Wednesday, May 11, 2016

1.42. அந்த பெயர் வார்த்தை (அந்த சிவகாமி மகனிடம்)




சவிதர்க்க  சமாதி
பெயர்/வார்த்தை, அதன் பொருள் , உருவம் ,பொருளைப் பற்றிய அறிவோ (knowledge based on Logic) அல்லது ஊகமோ (Imagination – Deduction) இருக்கும் சமாதி நிலை சவிதர்க சமாதி ஆகும்.
இந்த நிலையிலும் மேல் கூறியவை இருக்கும் வரையில் (இருப்பதாலே ) மயக்கத்துக்கு இடமுண்டு.
_______________

அந்த பெயர்-வார்த்தை பொருள்-உரு இருக்கும் வரையிலே-அது சவிதர்க்கம் என்று-தானே ஆகுது
(1+SM+1)
அச்-ச..மாதி-என்றும் நன்று-என்று ஆனபோதிலும்
மீதம் இருக்கும்-மயக்கம் தோன்றும்-தொடருமே
(2)
அந்த பெயர்-வார்த்தை பொருள்-உரு இருக்கும் வரையிலே-அது சவிதர்க்கம் என்று-தானே ஆகுது
(MUSIC)
கண்கள் மூடியே நீ-கொள்ளும் த்யானம்
தன்னிலும் இருந்திடும் எண்ணத்தின்-வேகம்
(2)
பெயர்-பொருள்-ஊகங்கள் இருக்கிறதாலே
அவனை-நம்பாமல் நீ-எண்ணுறாயே
(2)
எண்ணம்-மயங்குமே மயக்கிடும்-ஆளையே (2)
நிழல்-போலும் நிஜம்-போலும் காட்சியாமே
அந்த நிழல்-தோற்றம் நிஜம்போலே ஆவதாலே-நிஜம் நிழலாய்ப் பின்-போகுமாமடி
(MUSIC)
நிலையென த்யானமும் கூடியபோதும்
சிலையெனச் சித்தமும் இருக்கிற போதும்
நிலையென த்யானமும் கூடியபோதும்

அலையின்றிச் சித்தமும் இருக்கிற போதும்

பொருளின் ஊகமோ அது-தரும் ஞானமோ
நின்றே தோன்றினால் அது-நிறை ஞானமோ
(2)
பெயரோ-உருவமோ அதன்-வழி ஊகமோ (2)
போகாது இருந்தால்-சவி..தர்க்கமாமே
என்றும் போகாது இருந்தால்-சவி..தர்க்கமாமே
என்று அறிவாயே..
என்று நன்றாக உண்மையை  அறிந்து கொள்ளு நீ
அச்-ச..மாதி-என்றும் நன்று-என்று ஆனபோதிலும்
மீதம் இருக்க-மயக்கம் தோன்றும்-தொடருமே
ஆ ஆ 
 அந்த பெயர்-வார்த்தை பொருள்-உரு (3)
இருக்கும் வரையிலே-அது சவிதர்க்கம் என்று-தானே ஆகுது



No comments:

Post a Comment