Wednesday, June 24, 2015

1.1. ஏதோ என்று அலையும் மனது (அதோ அந்த பறவை போல)



(அதோ அந்த பறவை போல)
 

அத யோகானு சாஸனம் || 

இதற்கு யோகப் பயிற்சிக்கு துணை செய்கின்ற போதனைகள் என்று பொருள்


ஏதோ என்று அலையும் மனது அமர வேண்டும்
இதோ இந்த யோகம் பூண்டு உயர வேண்டும்
ஒரே நோக்கிலே ஒரே போக்கிலே (2)
ஆத்ம தாகம் தீர யோகம் பூணுவோம்

ஏதோ என்று அலையும் மனது அமர வேண்டும்
இதோ இந்த யோகம் பூண்டு உயர வேண்டும்
ஒரே நோக்கிலே ஒரே போக்கிலே
ஆத்ம தாகம் தீர யோகம் பூணுவோம்

(MUSIC) 
லாலாலா லா
(sm)
நேற்று-இன்று என்ற-கணக்கு இதற்கு-இல்லையே
பதஞ்..சலியின் யோகம் மனிதப்-படைப்பு இல்லையே
படைப்பு இல்லையே
வாழ்வின் நியதி யோகம் என்று கொண்ட பின்னரே
பாழும் சாவைக் கொடுக்கத் தொடரும் பிறப்பு இல்லையே

ஒரே நோக்கிலே ஒரே போக்கிலே
ஆத்ம தாகம் தீர யோகம் பூணுவோம்

ஏதோ என்று அலையும் மனது அமர வேண்டும்
இதோ இந்த யோகம் பூண்டு உயர வேண்டும்
ஒரே நோக்கிலே ஒரே போக்கிலே
ஆத்ம தாகம் தீர யோகம் பூணுவோம்

(MUSIC)
லாலாலா லா
(MUSIC)
நோன்பு-போல யோகம்-தன்னைக் கொண்ட-பின்னரே
சொல்லிடாமல் அருள் விடாமல் தோன்றும் உன்னிலே
தோன்றும் உன்னிலே
வீழும்-*கோது உடலின்-வாழ்வு பிறகு-இல்லையே
இறக்க மீண்டும் பிறக்கும் வாழ்வுச் சுழலும் இல்லையே
ஒரே நோக்கிலே ஒரே போக்கிலே
ஆத்ம தாகம் தீர யோகம் பூணுவோம்
(MUSIC)
ஏதோ என்று அலையும் மனது அமர வேண்டும்
இதோ இந்த யோகம் பூண்டு உயர வேண்டும்
ஒரே நோக்கிலே ஒரே போக்கிலே
ஆத்ம தாகம் தீர யோகம் பூணுவோம்
(MUSIC)
லாலாலா லா
(MUSIC)
கோடி-ஜென்மம் புரிந்த-வினைகள் கழிந்து பெருநிலை
அடையக்-கொடுக்க வேண்டும்-யோகம் என்ற சிறுவிலை
யோகம் சிறுவிலை
மிச்சமின்றி வினைகள்-கழியத் தோன்றும் விடுதலை
அடையப்-பூண வேண்டும்-யோகம் வேறு-வழியிலை
ஒரே நோக்கிலே ஒரே போக்கிலே
ஆத்ம தாகம் தீர யோகம் பூணுவோம்
(MUSIC)
ஏதோ என்று அலையும் மனது அமர வேண்டும்
இதோ இந்த யோகம் பூண்டு உயர வேண்டும்
ஒரே நோக்கிலே ஒரே போக்கிலே
ஆத்ம தாகம் தீர யோகம் பூணுவோம்


*கோது = குற்றம்/ குறைகளுடன் கூடிய
___________


 

3 comments:

  1. Mr Sridharan, hats off to you for your wonderful work. I congratulate you for initiating such a comprehensive manner of putting Patahnjali Maha Rishi's Yoga Suthra, It is a pity that people are not aware of Yoga Sutram. All they know is Yogasanam. I do not belittle Yogasanam but Yoga Sutram is what is the need of the hour - cleansing the mind is important before attempting anything else in this "Mrithya :Logam" as stated by Bhagwan Sri Krishna. My best wishes for you to achieve greater laurels in the future.

    ReplyDelete
  2. Mr. Chakrapani, You may like this Sir. https://sites.google.com/view/parayanam/home

    ReplyDelete