38. ஸ்வப்ன நித்ரா ஜ்ஞானலம்பனம் வா ||
தாக்கம் போக்கும் தூக்கம்
ஆழ்ந்த தூக்கத்தில் உறும் கனவுலக அமைதியினை சிந்திக்கவும் மனதில் அமைதி சேர்கிறது
__________________________
எண்ணம் வந்துனைத் தாக்கும்
அதைச் சற்றே நிறுத்திடும் தூக்கம்
(2)
(2)
சொல்-செயல் தூக்கத்தில்-ஏது
நெஞ்சின் ஆட்டம் அதில்-கிடையாது
(2)
எண்ணம் வந்துனைத் தாக்கும்
அதைச் சற்றே நிறுத்திடும் தூக்கம்
(MUSIC)
மாலை-சென்றால் வரும் தூக்கம்
அதும் இலை-என்றால் மனம் உலை-தான்
(2)
எது இருந்தாலும் தூக்கம்
இல்லை என்றால் பெரும் தொல்லை (2)
எண்ணம் வந்துனைத் தாக்கும்
அதைச் சற்றே நிறுத்திடும் தூக்கம்
(MUSIC)
கரையில் கடல்-ஆர்ப்பரிக்கும்
அது நடுவில் அமைதியில் உறங்கும்
(2)
துன்பமும் உறக்கத்தில் மறக்கும்
அதுவாய் மன அமைதியும் பிறக்கும்
(2)
(2)
பேய்-மனம் அமைதியில் உறங்கும்
எண்ணம் வந்துனைத் தாக்கும்
அதைச் சற்றே நிறுத்திடும் தூக்கம்
சொல்-செயல் தூக்கத்தில் ஏது
நெஞ்சின் ஆட்டம் அதில்-கிடையாது
எண்ணம் வந்துனைத் தாக்கும்
அதைச் சற்றே நிறுத்திடும் தூக்கம்
No comments:
Post a Comment