount of time we wish to spend using them (lakshana-parinama); and how we perceive them (avastha-parinama).

Thanks to:
--------------------------------------------------------------------------------------------
14. சாந்தோதி தாவ்ய பதேச்ய தர்ம
அனுப்பாதீ தர்மீ

ஒவ்வொரு பொருளுக்கும் உயிருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அவை அவற்றின் கடந்த கால நடவடிக்கைகளைப் பொருத்தது. சம்ஸ்காரங்கள் என்று சொல்லப்படும் இவை தொடர்ந்து பிறக்கும் வித்துக்களாக பிறவி தொடர்ந்து வரும் தன்மை படைத்தது.

பொருளின் தன்மை தர்மம் என்பர்
செயலின் தன்மை விளைவு என்பர்
துயிலில் தொன்மை கொள்ளும் என்பர்
உயிரில் தோன்றும் விதைகள் என்பர்

शानोदिताव्यपदेश्यधर्मानुपाती धर्मी ॥१४॥
śān-odita-avyapadeśya-dharmānupātī dharmī ||14||

Past, present and future tasks are all based on one and the same foundation. ||14||
shanta (शान्त, śānta) = past
udita (उदित, udita) = arising; manifested
avyapadeshya (अव्यपदेश्य, avyapadeśya) = unmanifest; in the future; future
dharma (धर्म, dharma) = characteristics; inherent function
anupati (अनुपाती, anupātī) = based on; jointly
dharmi (धर्मी, dharmī) = the object or person containing the characteristics

Thanks to:

--------------------------------------------------------------------------------------------
15. க்ர்மான்யத்வம் பரிணாமான்யத்வே ஹேது :

ஓர் காரணம் கருதி அமைவதே செயல். காரணத்தால் செயலும், செயலினால் விளைவும் அமைதல் இயற்கை.
காரணம் பொறுத்தே செயல் அமையும். செயலைப் பொறுத்தே விளவமையும். எனவே 
மேன்மையான காரணத்தைக் கொண்டு யோகம் கொள்ள வேண்டும். 

செயல்படுத்த காரியம் தேவைஒரு காரணம்
இயல்பினாலே ஒன்றன்பின் ஒன்றுமான தோரணம்
செயல்படுத்தும் அவைகளுமே மேன்மையாலே இணையணும்
முயன்றுகாணும் உண்மையொன்றே காரணமாய் அமையணும்

क्रमान्यत्वं परिणामान्यतेवे हेतुः ॥१५॥
kramānyatvaṁ pariṇāmānyateve hetuḥ ||15||

Distinctness in transformation (anyatvam-parinama) are based on differences in the sequence ||15||
krama (क्रम, krama) = sequence; succession
anyatvam (अन्यत्वं, anyatvaṁ) = distinctness; difference
parinama (परिणाम, pariṇāma) = change; evolution
anyatva (अन्यत्व, anyatva) = distinctness; difference
hetu (हेतु, hetu) = cause; reason

Thanks to:

--------------------------------------------------------------------------------------------
16. பரிணாமத்ரய சம்யமம் ஆததீதானாகத ஞானம்

தாரணை,தியானம்,சமாதி என்னும் மூன்று மெல்ல மெல்ல கடந்த காலத்தை உணரும் சக்தி கொடுக்கிறது. 
சென்றகால நிகழ்வுகள் இன்றைய நிகழ்வுகள் இவை இரண்டையும் சேர்த்து நோக்குங்கால் எதிர்காலம் புலனாகிறது.
இவை மூன்றையும் சேர்த்து நோக்கும் சம்யமம் கூடுங்கால் ஞானம் உண்டாகிறது.
இந்த மூன்றில் படிப் படியாக முன்னேறும்போது , த்யானப் பொருளைப் பற்றிய ஆழ்ந்த புரிதல் கொண்ட உணர்வு தோன்றுகிறது. 
இந்த ஞானம் ப்ரக்ரிதியைக் குறித்த ஆழ்ந்த ஞானத்தையும் அதில் வாழும் உயிர்களின் ஆழ்ந்த ஞானத்தையும் அளிக்கிறது.
எனவே த்யானப் பொருளை இறைவனாகக் கொள்ள முக்தி எனப்படும் இறைஞானம் கிட்டும்.


இன்றுமண்ணாய்த் தோன்றுவது நாளைசெங்க லாகுது
சென்றுஅதை சூளையிட்ட உனக்குமது விளங்குது
 நாளையொன்று நடக்கவின்று திட்டம்தீட்டி வைக்கிறோம்
கோளைச்சென்று பார்த்திடாமல் அறிந்துநாமும் கொள்கிறோம்
---------
நேற்றுநிகழ்ந்தது இன்றுநிகழ்வது சேர்ந்துநோக்கிட நாளைபுரியுது
வேற்றுநினைவது அற்றுகொண்டது ஒன்றுஎன்பது சம்யமமாகுது
நேற்றுமின்றது நாளையாவது சேர்த்துசம்யமம் நீயும்செய்வது
போற்றுகின்றது நாளைதோன்றுது காணுகின்றவோர் திறனும்கூடுது

परिणामत्रयसंयमाततीतानागत ज्ञानम् ॥१६॥
pariṇāmatraya-saṁyamāt-atītānāgata jñānam ||16||

Meditation (samyama) on the three types of change (parinama-traya) gives rise to knowledge of the past and future. ||16||
parinama (परिणाम, pariṇāma) = (iic.) change; evolution
traya (त्रय, traya) = (iic.) the three
sanyamat (संयमात्, saṁyamāt) = (abl. sg. m. from sanyama (संयमा, saṁyamā)) concentration; contemplation; samyama; meditation
atita (अतीत, atīta) = (nom. sg. f.) past
anagata (अनागत, anāgata) = (voc. sg. m./voc. sg. n.) future
jnanam (ज्ञानम्, jñānam) = (acc. sg. n. / nom. sg. n. from jnana (ज्ञान, jñāna)) knowledge; insight
Samyama, or meditation, is composed of three successive steps, namely dharana (concentration), dhyana (contemplation) and samadhi (absolute knowledge). With each step, we gain deeper knowledge of the object of our contemplation. What matters here is (a) which object we choose as a focus for samyama; (b) the nature of our insight; and (c) what we experience on the way there. Patanjali suggests a series of subjects for meditation (samyama) (ys 3.16-3.34).

Thanks to:
--------------------------------------------------------------------------------------------
17.
சப்த அர்த்த பிரத்திய யானாம்
இதரேத்ரா அதியாசாத்
சம்காரகத் பிரவிபாக சம்யமாத்
சர்வபூதருத ஞானம்

சாதாரண மனிதருக்கு ஒரு சொல்லைக் கேட்கும்போது அது எதைக் குறிக்கிறது என விளங்குவது , முன்னர் அதை அறிந்த பதிவினாலே ஆகும். ஆனால் யோகியர்க்கோ சொல்,அது எழுப்பும் ஓசை,அதனால் விளங்கும் பொருள் என தனித் தனியே உணர்ந்து அறியும் திறன் கூடுகிறது.

சொல்லைக்கேட்க அதனின்பொருளும் மாந்தருக்குத் தெரிவது
இல்லைவேறு ஒன்றால்முன்னால் கேட்டப்பதிவி னாலது
சொல்லைசொல்லும் கொண்டஓசை பொருளைக்கொண்டு அறிவது
தில்லைநடம் காணயோகிக் கொண்டயோகத் தாலது

शब्दार्थप्रत्ययामामितरेत्रराध्यासात्संकरः तत्प्रविभागसंयमात् सर्वभूतरुतज्ञानम् ॥१७॥
śabdārtha-pratyayāmām-itaretrarādhyāsāt-saṁkaraḥ tat-pravibhāga-saṁyamāt sarvabhūta-ruta-jñānam ||17||

The name, task and experience associated with an object are interconnected. By meditating (samyama) on the distinction between these three, we attain knowledge (jnana) concerning the form of expression of all living beings. ||17||
shabda (शब्द, śabda) = word; sound; name of an object
artha (अर्थ, artha) = object; purpose; meaning
pratyayana (प्रत्ययान, pratyayāna) = thought; content of the mind; experience
itara (इतर, itara) = the one
itaretara (इतरेतरा, itaretarā) = one another
adhyasa (अध्यास, adhyāsa) = interrelated; based on
sankara (संकर, saṁkara) = mixture
tat (तत्, tat) = these
pravibhaga (प्रविभाग, pravibhāga) = separation; differentiation
sanyamat (संयमात्, saṁyamāt) = (abl. sg. m. from sanyama (संयमा, saṁyamā)) concentration; contemplation; samyama; meditation
sarva (सर्व, sarva) = all
bhuta (भूत, bhūta) = living beings
ruta (रुत, ruta) = sound; language; speech; form of expression
jnana (ज्ञान, jñāna) = knowledge; understanding

Thanks to:
--------------------------------------------------------------------------------------------
18. சம்ஸ்கார சாட்சாத் காரணாத் பூர்வஜாதி ஞானம்

யோகியர்க்க்கு முற்பிறவி நிகழ்வறியும் திறன் உண்டு

பிறந்தவுடன் நிகழ்ந்தநிகழ்வு நமக்குஎங்கே தெரியுது
பிறப்புமுதல் உடனிருக்கும் தாய்க்குத்தானே தெரியுது
முற்பிறப்பில் நடந்தயாவும் நமக்குஎங்கே தெரியுது
உருவமற்று சூக்குமமாய் புலப்படாமல் நிற்குது

கறைபடாத ஆன்மத்துக்கு அதுவும்விளங்க லாகுது
நினைவுடனே அதனுடனே தொடர்பு கொள்ளலாவது
குறையுடனே அறிவுடைய நமக்குமெங்கே கூடுது
சிறப்புடைய யோகம்கொள்ள அதுவும் விளக்கமாகுது

संस्कारसाक्षात्करणात् पूर्वजातिज्ञानम् ॥१८॥
saṁskāra-sākṣātkaraṇāt pūrva-jāti-jñānam ||18||

Through meditation on our impressions (samskaras) comes the knowledge (jnana) of previous incarnations. ||18||
sanskara (संस्कार, saṁskāra) = (iic.) impressions; experience resulting from previous actions
sakshat (साक्षात्, sākṣāt) = direct
karanat (करणात्, karaṇāt) = (abl. sg. m./abl. sg. n., from karana (करण, karaṇa)) experience
sakshatkaranat (साक्षात्करणत्, sākṣātkaraṇat) = (abl. sg. m./abl. sg. n.) direct experience; original experience
purva (पूर्व, pūrva) = (iic.) previous
jati (जाति, jāti) = birth
purva jati (पूर्वजाति, pūrva-jāti) = (iic.) incarnation
jnanam (ज्ञानम्, jñānam) = (acc. sg. n. / nom. sg. n. from jnana (ज्ञान, jñāna)) knowledge; insight

Patanjali on psychoanalysis

Pantanjali recommends that we mediate on the following question: Why do we act in certain ways in certain situations? This meditation entails an inner journey on which we learn a great deal about ourselves. Are our actions determined by misconceptions and previous experience? Where do these misconceptions come from?
This is a bit like Freudian psychoanalysis in that we go back into our past in an effort to understand where these impressions, or samskaras, come from. Take an aquaphobic person for example. Where does this phobia from? Through meditation, it may emerge that the aversion has its origins in a negative experience with water. Once the person identifies this type of cause, they may be able to rid themselves of their anxiety.
In describing this technique, Patanjali uses an extremely broad definition of previous incarnation, which according to him encompasses everything that has occurred up until now, including prior to birth.

Thanks to:
--------------------------------------------------------------------------------------------
19. ப்ரத்யயஸ்ய பரிசுத்த ஞானம்

மற்றவரின் மனதை (எண்ண ஓட்டங்களை) அறியும் ஆற்றல் யோகியர்க்க்கு உண்டு

த்யானம்கொள்ளப் பொருளின்தன்மை முற்பிறப்பின் நினைப்புமே
ஞானமாகத் தோன்றும்யோகம் கொண்டதான முனைப்பிலே
எண்ணமாக மற்றவர்கள் நெஞ்சி
லோடும் 
யாவுமே
திண்ணமாகத் தோன்றுமந்த யோகியர்கள் நெஞ்சிலே


प्रत्ययस्य परचित्तज्ञानम् ॥१९॥
pratyayasya para-citta-jñānam ||19||

Meditation on the thoughts of another person gives rise to knowledge (jnana) of their mutable being (chitta). ||19||
pratyayasya (प्रत्ययस्य, pratyayasya) = (g. sg. m. from pratyaya (प्रत्यय, pratyaya)) that which is in the mind; thought; direct perception
para (पर, para) = (iic.) a different one; another
chitta (चित्त, citta) = (iic.) human mutability; mind
jnanam (ज्ञानम्, jñānam) = (acc. sg. n. / nom. sg. n. from jnana (ज्ञान, jñāna)) knowledge; insight


Thanks to:

--------------------------------------------------------------------------------------------

20. நசதத் சாலம் பனம் தஸ்யா விஷயீ பூதத்வாத்

மற்றவரின் எண்ண ஓட்டங்களை அறியும் திறன், அவருடைய உண்மையான ஆன்மத் தோற்றத்தை அறியும் திறனளிப்பதாக ஆகாது. ஆனால் இந்த சித்தினை (திறனை ) வைத்து சாதகர் தன்னை அறிதலுக்கு முயன்றிட வேண்டும்.

விரைந்துசென்று மற்றவர் நெஞ்சிலோடும் எண்ணமும்
புரிந்துநின்றி ருப்பது கொண்டசித்தன் சத்தது
விரைந்துஉந்தன் தன்மையை அறிந்துகொள்ள லன்றியே
புரிந்தமாற்றார் நெஞ்சது உண்மைஆன்ம மன்றது


न च तत् सालम्बनं तस्याविषयी भूतत्वात् ॥२०॥
na ca tat sālambanaṁ tasya-aviṣayī bhūtatvāt ||20||

But we learn nothing from the true nature of another person, for they are not an object that can be perceived. ||20||
na (न, na) = (part.) not
cha (च, ca) = (conj.) and
tat (तत्, tat) = (acc. sg. n./nom. sg. n. from tad (तद्, tad)) that
sa (स, sa) = (nom. sg. m. from tad (तद्, tad)) his
alambanam (आलम्बनम्, ālambanam) = (acc. sg. n./nom. sg. n., alambana (आलम्बन, ālambana)) the underlying; that which supports; here: the true self; true nature (of something)
tasyah (तस्यः, tasyaḥ) = (g. sg. f./abl. sg. f., tad (तद्, tad)) its
avishayi (अविषयी, aviṣayī) = (nom. sg. m., avishayin (अविषयिन्, aviṣayin)) not the object
bhutatvat (भूतत्वात्, bhūtatvāt) = because it is

Thanks to:
--------------------------------------------------------------------------------------------

இந்த சூத்திரங்களில் சொல்லப்படுவதன் சாரம்:
எண்ணம் அடக்கும் நிரோதப் பரிணாமமும் மனத்தைக் குவிக்கும் எகாக்ரதப் பரிணாமமும் கைவர, 
புலன்கள் அடங்கிடும் இறையும் புலப்படும்.கால பேதம் மறைந்திடும்.
தொடர் சாதனையால்,பிரகிருதியின் தன்மையும் மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை அறியும் திறனும் கூடும்.
இதை ஆத்மாவை அறியும் நோக்கத்திற்கு பயன் படுத்த வேண்டும்.


 1 - 10                                            21 - 30

விபூதி பாதம் சூத்ரம் 1 - 10


ENGLISH

விபூதி யோகம் பாடல்

விபூதி பாதம்: 56  சூத்திரங்கள் அடங்கிய இந்த பாகத்தில் ,யோகத்தால் கிட்டும் சித்திகள் சொல்லப் படுகின்றன. இந்த பாகத்தில். முதலில்  அஷ்டாங்க யோகத்தின் தாரணை,தியானம்,சமாதி என்ற மூன்றும் விவரிக்கப் படுகின்றன.


1. தேச பந்தஸ்ய சிதஸ்ய தார :

சித்தத்தை ஒரு பொருளின் மீது மட்டும்  ஒருமுகப்படுத்தி தீவிரமாகக் கொள்ளும் சாதனை  தாரணையாகும். 

தாரணை 

விரைந்தெழும்பும் மனத்தைக்கட்டி ஓரிடத்தின் மீதினில் 
சிறையிற்ப்பட்ட சிலையதாக நிற்கச்செய்யும் சாதனை
இரையைக் கண்டு கூர்ந்துநிற்கும்
புலியும்கொண்ட தோரணை
போன்றதாகும் நிலையின் பட்ட 
அதனின்பெயர் தாரணை

देशबन्धः चित्तस्य धार.आ ॥१॥
deśa-bandhaḥ cittasya dhāra.ā ||1||
Harmony with your thoughts and the ability to concentrate are attained by aligning the mutable aspects of humankind with a specific subject. ||1||

desha (देश, deśa) = place; location; topic; subject
bandha (बन्ध, bandha) = binding to; holding; fixing; uniting
chittasya (चित्तस्य, cittasya) = (gen.) all that is mutable/transient in humankind; consciousness
dharana (धारणा, dhāraṇā) = concentration; focusing; directing attention

Thanks to:

--------------------------------------------------------------------------------------------

2. தத்ர ப்ரத்யயைகதானதா த்யான்

தியானம் 
தியானம் என்பது அறிந்து கொள்ள வேண்டிய பொருளை நோக்கி தொடர்ந்து செல்லும் மெய்யுணர்வாகும்.

தாரணையில் ஓரிடத்தில் நிற்குமந்த மனமது 
பேரணையில் நீரதாக நின்றிடாதோர் பொருளது
மீததனில் நோக்கியேநீ தொடர்ந்துபயணம் கொள்வது 
வேறெதுவு மில்லையதன் பெயர்தான் த்யானமென்பது

तत्र प्रत्ययैकतानता ध्यानम् ॥२॥
tatra pratyaya-ikatānatā dhyānam ||2||

Allowing your thoughts to flow in an uninterrupted stream results in contemplation (dhyana). ||2||
tatra (तत्र, tatra) = (adv.) there; then
pratyaya (प्रत्यय, pratyaya) = (iic.) notion; content of mind; presented idea; cognition
eka (एक, eka) = (iic.) one
tana (तान, tāna) = ( iic.) to flow; to rove; to migrate
ekatanata (एकतानत, ekatānata) = one continuous flow
dhyanam (ध्यानम्, dhyānam) = (acc. sg. n./nom. sg. n. from dhyana (ध्यान, dhyāna)) meditation

Thanks to:

--------------------------------------------------------------------------------------------
3. ததேவார்த்தமாத்ர நிற்பாஸம் ஸ்வரூப சூன்யமிவ சமாதி


த்யானப் பொருளின் உருவம் மறைகிறது. அதன் இயற்கையான உண்மையின் அர்த்தம் மாத்திரம் பிரகாசிக்கிறது. இது தான் சமாதி.

புலர்ந்தபொழுது எழுந்துநிற்கும் இளமையான சூரியன் 
வளர்ந்தபொழுது முதிர்ந்தபகலில் வளமையான கூரிய
ஒளியினாலே மறைதலுற்று வெள்ளமாகத் தோன்றல்போல்
பொருளின்உரு மறைந்துதோன்றும் அர்த்தமேச மாதியில்

तदेवार्थमात्रनिर्भासं स्वरूपशून्यमिवसमाधिः ॥३॥
tadeva-artha-mātra-nirbhāsaṁ svarūpa-śūnyam-iva-samādhiḥ ||3||

Insight (samadhi) occurs when only the subject matter of the orientation shines forth without any being affected by the person in question. ||3||
tad (तद्, tad) = (acc. sg. n./nom. sg. n.) thus; there; hence; now
eva (एव, eva) = (prep.) the same; actually
tada (तदा, tadā) = precisely when
artha (अर्थ, artha) = (iic.) meaning; object; subject; topic
matra (मात्र, mātra) = only; alone
nirbhasa (निर्भासा, nirbhāsā) = luminous; radiant
svarupa (स्वरूप, svarūpa) = (iic.) own form; own nature; personality; subjectivity; chitta
shunyam (शून्यम्, śūnyam) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n. from sunya (सून्य, sūnya)) empty; devoid of
iva (इव, iva) = (prep.) as if
samadhih (समाधिः, samādhiḥ) = (nom. sg. m. from samadhi (समाधि, samādhi)) samadhi; goal of yoga; state of enlightenment; transcendent state; absolute knowledge

Thanks to:
--------------------------------------------------------------------------------------------

4. த்ரயமேகத்ர சம்யம :

த்யானத்தின் அக உறுப்புகளான தாரணை, த்யானம், சமாதி இவை மூன்றையும் ஓர் பொருளின் மீது நிலை பெறச் செய்வது தான் சம்ம்.

மனதைநிறுத்தும் தாரணை அதனைச்செலுத்தும் த்யானமும்
உருமறைச் சமாதியும் தனித்துத் தோன்றிடாமலே
ர்பொருளின்  மீதுநின்று ஒருங்கிணை தலாவது
வேறுமில்லை அதனின்பெயர் ஸம்யமம்   என்றானது

त्रयमेकत्र संयमः ॥४॥
trayam-ekatra saṁyamaḥ ||4||
The three processes of dharana, dhyana, and samadhi, when taken together, are the components of meditation (samyama). ||4||
trayam (त्रयम्, trayam) = (acc. sg. n./nom. sg. n. from traya (त्रय, traya)) the three
eka (एक, eka) = one
ekatra (एकत्र, ekatra) = (adv.) together; as one; at one place
sanyamah (संयमः, saṁyamaḥ) = (nom. sg. m. from sanyama (संयम, saṁyama)) literally: completely controlled or regulated; self control; absorption; meditation; the latter stages of the eight-fold path; essence of the eight-fold path

Thanks to:

--------------------------------------------------------------------------------------------

5. தஜ்ஜயாத் ப்ரக்ஞாலோக :

இதுவரையில் காண முடியாததைக் காண்பதும் அனுபவிக்க முடியாததை அனுபவிப்பதும் தான் ஒன்றாகக் காணும் காட்சியாகவும், அனுபவம் அற்புதமாகவும் அமைகிறது 

முடவன்கால்கள் பெற்றுமலையில் ஏறிச்சென்று காண்பதும் 
சிறகுமுளைத்து பறவைவானில் பறந்துசென்று காண்பதும் 
போன்றதாகும் சம்யயத்தின் பாலின்பட்ட அனுபவம் 
அற்புதத்தின் அற்புதம் காட்டும்பரமன் பொற்பதம்

तज्जयात् प्रज्ञालोकः ॥५॥
tajjayāt prajñālokaḥ ||5||
Mastery of this meditation gives rise to absolute knowledge of all that can be perceived. ||5||

tat (तत्, tat) = (acc. sg. n./nom. sg. n. from tad (तद्, tad)) that; there; from that
jayat (जयात्, jayāt) = (abl. sg. m./abl. sg. n. from jaya (जय, jaya)) mastery
prajna (प्रज्ञा, prajñā) = (nom. sg. f. from prajna (प्रज्ञा, prajñā); nom. sg. f. from prajna (प्रज्ञ, prajña)) higher consciousness; direct knowledge; absolute knowledge
alokah (आलोकः, ālokaḥ) = (nom. sg. m. from aloka (आलोक, āloka)) all that can be perceived; light; visible


Thanks to:

--------------------------------------------------------------------------------------------

6. தஸ்ய பூமிஷு விநியோக:

தாரணை, த்யான, சமாதி ஆகிய இம்மூன்றும் ஒன்றன்பின் ஒன்றாக படிப்படியாக வளர்ந்து இலக்கை அடைய உதவும். .

தாரணையைக் கொள்ளடா த்யானம்நீயும் செய்யடா 
ஓர்முனையில் ஒன்றிநீ  சமாதிகூடி  நில்லடா 
போர்முனையாம் வாழ்வினில் வேறெதுவும் தள்ளடா 
கூடும்விரைவில் தானடா கூறும்மறையின்  பொருளடா..!

तस्य भूमिषु विनियोगः ॥६॥
tasya bhūmiṣu viniyogaḥ ||6||
This meditation is carried out in the three aforementioned successive steps. ||6||

Meditation is a gradually deepening process ( viniyoga ). Just start by concentrating ( dhāraṇā ). Over time, absorption
dhyāna ) and the experience of the essence ( samādhi ) will come naturally.


tasya (तस्य, tasya) = (g. sg. n./g. sg. m. from tad (तद्, tad)) its; whose
bhumishu (भूमिषु, bhūmiṣu) = (loc. pl. f. from bhumi (भूमि, bhūmi)) stages; states; steps; successive
viniyogah (विनियोगः, viniyogaḥ) = (nom. sg. m. from viniyoga (विनियोग, viniyoga)) application; practice

Thanks to:
--------------------------------------------------------------------------------------------

7.த்ரயம் அந்தரங்கம் பூர்வேப்ய:

தாரணையும், த்யானமும், சமாதியும் யோகத்தின் அக உறுப்புகள் எனப்படும்.


தாரணையாம் தோரணையில் 
த்யானமதாம் ஒர்முனையில் 
கூடுமச்  சமாதியுமே 
யோகம்கொண்ட அங்கமுமாம் 

त्रयमन्तरन्गं पूर्वेभ्यः ॥७॥
trayam-antarangaṁ pūrvebhyaḥ ||7||
These three steps are more internal (anga) than the previous steps. ||7||

trayam (त्रयम्, trayam) = three
antar (अन्तर्, antar) = internal
anga (अङ्ग, aṅga) = limb; part
purvebhyah (पूर्वेभ्यः, pūrvebhyaḥ) = compared to the previous ones; relative to the previous ones

Thanks to:

--------------------------------------------------------------------------------------------

8. ததபி பகிரங்கம் நிர்பீஜ அஸ்ய:

ஞானத்தின் முன் யாவும் புறமே ஆகும்


அந்தமூன்று அங்கமும் யோகத்திலே உள்ளுமாம் 
வந்தஎண்ண மடக்கியே  பொந்தத்யான வழியிலே  
நின்றநல் சமாதியும் கொண்டதாகும் விதையுமாம்  
நின்றயாவும் நின்றிட விதைகள்யாவும் சென்றிட 
ஒன்றிலா  சமாதிமுன் அவைகள்கூடப்  புறமுமாம் 

तदपि बहिरङ्गं निर्बीजस्य ॥८॥
tadapi bahiraṅgaṁ nirbījasya ||8||
However, these three steps are still external compared to ultimate knowledge (nirbija samadhi). ||8||
tat (तत्, tat) = (acc. sg. n./nom. sg. n.) that; which
api (अपि, api) = (conj./prep.) also
bahir (बहिर्, bahir) = (adv./prep.) external
anga (अङ्ग, aṅga) = (acc. sg. n./nom. sg. n./acc. sg. m.) part; limb; step
nirbija (निर्बीज, nirbīja) = (g. sg. m./g. sg. n.) seedless (samaadhi); compared to nirbija samadhi

Thanks to:


--------------------------------------------------------------------------------------------

9. வ்யுத்தான நிரோத சம்ஸ்காரயோர அபிபவ
ப்ராதுர்பாவௌ நிரோதட்சண
சித்தஅன்வயோ நிரோதபரிணாம:

எண்ணங்களை அடக்குதல் (தோன்றாமல் அழித்தல்) நிரோதமாகும். அது பரிணமிப்பது ஆங்காரமற்ற ஓங்காரமாய்.

சீறும்அலைகள் அடங்கநீயும் செல்லவேண்டும் ஆழ்கடல்
மீறும்எண்ணம் அடங்ககொள்ளும் த்யானம்பட்டு  வீழுடல்  
உதிக்குமெண்ணம் உதைத்துநீயும் அடக்குதல்  நிரோதமாம்
உதயமாகுமுண்மைத் தோற்றம் தானற்றஓம் காரமாம்

व्युत्थाननिरोधसंस्कारयोः अभिभवप्रादुर्भावौ निरोधक्षण चित्तान्वयो निरोधपरिणामः ॥९॥
vyutthāna-nirodha-saṁskārayoḥ abhibhava-prādurbhāvau nirodhakṣaṇa cittānvayo nirodha-pariṇāmaḥ ||9||

That high level of mastery called nirodhah-parinamah occurs in the moment of transition when the rising tendency of deep impressions, the subsiding tendency, and the mutable nature of humankind (chitta) converge. ||9||
vyutthana (व्युत्थान, vyutthāna) = (iic.) disjointedness
nirodha (निरोध, nirodha) = (iic.) tranquility
sanskarayoh (संस्कारयोः, saṁskārayoḥ) = (loc. du. m./g. du. m. from sanskara (संस्कार, saṁskāra)) impression based on past experience
abhi (अभि, abhi) = (prep.)
abhibhava (अभिभव, abhibhava) = (imp. 1, sg. 2) to overcome; to disappear
praduh (प्रादुः, prāduḥ) = (adv.)
bhavau (भावौ, bhāvau) = (acc. du. m./ nom. du. m., bhava (भाव, bhāva)) to ascend; to appear
nirodha (निरोध, nirodha) = (iic.) tranquility
kshana (क्षण, kṣaṇa) = (voc. sg. m., k. sa. na.) situation; moment
chitta (चित्त, citta) = (iic.) all that is mutable in human beings; mind
anvaya (अन्वय, anvaya) = connection with; relationship
nirodha (निरोध, nirodha) = (iic.) tranquility
parinamah (परिणामः, pariṇāmaḥ) = (nom. sg. m., parinama (परिणाम, pariṇāma)) transition; change; evolution
Patanjali is referring here to the transitions between the various steps of dharana, dhyana and samadhi. After dharana, or concentration, you transition to dhyana, i.e. contemplation while in a state of nirodha-parinama. This constitutes the transition to tranquility.

Thanks to:

--------------------------------------------------------------------------------------------

10. தஸ்ய பிரசாந்த வாகிதா சம்ஸ்காராத்:

நிரோதப் பரிணாமத்தால் முன் அனுபவித்திராத அமைதி கிட்டும்

அடக்கலே நிரோதமாம் அடங்குமே விரோதமாம் 
அடக்கமே சிறந்ததாம் படும்ஒளி சிரோதமாய் 
அடங்குகின்ற ஜீவனும் உயர்விலே அமர்வதாம்  
அடங்கிடா மனம்படும் இடம்கடும்  இருள்அதாம்


तस्य प्रशान्तवाहिता संस्कारत् ॥१०॥
tasya praśānta-vāhitā saṁskārat ||10||

The tranquil flow of transition to tranquility gives rise to a new impression (samskara). ||10||


tasya (तस्य, tasya) = its (referring to nirodha parinama (निरोधपरिणाम, nirodha-pariṇāma))
prashanta (प्रशान्त, praśānta) = tranquil; undisturbed
vahita (वाहिता, vāhitā) = flow
sanskara (संस्कार, saṁskāra) = impressions resulting from repeated actions; acquired habits
Each thought creates a mental impression and the creation of new connections between the brain’s neurons, thus making previous thoughts easier to recall and more familiar. The more often a thought occurs, the more anchored its neuronal path becomes. Patanjali refers to such impressions as samskaras. Even the end point of thought, which is contemplation, creates a mental impression, thus making it ever easier for us to attain this state.

Thanks to:
--------------------------------------------------------------------------------------------

தாரணை தியானம் சமாதி பற்றி இந்த சூத்திரங்களில் பேசுகிறார் பதஞ்சலி பெருமானார்.
தாரணை தியானம் சமாதி பற்றி இந்த சூத்திரங்களில் பேசுகிறார் பதஞ்சலி பெருமானார் 
ஞானத்தின் மகிமையும்.எண்ணம் அடங்கலின் மாட்சிமையும் சொல்லப்படுகிறது.