Monday, July 13, 2015

1.19. சாதனை சாவில்(ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்)


 
( ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் )
 
பவப்ரத்யயோ விதேஹ
ப்ரக்ருதி லயானாம் ||
யோகம் பிறவி தாண்டித் தொடரும்
யோகப் பயிற்சியில் சம்ப்ரக்ஞாத சமாதி கூடு முன் உடலைத் துறப்பவர் மீண்டும் பிறக்குங்கால் அந்தப் பதிவுகளுடன் பிறக்கின்றனர்.  அடுத்த பிறவியில் முற் பிறவியில் விட்ட இடததிலின்று யோகம் தொடர்கிறது.
___________
 
சாதனை சாவில் முடிவது கிடையாதே
பிறவிகள் தோறும் தொடர்ந்திடும் அது தானே
அது தொடரும் தானே-தானே எனக் கூறும் மொழி கேளேன்
நிஜம் விளங்கும் தானே-தானே எனச் சாதனை புரிவாயே
சாதனை சாவில் முடிவது கிடையாதே 
பிறவிகள் தோறும் தொடர்ந்திடும் அது தானே
(MUSIC)
உலகில் மானிட வடிவினிலே என் இறைவன் வந்தான் நேரினிலே
ப்ரேமை உன் வடிவம் எனச் சொன்னான் 
அன்பெனும் சாதனை புரியவைத்தான்
அன்பினில் வேதனை தீர்த்து வைத்தான் 
தொடரும் தானே தானே எனக் கூறும் மொழி கேளேன்
நிஜம் விளங்கும் தானே-தானே எனச் சாதனை புரிவாயே
சாதனை சாவில் முடிவது கிடையாதே
 (MUSIC)
சாதனை என்பதன் முடிவினிலே சாதல் என்றொரு பயமில்லையே
நீயே அறியா விதத்தினிலே நிழல் நிஜமாகும் முடிவினிலே
*நிஜம் நிஜமாகும் முடிவினிலே 
தொடரும் தானே தானே எனக் கூறும் மொழி கேளேன்
நிஜம் விளங்கும் தானே-தானே எனச்-சாதனை புரிவாயே
சாதனை சாவில் முடிவது கிடையாதே
பிறவிகள் தோறும் தொடர்ந்திடும் அது தானே
தொடரும் தானே தானே எனக் கூறும் மொழி கேளேன்
நிஜம் விளங்கும் தானே-தானே எனச் சாதனை புரிவாயே
சாதனை சாவில் முடிவது கிடையாதே
 
 ______________
 
 
 
 


No comments:

Post a Comment