Wednesday, September 9, 2015

1.30. துள்ளும் மனதின் சீர்குலைவு (துள்ளித் திரிந்த பெண் ஒன்று)

( துள்ளித் திரிந்த பெண் ஒன்று )

ஸம்சய  ப்ரமாதாலஸ்யாவிரதி

ப்ராந்திதர்சனாலப்த 

பூமிகத்வானவஸ்திதத்வானி 

சித்தவிக்ஷேபாஸ்தேஸந்தராயா   :  

மனதின் சீர்குலைவால் ஏற்படும் தடைகள்

நோய், மந்த புத்தி, சந்தேகம், கவனக்குறைவு, சோம்பல், உணர்ச்சி வயப்படுதல்,தவறான உணர்வுஎதிலும் உறுதி இன்மைசாண் ஏற முழம் சறுக்கல் 

இவைதான் மனதின் சீர்குலைவால் ஏற்படும் தடைகளாகும்  

______________________

துள்ளும் மனதின் சீர்குலைவு தரும் தடைகள் பலப் பலது
(sm)
துள்ளும் மனதின் சீர்குலைவு தரும் தடைகள் பலப் பலது
அடர்ந்த காட்டின் இருள் என்று வந்து மயக்கும் அது தொடர்ந்து
துள்ளும் மனதின் சீர்குலைவு தரும் தடைகள் பலப் பலது
(MUSIC)

எதிலும் உறுதி நிலை குலைந்து மந்தம் சேருமே வந்து
(2)
உடலில் சோம்பல் குடி-புகுந்து நோய்கள் தாக்குமே தொடர்ந்து

(2)
துள்ளும் மனதின் சீர்குலைவு தரும் தடைகள் பலப் பலது
(MUSIC)

எதிலும் ஐயம் மனதிலே வந்தே சிதறும் கவனமதே (2)
முள்ளில் படுக்கை கொண்டது போல் எதிலும் உணர்ச்சி வயமங்கே

துள்ளும் மனதின் சீர்குலைவு தரும் தடைகள் பலப் பலது
(MUSIC)

ஆசை-நெஞ்சை அலைக்கழிக்கும் அமைதிசென்று மனமதிரும் (2)
ஓசையின்றி பல தடைகள் வாழ்வில் வந்து சேர்ந்திடுமே

துள்ளும் மனதின் சீர்குலைவு தரும் தடைகள் பலப் பலது
அடர்ந்த காட்டின் இருள் என்று வந்து மயக்கும் அது தொடர்ந்து
துள்ளும் மனதின் சீர்குலைவு தரும் தடைகள் பலப் பலது

_____________

No comments:

Post a Comment