( இசைத் தமிழ் நீ செய்த )
தத்ர ஸ்திதௌயத்னோப்யாஸ ||
சாதனை
சாதனையின்
மூலம் செயல்
படுதல் ஆன்மீக முன்னேற்றத்தின் முதல்
படி
_________
புரிந்திடு நீ இன்றே உயர் சாதனை..
நீ உயர்ந்திடவே அதுவே முதல் போதனை
விரைவாய்..
புரிந்திட..வே-வேண்டும் உயர் சாதனை (2)
நீ உயர்ந்திடவே அதுவே முதல் போதனை ..
புரிந்திடவே வேண்டும் உயர் சாதனை
நீ உயர்ந்திடவே அதுவே முதல் போதனை
புரிந்திடவே வேண்டும் உயர் சாதனை .
(Short music)
பசி உணவைப் பார்க்கத் தீர்ந்திடுமா ..மனிதா .. ஆ..
பசி உணவைப் பார்க்கத் தீர்ந்திடுமா
பசி உணவைப் பார்க்கத் தீர்ந்திடுமா
உணவை உண்ணாமலே உடலும் வாழ்ந்திடுமா
(Short Music)
(Short Music)
பசி உணவைப் பார்க்கத் தீர்ந்திடுமா
உணவை உண்ணாமலே உடலும் வாழ்ந்திடுமா
மலர்-ஸ்பரிசம் வாசம் மூட்டிடுமா (2)வெற்றி கிடைத்திடுமோ போரின் கதை படித்தால்
வெற்றி கிடைத்திடுமோ போரைத் துறந்தமர்ந்தால்
புரிந்திடவே வேண்டும் உயர் சாதனை
(MUSIC)
சிவனருள் ஆசிபெற்ற ரிஷியும் சொன்னார்
காமன் மூவிழி பார்த்தெரித்த சிவனும் சொன்னார்
(2)
சித்துக்களைக் கடந்த பதஞ்சலி சொன்னபின்னும் (2)
மோகமுறும் நெஞ்சே வாளாவிருப்பதென்ன (2)
புரிந்திடவே வேண்டும் உயர் சாதனை
(Short Music)
பாய்மரம் இலையென்றால் ஓடிடுமா
ஓடம் துடுப்பின் முயற்சி அல்லால் நகர்ந்திடுமா + (SM)
பயிருக்கு நீரூற்றி உழைக்கின்ற செயல்போல் + (SM)
உன்சாதனை இலையென்றால்
யோகத்தின் பயன் இல்லை (3)
பாய்மரம் இலையென்றால் ஓடிடுமா
ஓடம் துடுப்பின் முயற்சி அல்லால் நகர்ந்திடுமா + (SM)
பயிருக்கு நீரூற்றி உழைக்கின்ற செயல்போல் + (SM)
உன்சாதனை இலையென்றால்
யோகத்தின் பயன் இல்லை (3)
________
No comments:
Post a Comment