Wednesday, May 11, 2016

1.47. நீ நன்கு கொண்ட (என் அன்னை செய்த பாவம்)




நிர்விசார வைசாரத்யேத்யாத்ம   பிரசாத : ||

நிலையான சுத்த நிர்விசார சமாதி கூடுவதென்பது விரைவில் தெரியவரும் உண்மைக்காட்சியை அறிவிப்பதாகும். 
---------------------

நீ நன்கு-கொண்ட யோகம் நல் த்யானம்-கூடுது 
அதைப் பழகப்-பழகக்கூடும் ரிதம்..பரம்-அது
(1+Short Music+1)
நீ நன்கு-கொண்ட யோகம்
( Short Music )
அந்த ரிதம்ப..ரமும்-கூறும் ஓர்-சேதி உள்ளது 
சொந்த உண்மை-விரைவில் புலனாகும் என்ப..தாம்-அது
உண்மை தோன்றுது ..
நீ நன்கு-கொண்ட யோகம் நல் த்யானம்-கூடுது 
அதைப் பழகப்-பழகக்கூடும் ரிதம்..பரம்-அது
நீ நன்கு-கொண்ட யோகம் 
(MUSIC)
இரவினிலும் பகல்-ஒளிரும் உனக்கெனத்-தானே 
எந்த நிலையிலுமுன் நினைவிருக்கும் அவனிடம்-தானே
அருவினையும் உருவகிக்கும் திறம்-வரும் தானே 
அதில்-ஒளிந்திருக்கும் நிஜமருளும் ரிதம்பரம் தானே
சிதம்பரம் தானே
நீ நன்கு-கொண்ட யோகம்
(MUSIC)
உலகமெல்லாம் ஒரு-பொருளாய்த் தெரிந்திடும்-தானே 
எங்கும்-கரைந்திருக்கும் விழுப்பொருளும் புரிந்திடும்-தானே 
பிறவிக்-கூண்டு உனக்கு-என்றும் என்றும்-இல்லையே 
நீ பிறக்க-இறக்கும் ஒரு-கொடுமை இனியும்-இல்லையே
நீ நன்கு-கொண்ட யோகம் நல் த்யானம்-கூடுது 
அதைப் பழகப்-பழகக்கூடும் ரிதம்..பரம்-அது
நீ நன்கு-கொண்ட யோகம்


No comments:

Post a Comment