Wednesday, May 11, 2016

1.43.நிர்விதர்க்கம் என்பதண்ணே(அந்தரங்கம் நானறிவேன்)





நிர்விதர்க்க சமாதி
பெயர், பொருளின் ஞானம் (ஊகத்தின் அன்றி தர்க்கத்தின் பாற்பட்டதான) நினைவுப் பதிவின் துணை இல்லாமல் பொருள் விளக்கம் தோன்றுகின்ற சமாதி நிலையே நிர்விதர்க்க சமாதி. (தர்க்கம் = logic ).
__________

நிர்விதர்க்கம் என்பதண்ணே என்னவென்று சொல்லுங்கண்ணே
(1+SM+1)
சொல்விளக்கம் ஏதுமின்றி மெய்-விளக்க..மாகும்-தம்பி (2) 

ஊகம்-தர்க்கம் போகுதலே நிர்வி..தர்க்கமாகும் தம்பி (2)

நிர்விதர்க்கம் மேலுமில்லை மற்றவைகள் தேவையில்லை
(MUSIC)
தேடிச்சென்ற பொருளைக்-கண்டு மூடிக்-கொண்ட கண்கள் 
ஒரு கணப்பொழுதும் திறப்பதில்லை த்யானம் விட்டுத் தாங்கள்
(2)
இதைத்தானே கூறுகிறீர் திரும்பத்-திரும்பத் தாங்கள் (2) 
தினம்தோறும் சோதனை-போல் எழுகிறதே சோம்பல்
இன்னும்-த்யானமா நன்மையல்லவா
நிர்விதர்க்கமா இன்னும் தர்க்கமா
நிர்விதர்க்கம் மேலுமில்லை மற்றவைகள் தேவையில்லை
(MUSIC)
தாமரையின் இதழ்-விரிந்து உன்..னெதிரில்-தோன்றி
உண்மை-தானெழுந்து விளங்கிவிடும் கேளாய்-இதைத் தம்பி
(2)
புரியாமல் சாதனைகள் புரிகிறேனெப்..போதும்
புரியும்-என் சாதனைகள் எதுவரையில் போகும்
அறியாமை எப்படி-என் த்யானத்திலே போகும்
இன்னும் த்யானமா நன்மையல்லவா
நிர்விதர்க்கமா இன்னும் தர்க்கமா
நிர்விதர்க்கம் என்பதண்ணே என்னவென்று சொல்லுங்கண்ணே
நிர்விதர்க்கம் மேலுமில்லை மற்றவைகள் தேவையில்லை

ஆ ஆ ..



No comments:

Post a Comment