Showing posts with label Sadhana Padham. Show all posts
Showing posts with label Sadhana Padham. Show all posts

Wednesday, April 19, 2017

2.11. ஒரே ஒரு மார்க்கம்(இதோ எந்தன் தெய்வம்) **



ஒரே-ஒரு மார்க்கம் உண்டாமே-அதில் தடை-தரும் தாக்கங்களும் துண்டாமே
(2)
யோகத்தடைகள் விலக்க-த்யானம் ஒன்றுதானடா
அதில் கிடைக்கும்-விடையில் உனக்குப்-பிறகு கேள்வி ஏதடா
யோகத்தடைகள் விலக்க-த்யானம் ஒன்றுதானடா
அதில் கிடைக்கும்-விடையில் உனக்குப்-பிறகு வேள்வி ஏனடா
ஒரே-ஒரு மார்க்கம் உண்டாமே-அதில் தடை-தரும் தாக்கங்களும் துண்டாமே
(MUSIC)
அதே சாதனையில் வேதனையின் தடுப்பாம்
அதே சாதனையில் இரும்-உயிரின் துடிப்பாம்
(2)
அடே வேடமென வேறெதுவும் நடிப்பாம்
தரும் த்யானமதே இறைவடிவில் பிடிப்பாம்
(2)
வேஷம்-கொண்டு வெளியுலகில் ஆட்டம் ஏனடா
உன் இதயம் என்னும் கோயிலிலே தெய்வம் பாரடா
ஒரே-ஒரு மார்க்கம் உண்டாமே-அதில் தடை-தரும் தாக்கங்களும் துண்டாமே
(MUSIC)
இறை நாட்டத்தினில் நீ புரியும் த்யானம் 
அதே நலம்-கொடுக்கும் என்று-சொல்லும் வேதம்
அதே உபநிடதம் எடுத்துரைக்கும் போதம்
அது கொடுத்திடுமே இறைவனுடன் யோகம்
அதை உரைத்திடுமாம் பதஞ்சலியின் யோகம்
ஒரே-ஒரு மார்க்கம் உண்டாமே-அதில் தடை-தரும் தாக்கங்களும் துண்டாமே
(MUSIC)
தன் உள்ளுக்குள்ளே செல்பவனே மேதை
வெளியில் வேஷத்துடன் திரிபவனோ பேதை
அவன் மலரடியை நினைப்பதுவே த்யானம்
அது கடினமென்றால் மறதியொன்றே போதும்
உந்தன் வெளியுலக  மறதியொன்றே போதும்
வேஷம்-கொண்ட கோஷம்-தன்னில் அறிவு ஏதடா
வெறும் மௌனம்-கொண்ட த்யானம் ஒன்றே பெய்யும் தேனடா
ஒரே-ஒரு மார்க்கம் உண்டாமே-அதில் தடை-தரும் தாக்கங்களும் துண்டாமே

வா ..வா..வா….. வா ..வா..வா….


----------------------------


Tuesday, April 18, 2017

2.10. கிள்ளணுமே நீ கிள்ளணுமே(கண்படுமே பிறர் கண்படுமே)




10. தே ப்ரதிப்ரஸவ ஹேயா: சூட்சுமா: ||

முளையிலேயே களை எடு
* சாதனை பாதையில் தடைகளாக வரும் ஐந்து  சோதனைகளாவன :
அறியாமை, உடல் பற்று (மரண பயம் ), ஆசை, ஆணவம், வெறுப்பு
மேற்கூறிய ஐந்து வகையான துன்பங்களையும் அது தோன்றும் காரணத்தை அறிந்து முளையிலேயே கிள்ளி அழிக்க வேண்டும்.
____________________-

கிள்ளணுமே-நீ கிள்ளணுமே-அதை வளர்ந்திட-விடலாமா
நீ பூண்டிடும்-யோகப் பாதையில்-தடைகள் இருந்து-தடுக்கலாமா
*ஐந்தெனவே ஐந்தெனவே இருந்திடும் எனத்தாம்மா
சொல்லிச்-சென்றார் சொல்லிச்-சென்றார் பதஞ்சலி பெருமானார்
கிள்ளணுமே-நீ கிள்ளணுமே-அதை வளர்ந்திட-விடலாமா
நீ பூண்டிடும்-யோகப் பாதையில்-தடைகள் இருந்து-தடுக்கலாமா
(MUSIC)
நிஜமறியாமை-ஒன்றாலே மதி-தடுமாறும் தன்னாலே (2)
யாரென்ற-போதும் உடலினில்-பற்றும் மரணத்தின்-பயமும் தோன்றும்
அறி..யாமை-ஒன்றாலே பலப்பலத்-தடைகள் சாதனை-வழியை மூடும்
 கிள்ளணுமே-நீ கிள்ளணுமே-அதை வளர்ந்திட-விடலாமா
நீ பூண்டிடும்-யோகப் பாதையில்-தடைகள் இருந்து-தடுக்கலாமா
(MUSIC)
ஆணவம்-ஆசையும் வந்தாலே யார் சொன்னாலும்-நல்லதைக்-கேளாதே  (2)
மனதினில்-வெறுப்பும் தோன்றிடும்-அதுவும் மயங்கிடுமே-கொஞ்சமேனும்
பின்னர் சாதனை-வழியில் சென்றிட-அதற்கு தோன்றிடுமா-எண்ணிப்பாரும்
கிள்ளணுமே-நீ கிள்ளணுமே-அதை வளர்ந்திட-விடலாமா
நீ பூண்டிடும்-யோகப் பாதையில்-தடைகள் இருந்து-தடுக்கலாமா




2.9.3.வந்திடுமே பயம் வந்திடுமே(கண்படுமே பிறர் கண்படுமே)



வந்திடுமே-பயம் வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா
அது சென்றிடும்-நாளில் எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா
(2)
என்பதுவே என்பதுவே பதஞ்சலி-பெருமானார்
சொல்லியதே சூத்திரத்தில் எம-பயம் நமை-விடுமா
வந்திடுமே-பயம் வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா
அது சென்றிடும்-நாளில் எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா
(MUSIC)
காடுகள் பலமுறை-சென்றாயே அங்கு-நீ-தீயால் வெந்தாயே (2)
வாழ்ந்திடும்போதே பூமியில்-பலபேர் சாவதைக்-கண்டதனோடு
பல் பிறப்பினில்-நீயும் செத்ததன்-பயமும் இருந்திடும் என்றுமுன்னோடு
வந்திடுமே-பயம் வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா
அது சென்றிடும்-நாளில் எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா
 (MUSIC)
எங்கோடி..னாலும் விடாதே மரணத்தின்-பயமும் போகாதே (2)
*யோகி-என்றாலும் மரணத்தைக்-கண்டால் பயந்திடுவார்-கொஞ்ச நேரம்
இந்த மானிட-உடலில் வாழ்கிற-வரைக்கும் தொடர்ந்திடும்-மரணத்தின் பயமும்
வந்திடுமே-பயம் வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா
அது சென்றிடும்-நாளில் எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா

*Auto biography of a Yogi Chapter 42 – Last days with my Guru

For a moment, Master trembled like a frightened child. ("Attachment to bodily residence, springing up of its own nature [i.e., arising from immemorial roots, past experiences of death]," Patanjali wrote,5 "is present in slight degree even in great saints." In some of his discourses on death, my guru had been wont to add: "Just as a long-caged bird hesitates to leave its accustomed home when the door is opened.")



2.9.2.நிற்பதில்லையே சாவின் கூத்து (செல்லக்கிளியே மெல்லப் பேசு)


நிற்பதில்லையே சாவின்-கூத்து நெஞ்சில்-பயமே பார்த்துப்-பார்த்து (2)
(SM)
தூக்கம்-போலத் தான் சாவெனவே பகரும்-பலருக்கும் பயம்-எழுமே (2)
நிற்பதில்லையே சாவின்-கூத்து நெஞ்சில்-பயமே பார்த்துப்-பார்த்து
நெஞ்சில் எழுமே பயம் சாவைப் பார்த்து
 (MUSIC)
கொத்தும் பருந்தினிடம் எங்கோ பறந்திடினும்
என்றும் இரை-உயிர்க்குப் பயம்-விடுமா
(1+SM+1)
நித்தம்-பழகிடினும் பல்லில் விஷம்-இருக்க
பாம்பை-எப் பாம்பாட்டிதான் கொத்த-விடுவான்
நிற்பதில்லையே சாவின் கூத்து நெஞ்சில் பயமே பார்த்துப் பார்த்து

தேறுங்களேன் இதைத்-தேறுங்களேன் தேறுங்களேன் இதைத்-தேறுங்களேன்


2.9.1. மரணம்-போக்குது உயிரம்மா(அண்ணன் காட்டிய வழியம்மா)


9. ஸ்வரஸவாஹூ விதுஷோஸ்பி
ததாரூடோஸ பிணவேக  : ||

உயிரின் மீது  பற்று 
உயிரின் மீது  பற்று அல்லது மரண பயம் என்பது தானாக எழும் உணர்வாகும். அது வாழ்வினை முழுதுமாகக் கூட ஆதிக்கம் செலுத்தும் தன்மை கொண்டது.
_______________________
மரணம்-போக்குது உயிரம்மா-அது பிறவிக்கு-இன்னொரு பெயரம்மா
பிறந்தால்-இறக்கணும் என்பதனால் அப்-பயமும் கூட வருகுதம்மா
மரணத்தில்-போகுது உயிரம்மா
(MUSIC)
தொட்டால் சுடும்-பயம் நெருப்பாலே
தொடாமல் தெரியுது பின்னாலே
செத்தால் உடல்-பயம் எதனாலே
செத்தாச்சு பலதரம் அதனாலே
மரணம்-போக்குது உயிரம்மா
(MUSIC)
பிழைக்கணும் என்றே நினைத்திருக்கோம்
பயத்துடனே என்றும் வாழ்ந்திருக்கோம்
கொடுத்திடுவாய் என்றே எமன் கேட்டால்
எடுத்துச் செல்வாய் என்றா கொடுத்திடுவோம்
மரணம்-போக்குது உயிரம்மா
 (MUSIC)
உடலை-நினைத்தே வாழ்ந்திருக்கோம்
அது உலகில்-நிலைத்தே வாழ்ந்திடுமோ
முன்பே பலமுறை இ றந்திருக்கோம் அதில்
மரணத்தின் பயம்-நமை விடுவதில்லை
மரணம்-போக்குது உயிரம்மா-அது பிறவிக்கு-இன்னொரு பெயரம்மா
பிறந்தால்-இறக்கணும் என்பதனால் அப்-பயமும் கூட வருகுதம்மா
மரணத்தில்-போகுது உயிரம்மா


Tuesday, August 23, 2016

2.8. எதற்கோ நீ ஆவல்-கொண்டு(எதற்கும் ஒரு காலம் உண்டு)


Click here for song

https://youtu.be/6rQCM1jo8T0



வெறுப்பு
துன்பம் தரும் அனுபவத்துடன் ஒருவர் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்வது தான் வெறுப்பு.அதாவது, துன்பத்தினால் மனதில் வெறுப்பு தோன்றுகிறது.
________________

எதற்கோ நீ ஆவல்-கொண்டு அலைவது மனமே
(1+SM+1)
இன்பத்திலும் துன்பம்-உண்டு அறிந்திடிக்கணமே
இன்பத்திலும் துன்பம்-உண்டு அறிந்திடு மனமே
(MUSIC)
மனித-குலம் போவதந்த இன்பத்தின்-பின்னே
மனித-குலம் போவதென்றும் இன்பத்தின்-பின்னே
அனுபவித்துப் பின்னுரைப்பார் உப்புச்-சப்பில்லே
என்றைக்கும்சிற்..றின்பத்துள்ளே துன்பங்கள்-ஒன்றே
என்பதனை அறிந்த பின்னே துன்பங்கள் இல்லே
இன்பத்திலும் துன்பம் உண்டு அறிந்திடு மனமே
(MUSIC)
அகங்கார நினைவிருக்கும் ஆணவத்திலே
தன்மையும்போய் இருண்டிருக்கும் அதனிடத்திலே
உடனே-அது தன் குறையை உணர்வது-ஏது
மனதுக்குத்தான் மறதி என்று மாபெரும் கேடு    
இன்பத்திலும் துன்பம் உண்டு அறிந்திடு மனமே
(MUSIC)
நமை-உணர்த்த அன்றோ-அந்த மனம்-பிறந்தது
*சேற்றில்-பொந்த பன்றி-என்றே தனை-மறந்தது
தனை-மறந்த இந்திரன்போல் இன்பம்-தேடுது
** உண்மை-இன்பம் என்னவென்று மறந்து-போனது   
இன்பத்திலும் துன்பம்-உண்டு அறிந்திடு மனமே
(MUSIC)
கண்ணிருந்தும் பார்வை-சென்ற தன்மை-கொண்டது
அதனால்-தான் துன்பத்தைப்-போய் இன்பம் என்குது
பொன்னாக பொற்குடத்தில் நீரும் ஆகுமா
பானை-அந்த மண்ணென்றாலும் நீரும் மாறுமோ
இன்பத்திலும் துன்பம்-உண்டு அறிந்திடு-மனமே
எதற்கோ நீ ஆவல்-கொண்டு அலைவது-மனமே
இன்பத்திலும் துன்பம்-உண்டு அறிந்திடு-உடனே


**அறியாமை இருட்டு உடனே விலகாது. பல பிறவிகளின் தீவிர சாதனையால் கிட்டும் இறை அருள்  தேவை.
**இந்திரன் சாபத்தினால் பன்றியாய்ப் பிறப்பெடுத்து சேற்றில் மூழ்கி அவ்வாழ்வை ரசித்து இருந்தான்
*** பேரின்பம்






Sunday, August 21, 2016

2.7.வேளைக்கொண்ணு தேடி-மனம் (ஆளுக்கொரு தேதி வச்சு)

(ஆளுக்கொரு தேதி வச்சு)


ஆசை
இன்ப அனுபவத்தை தொடர்வது தான் விருப்பம்/ஆசை எனப்படும். அது புறச் சூழ்நிலைகளினால் ஏற்படுகிறது என்ற அறியாமையும் தோன்றுகிறது.
____________________

நெஞ்சே உனக்கென்ன தீராத பசியோ 
நீ கொண்ட சுகம் பத்தலையோ அடங்கிடவில்லையோ 
கொண்ட சுகம் பத்தலையோ அடங்கிடவில்லையோ 

வேளைக்கொண்ணு தேடி-மனம் இன்பத்துக்கலையும் உலகத்தில் அலையும்
(1+SM+1)
அப்போ மான-வெக்கம் சொரணை-சூடு அதுக்கெங்கத் தெரியும் (2)
வேளைக்கொண்ணு தேடி-மனம் இன்பத்துக்கலையும் உலகத்தில் அலையும்
(MUSIC)
பூமியிலே பொறக்கையிலே வந்ததந்த கோரம் 
பூமி-விட்டு போறவரை போவதில்லை பாரும் (2)
வேளைக்கொண்ணு தேடி-மனம் இன்பத்துக்கலையும் உலகத்தில் அலையும்
(MUSIC)
பாழ்-மனதை நிறுத்திவைக்க யாராலே ஆகும் 
வேறு-வேறு இன்பத்தையே நில்லாமல் தேடும்  (2)
(SM)
இன்னொரு-பேர் இருக்கத்துக்குக் கொள்ளிவாய்ப் பிசாசு 
இன்னொரு-பேர் அதுக்கிருக்குக் கொள்ளிவாய்ப் பிசாசு
அடங்கிடுமா ஆசைப்-பசி அதுக்கு-என்ன லேசில் (2)
சத்துவிட்ட பொருளையெல்லாம் சுத்திக்கிட்டுத் திரியும் 
(1+ஆ..+1)
தன்னைப்-பத்தி அறியாத அதுக்கு-என்ன தெரியும் (2)
வேளைக்கொண்ணு தேடி-மனம் இன்பத்துக்கலையும் உலகத்தில் அலையும்
அட மனம் அலையும்.. அட மனம் அலையும்
_________

2.6. யாவையும் அறிவேன்(ஆலய மணியின் ஓசையை)



அகந்தை
ஆன்மாவை மனமாகவும் உடலாகவும் புலன்களாகவும் காண்பது அகந்தை
__________

யாவையும் அறிவேன் என்பது அறியாமை 
புரிவதும்-நானே என்பதும்-அதுதானே
அதைப் பாவம்-எனவே எனுமே அந்த-ஆன்மம் எனும்-உண்மை
*அதைப் பார்த்தே இருக்கும் வெறுமே அந்த ஆன்மம் ஒரு ஊமை 
யாவையும் அறிவேன் என்பது அறியாமை 
புரிவதும்-நானே என்பதும்-அதுதானே
(MUSIC)
எதற்கும்-நானே என்பதற்கே ஓர்விளக்கம் அன்றோ அறியாமை 
வேலையில்லாதவன் யார்-என்றால் அதற்கும்-நானே என்றிடுமாம்
முந்திரி போல் அது பதில் தருமாம்  
எதற்கும் நானே-நானே எனக்கூறும்-அறியாமை 
என் செயலும் தானே பாரேன் எனப் பேசும் அது-பெருமை
யாவையும் அறிவேன் என்பது அறியாமை
(MUSIC)
சாகும்-போகும் உடலினையே அலையும்-தொலையும் மனதினையே 
யாதும்-அறியாப் புலன்களையே நான்-எனப் பேசும் அறியாமை 
தான்-எனும் அகந்தை அறியாமை 
உடலை-மனதைப்-புலனை தான் என்னும்-அறியாமை 
இதை உள்ளே அமர்ந்தே பார்க்கும் அந்த ஆன்மம் ஒரு-ஊமை 
யாவையும் அறிவேன் என்பது அறியாமை 
புரிவதும்-நானே என்பதும்-அதுதானே
அதைப் பாவம்-எனவே எனுமே அந்த-ஆன்மம் எனும்-உண்மை
*அதைப் பார்த்தே இருக்கும் வெறுமே அந்த ஆன்மம் ஒரு ஊமை
யாவையும் அறிவேன் என்பது அறியாமை 



*சாட்சி பூதம்


Friday, August 19, 2016

2.5.பொய்யெது மெய்யெது (மௌனமே பார்வையால்)





பொய்யெது மெய்யெது அறியாமை அறிந்திடாதே 
நன்மையும் தீமையும் புரி..யாது-அந்த நோயில்
(SM)
பொய்யெது மெய்யெது அறியாமை அறிந்திடாதே 
நன்மையும் தீமையும் புரி..யாது-அந்த நோயில்
(music)
தும்பிக்கையில்லா ஒரு தந்தக்கரி போல்-மருள் தந்த-போதை தனில் தினம்-ஆடும் மனம்-ஆடும்
(SM)
தும்பிக்கையில்லா ஒரு தந்தக்கரி போல்-மருள் தந்த-போதை தனில் தினம்-ஆடும்
அங்கம்-முழுதும் அது தந்தத்-திமிரால்-மது உண்ட மந்தியெனத் திரிந்தாடும் 
மது உண்ட மந்தியென மனமாடும் 
ம்..ம்..
பொய்யெது மெய்யெது அறியாமை அறிந்திடாதே 
நன்மையும் தீமையும் புரி..யாது-அந்த நோயில்
(MUSIC)
புத்தி-உரைத்தே-நீ சத்தை-அளித்தால்-பே..ராண்மை கொண்டு-அது உனைத்தாக்கும் உனைத்தாக்கும்
(SM)
புத்தி-உரைத்தே-நீ சத்தை-அளித்தால்-பே..ராண்மை கொண்டு-அது உனைத்தாக்கும்
நன்மை-உரைக்கும்-உந்தன் நல்ல-முகத்தில் சுடு மொழிகள்-தொடுத்து-அது கணை-வீசும்
சுடு மொழிகள்-தொடுத்து-அது கணை-வீசும்
ம்..ம்..
பொய்யெது மெய்யெது அறியாமை அறிந்திடாதே 
நன்மையும் தீமையும் புரி..யாது-அந்த நோயில்
_____________

Thursday, August 18, 2016

2.4.அத்தனையும் நானறிவேன் (அந்தரங்கம் நானறிவேன்)


அறியாமை - அறிவு சம்வாதம்


அத்தனையும் நானறிவேன் என்பதல்ல-பே..ரறிவு
அத்தனையும் நானறிவேன் என்பதன்றோ அறியாமை
சாத்திரத்தை நான்-படித்தேன் கரைத்ததைக் குடித்துவிட்டேன்
சாத்திரத்தை நான்-படித்தேன் நானறியா நூல்கள்-இல்லை
கண்டபடி நான்-படித்தேன் பண்டிதனைப் போல-நன்றாய் (2)
அத்தனையும் நானறிவேன் கற்க-இன்னும் வேறிலையே
(MUSIC)
பாரில்-கண்ட நூல்களிலே நீயும்--கற்ற கல்வி
தனில் ஒன்றும்-இல்லை மண்ணும்-இல்லை ஐயோ அது தோல்வி   
(2)
அறிந்து-விட்டேன் யார்-புகழும் தேவை-இல்லை போங்கள் (2)
என்-மேல்-பொ..றாமையினால் கூறுகிறீர்-நீங்கள்
என்னைப் போல யார் உண்மை சொல்லவா
மூடன் என்பதார் உன்னைச் சொல்லவா 
அத்தனையும் நானறிவேன் என்பதல்ல பேரறிவு
(MUSIC)
உண்மை-எது பொய்மை-எது நன்மை-தீமை யாது
என அறியாத நிலைமையன்றோ ஐயா-அறியாமை
வாலறிவன் தாள்-பணிந்து நல்..லறிவைத் தேடி
தன்னைத் தான்-உணர்ந்து கரைந்து-செல்ல வேணும் உந்தன்-ஆவி
அறிவேனே நான்-எதையும் அறிந்த-வரை போதும் (2)
உடனே போய் பைத்தியமே வைத்தியரைப் பாரும்
என்னைப் போல யார் உண்மை சொல்லவா
மூடன் என்பதார் உன்னைச் சொல்லவா
அத்தனையும் நானறிவேன் என்பதன்றோ அறியாமை

அத்தனையும் நானறிவேன் கற்க-இன்னும் வேறிலையே

______________

2.3.மானிடனே-கொள்(ஆண்டவனே உன் பாதங்களை)




மனமே-உன் சாதனையில் எத்தனையோ தடை-இருக்கு 
விழுந்தால் அவன் காலடியில் இனி-உன்னதெல்லாம் அவன்-பொறுப்பு 
உன்னதெல்லாம் அவன் பொறுப்பு
(Short music)


என்-மனமே-கொள் யோகம்-தனை-நீ சிந்திக்க நேரம்-எடு
உந்தன் சாதனையில்-நீ தடை-முறிக்கச் சென்று ஐயனின் பாதம்-தொடு
செய்வாயா..!
என்-மனமே-கொள் யோகம்-தனை-நீ சிந்திக்க நேரம்-எடு

உந்தன் சாதனையில்-நீ தடை-முறிக்கச் சென்று ஐயனின் பாதம்-தொடு
(2)
(MUSIC)

சாதனைக்குச் சோதனையாய் தடைகள்-ஐந்து உனைத்தாக்கும் 
அறியாமை ஆசை-பயம் ஆணவமும் வெறுப்பாகும் 
இந்த-ஐந்தும் உள்ளவரை உள்ளிருக்கும் உன்-நிஜத்தை
காணுவதும் ஆகாது என்றுணர்ந்து நீ-தேறு
என்-மனமே-கொள் யோகம்-தனை-நீ சிந்திக்க நேரம்-எடு
உந்தன் சாதனையில்-நீ தடை-முறிக்கச் சென்று ஐயனின் பாதம்-தொடு
செய்வாயா..
(MUSIC)
அறியாமை உனை-மயக்கும் மரண-பயம் அச்சுறுத்தும் 
ஆணவமே தலை-காட்டும் உண்மை-எண்ணிப்பாராமல்
வெறுப்புனையே சுடுமாமே ஆசை-என்றும் விஷப்-பாம்பே
இந்த ஐந்தும்-தாக்காமல் கொள்வாய்-நீ சாதனையை
கொள்வாய் நீ சாதனையை

__________

2.2.அன்புள்ள சாதகரே( அன்புள்ள மான் விழியே )




அன்புள்ள சாதகரே சாதனை செய்திடணும்
அது இலக்கினில் இல்லையென்றால் தடை விலக்குதல் மிகக்கடினம்
(Short Music)
அன்புள்ள சாதகரே சாதனை செய்திடணும்
அது இலக்கினைக்-குறித்திருந்தால் தடை விலக்குதல் எளிமைப் படும்
(MUSIC)
மரக்கலம்-போமா மலை உச்சிக்கே
நடைவண்டி ஆமா  நீந்தத் தண்ணிக்கே
(2)
உயர்ந்த-நோக்குடன் இயந்த பாதையும்
புரிந்த-செயல்களும் இருந்து ஆகணும்
எண்ணம்-முழுதிலும் இதனை-வைக்கணும்
நோக்கம்-நாடியே செயலை-அமைக்கணும்
அன்புள்ள சாதகரே சாதனை செய்திடணும்
அது இலக்கினில் இல்லையென்றால் தடை விலக்குதல் மிகக்கடினம்
(MUSIC)
சொல்லுது-பாரேன் சூத்திரம்-தான்
அதை உணர்ந்தாலே பர-சுகம் தான்
(2)
இதில்-இருப்பது வேதமல்லவோ
இதை-உணர்வது வேணுமல்லவோ
யோகப் பொன்மொழி நன்மையல்லவா
நாளை காட்டிடும் நம்மையல்லவா
அன்புள்ள சாதகரே சாதனை செய்திடணும்
அதை-இலக்கினில் இயைத்திடுவோம்
நமை இறைவனில் இணைத்திடுவோம்

________________

2.1. யாக பூஜைகள் எதற்கு (காதல் ராஜ்ஜியம் எனது)



தப : ஸ்வ த்யாவஈஸ்வரப்ரணி
தநாநி க்ரியா யோகா || 

கிரியா யோகம்.
அன்றாட வாழ்க்கையில் ஒருவர் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்கம் அதாவது யோகம், கிரியா யோகம். 
--------------


* யாக பூஜைகள்-எதற்கு பொருள்-போடும் ஹோமங்கள்-எதற்கு
தினம்-ஆற்றும் கருமத்தில்-தொடர்ந்து இறைபாவம் சாதனை-உணரு
(2)
(SHORT MUSIC)
** எத்தாலும் இறைவனின்-நினைப்பு சொத்தாக அவன்-பெயர் இருக்கு 
என்றுன்-சேவையைப் புரிந்தாலே 
தெய்வம்-தோன்றாதோ மனத்திரை கிழித்து
(2)
யாக பூஜைகள்-எதற்கு பொருள்-போடும் ஹோமங்கள்-எதற்கு
தினம்-ஆற்றும் கருமத்தில்-தொடர்ந்து இறைபாவம் சாதனை-உணரு
(MUSIC)

** திங்கள் ஒரு-பூஜை அதில்-தீரும் பல-ஆசை 
என-ஹோம அவியைப் பெய்து 
பொன்னில் ஒளிர்-வெள்ளி தனில்-மின்னும் எழில்-கிண்ணி 
மேலோட நெய்யைப்-பெய்து
(2)
செய்யாத மாந்தரின் பிழைப்பு 
உய்யாது எனும்-உந்தன் நினைப்பு 
கண்ணை-மூடிய பூனை-போலே 
என்றும்-போகாது உலகமும் இருண்டு
யாக பூஜைகள்-எதற்கு பொருள்-போடும் ஹோமங்கள்-எதற்கு
தினம்-ஆற்றும் கருமத்தில்-தொடர்ந்து இறைபாவம் சாதனை-உணரு
(MUSIC)
பஞ்சும் பயந்தோடும் என-நெஞ்சம் மிருதாகும் தானாகத் தேடல்-வரும்
சித்தம் தனில்-புத்தம் புது-சந்தம் எழில்-சத்தம் நீ-கேட்க போதம்-வரும் 
பட்டாக மனம்-தனில் வெளுத்து 
ஒட்டாமல் கருமத்தைப் புரிந்து 
ஒழுகும் வாழ்க்கையே உயர்-யோகம் 
பின்பு-கொல்லாது மோகத்தின் நெருப்பு
யாக பூஜைகள்-எதற்கு பொருள்-போடும் ஹோமங்கள்-எதற்கு
தினம்-ஆற்றும் கருமத்தில்-தொடர்ந்து இறைபாவம் சாதனை-உணரு


* யாகம்,ஹோமம்,பூஜை போன்ற கருமங்கங்கள் எல்லாம் எதற்கு என்று யோசி. இவைகள் எல்லாம் நம் அன்றாட வாழ்க்கைக் கருமங்களையும் இவை போன்று இறை பாவத்துடன் செய் என வலியுறுத்தத் தான் அதற்கு பயிற்சி பெறத் தான் என உணர.

** எத்தாலும் = எது நடந்தாலும் ** மாதம் ஒரு பூஜை


_____________________