அகர-உகர மகர-ஒலி கேட்க-வைத்தாய் ஸ்வாமீ
ஜோதி-புருவ இடைதனிலே ஒளிரவைத்தாய் ஸ்வாமீ
பரம் மிசை ஏகிடும்-மார்க்கம் எடுத்துரைத்தாய் குருவே
ஈன்றவன் போல-ஐயம் தெளிய-வைத்தாய் ஸ்வாமீ
(SM)
அகர-உகர மகர-ஒலி கேட்க-வைத்தாய் ஸ்வாமீ (2)
ஜோதி-புருவ இடைதனிலே ஒளிர-வைத்தாய் ஸ்வாமீ (2)
அகர-உகர மகர-ஒலி கேட்க-வைத்தாய் ஸ்வாமீ
(SHORT MUSIC)
பரம்-மிசை ஏகிடும்-மார்க்கம் எடுத்துரைத்தாய் (2)
ஈன்றவன் போல-ஐயம் தெளிய-வைத்தாய் (2)
உயர்வின் வழி-நன்றாய் தெளிய-வைத்தாய் (2)
தூங்கிய-பாம்பெழுந்து ஆடவைத்தாய்-ஐயா ஆடவைத்தாய்
அகர-உகர மகர-ஒலி கேட்க-வைத்தாய் ஸ்வாமீ
(MUSIC)
எண்ணம் நிறுத்தும்-ஓர் வழி-கொடுத்தாய் (2)
ஏற்றம்-தரும் மனதின் ஆற்றல்-தந்தாய் (2)
மெய்யைத் தெரிய-வைக்கும் வழி-கொடுத்தாய் (2)
சிவன்-சொன்ன விதம்-வந்து பதஞ்சலியாய் (2)
ஓம்-கார இசை-கண்டு உய்ய-வைத்தாய் ஸ்வாமீ
No comments:
Post a Comment