( தரை மேல் பிறக்க வைத்தான் )
தஜ்ஜப: ததர்த்தபாவனம் ||
ஒன்றி
ஓதற்குரிய ஓம்
ஓம் என்னும்
பிரணவ மந்திரத்தை அதன் பொருளுணர்ந்து
ஒன்றி ஓத வேண்டும்
திருவேறும் படியாகத் தினந்தோறும் உருவேற்றி
உருக்கோடும் உணர்வோடு உருவாக்கும் முனைப்போடு
உருக்கோடும் உணர்வோடு உருவாக்கும் முனைப்போடு
தானேற்ற கருகாக்கும்
தாய்போலக் கருத்தோடு
ப்ரணவமதைச் செபித்திடுவாய் பரம்பொருளின் நினைவோடு..!
--------------------------------------------------------------------------------------
விருத்தம்
உலகத்தைத் தோற்றும் விதையே ஒம்..
உனக்குள்ளே தூங்கும் சிலையே ஓம்
உழைப்பினால் தோன்றும் இறையே ஓம்..
பெருமான் பேசும் ஒலியே ஓம்
___________________________________________
உரைப்போம் ஓம்-ஓம்-ஓம் நெஞ்சினில் நின்றாட நாம் உரைப்போம்
நனைப்போம் நாம்-நனைப்போம் நெஞ்சினை அன்பாலே நாம் நனைப்போம்
(2)
உரைப்போம் ஓம் ஓம் ஓம்
(MUSIC)
கட்டியம்-கூறி உனக்குமுன்-செல்லும் அருவாய் உன்வினை முன்னே
தொலைத்திடுவாயே அதை-உடன்-நெஞ்சே உரைப்பாய் ஓம்ஜபம் இன்றே
உண்மை தன்னை உடலாய்க்கொண்ட உணர்வால்-வந்த-கேடு-(2)
ஜபத்தால்-விலகும் தானாய்-விலகும் உறையாம்-உந்தன் யாக்கை
கொள்வாய் ஆன்ம வாழ்க்கை
உரைப்போம் ஓம்-ஓம்-ஓம் நெஞ்சினில் நின்றாட நாம் உரைப்போம்
நனைப்போம் நாம்-நனைப்போம் நெஞ்சினை அன்பாலே நாம் நனைப்போம்
(MUSIC)
*காரிருள்-நடுவே பயணம்-போனால் பயத்தைப் போக்கிடும் ஓம்ஓம்
தனியாய்ச்செல்லத் துணையைப்போலே துணிவைத்தந்திடும் ஓம்ஓம்..
பலநாள்-சோகம் ஒருநாள்-போகும் அந்நிலை-தந்திடும் ஓம்ஓம் (2)
அறிவாய்-நெஞ்சே விரைவாய்-இன்றே
உரைப்பாய் ஓம்-எனும் ப்ரணவம் (2)
உரைப்போம் ஓம்-ஓம்-ஓம்
நெஞ்சினில் நின்றாட நாம் உரைப்போம்
நனைப்போம் நாம்-நனைப்போம் நெஞ்சினை அன்பாலே நாம் நனைப்போம்
உரைப்போம் ஓம்-ஓம்-ஓம்
*கறுத்த காரண தேகத்தைக் கடக்கும் கடைசிப் பயணம். The most difficult is the journey through the causal body to traverse and transcend it. It is compared to a journey of a blind man through a dark jungle where there are wild animals. One does not know where the journey will lead to and FEELS that one does not have any support/help of company in that journey. But there is a company, there is a support and that is the name of the God. Trusting the God, having His name (Aum) as the company, one should progress steadily and fearlessly in that journey. When the scary sounds of wild animals ( created by One's own Karma), are heard, they have to be silenced by a far more comforting sound of Aum and the journey continued....!
_________________
ReplyDeleteWhat is the meaning of OM as per Patanjali Yoga Sutra ?