விதைகொண்ட சமாதி
சவிதர்க்க , நிர்விதர்க்க, சவிசார,நிர்விசார ஆன இந்த நான்கு சமாதி நிலைகளும் விதைகொண்ட
சமாதி எனப்படுபவை. இவற்றில் வினைப்பதிவுகள் முற்றிலும் முளையறுக்கப் படுவதில்லை
________________
நிர்விதர்க்கம் சவிதர்க்கம்-என்றே
அந்த-சூக்குமத்தில் கூட-ரெண்டு உண்டே
(2)
த்யானப்பொருள் ஸ்தூலம்-அன்றி ஒன்றி
அந்த சூக்குமத்தில் கொள்..வதும் நன்றே
(2)
நிர்விதர்க்கம் சவிதர்க்கம்-என்றே
அந்த-சூக்குமத்தில் கூட-ரெண்டு உண்டே
(MUSIC)
தர்க்கம்-என்பது இரண்டில்-இருக்குது
அதனைக்-கடந்தது இரண்டு இருக்குது
(2)
ஸ்தூலப்-பொருளிலே இரண்டு-ஆகுது
சூக்கு..மத்திலே இரண்டு- இருக்குது
நிர்விதர்க்கம் சவிதர்க்கம்-என்றே
அந்த-சூக்குமத்தில் கூட-ரெண்டு உண்டே
(MUSIC)
தர்க்கத்திலே-நீ பொருளை அறியணும்
அறிந்தவுடன்-நீ மேலும் முயலணும்
(2)
(2)
பெயரும்-பொருளையும் கடக்கப் பாக்கணும்
கடந்த பிறகு-முன்..னேறிப் போகணும்
நிர்விதர்க்கம் சவிதர்க்கம்-என்றே
அந்த-சூக்குமத்தில் கூட-ரெண்டு உண்டே
த்யானப்பொருள் ஸ்தூலம்-அன்றி ஒன்றி
அந்த சூக்குமத்தில் கொள்வதும் நன்றே
நிர்விதர்க்கம் சவிதர்க்கம்-என்றே
அந்த-சூக்குமத்தில் கூட-ரெண்டு உண்டே
(MUSIC)
*பொருளைக் கடந்தால் பாதை-காணலாம்
பாதையைக் கண்டால் உயரப் பறக்கலாம்
(2)
(2)
உயரப்-ப..றந்தால் தன்னை-மறக்கலாம்
**தன்னை-ம..றந்தால் வினையை-அறுக்கலாம்
செயல் பலனை மறந்தால் வினையை அறுக்கலாம்
நிர்விதர்க்கம் சவிதர்க்கம்-என்றே
அந்த-சூக்குமத்தில் கூட-ரெண்டு உண்டே
(MUSIC)
***அறிவினைக் கடந்து நீ-உள்..ளே-போ
அன்பினைத்-தொடர்ந்து விட்டிடாமல்-போ..ஆ ஆ
ஆனந்தம்-பிறந்து ஆடிடு நீ-போய் ..ஆ ஆ
வேறென்ன இருக்கு நீ-அவன் தான்-போ..! (2)
நிர்விதர்க்கம் சவிதர்க்கம்-என்றே
அந்த-சூக்குமத்தில் கூட-ரெண்டு உண்டே
த்யானப்பொருள் ஸ்தூலம்-அன்றி ஒன்றி
அந்த சூக்குமத்தில் கொள்வதும் நன்றே
நிர்விதர்க்கம் சவிதர்க்கம்-என்றே
அந்த-சூக்குமத்தில் கூட-ரெண்டு உண்டே
*பொருள் மோகத்தைக் கடந்து யோகம்
கொண்டால் த்யானம் கூடும். அதில் வழி பிறக்கும்
**தான் என்ற உணர்வு
/ அஹங்காரம் இல்லையேல் வினைப் பதிவு ஏது
*** கடைசி கோசமான விஞ்ஞான-மய கோசத்தைக் கடந்து,
அன்பென்னும் ஆறினைத் தொடர்ந்து ஆனந்த சாகரத்தை அடைந்து அதனில் அமிழ்ந்து ஆனந்தக் கூத்தாடு..
அவனைப்போல் ..!
No comments:
Post a Comment