Tuesday, August 25, 2015

1.27. ஓம் என்பதே ( செல்லக்கிளியே )

( செல்லக்கிளியே )
தஸ்ய வாசக பிரணவ : ||
ஓம் என்னும் பிரணவ ரூப நாயகன்
இறைவன் ஓம் என்னும் தூயப் பிரணவ மந்திரத்தால் அறியப்படுபவன்
_____
ஏழுலகும் கொண்டுநின்ற அண்டம்செய்த தாவிலே 
மூழுலகைக் கூர்மமாகக் காத்துநின்றாய் உ விலே
ஊழிலுயிர்கள் ஓய்வுறவே மறைத்துக் கொண்டாய் மாவிலே
ஏழ்பிறப்பு களைவதுநீ மூன்றும் கலந்த ஒமிலே ..!
_______________________________________

ஓம் என்பதே-இ..றைவன்-மூச்சு கொண்டதில்லையே என்றும்-பேச்சு
 (2)
 (Short Music)

 தூங்கும்-பொழுதினில் மாலவனே மோக்ஷம்-அருளிடும் மாதவனே
(2)
 ஓம் என்பதே-இ..றைவன்-மூச்சு கொண்டதில்லையே என்றும்-பேச்சு
கொண்டதில்லையே அவன்  வெற்றுப் பேச்சு
 (MUSIC)

 திங்கள் அவன்-சிரிப்பு செவ்வாய் தரும்-சிறப்பு
எங்கும்-ஒ..ளிகொ..டுத்தி..ருக்கும்-*விவஸ்வான்
 (1+SM+1)
 கத்தும் கடல் அலையில் சங்கில் எழும் ஒலியில்
 சித்தம் குளிரவைக்கும் சத்தம் அவன்-தான்
 (Short Music)
 ஓம் என்பதே-இ..றைவன்-மூச்சு கொண்டதில்லையே என்றும்-பேச்சு
 ஓம்.. ஓம்.. ஓம் ஓம்-நம ஓம் (2)




*விவஸ்வான்= சூரிய பகவான்
________



No comments:

Post a Comment