Tuesday, August 16, 2011

சமாதி பாதம் சூத்ரம் 1 - 11

1. அத யோகானு சாஸனம் || 

இதற்கு யோகப் பயிற்சிக்கு துணை செய்கின்ற போதனைகள் என்று பொருள்

தத்துவம் அன்றிது சமத்துவ மாகநின்று
பத்தரும் சித்தரும் ஒருமுக மாகச்சென்று
சித்தமும் பதறாமல் எப்படிச் செய்வதென்று 
சுத்தமாய் பிழையற  விளக்குவேன் யோகமின்று
atha yoga anushasanam ||1||
अथ योगानुशासनम् ॥१॥
Yoga in the here and now: an introduction to the study and practice of yoga ||1||

atha (अथ, atha) = (conj.) and so, now (often used to introduce explanations)
yoga (योग, yoga) = (iic. / nom. sg. m.) yoga, unity, oneness, harmony with yourself
anushasanam (अनुशासनम्, anuśāsanam) = (nom. sg. n./acc. sg. n. from anushasana (अनुशासन, anuśāsana)) introduction to the experience; explanation; interpretation
-------------------------------------------------------------------------------------------------------

2. யோகஸ் சித்த வ்ருத்தி நிரோத:

யோகம் என்பது யாது 
மன அலைகளை ஒருமுகப்படுத்தி ஒரு நிலைக்குக் கொண்டு வருவதே யோகம் ஆகும்

கணந்தொறும்  அலையென எழும்பிடும்  எண்ணம்
மனத்தினை அலைந்திடாச் செய்திடும் வண்ணம்
நினைப்பினில்  குலைந்திடா கண்டிடும் மின்னும்   
குணத்துரம்     அளித்திடும் யோகமிடு மன்னம்..!
____________

முன்னர்இறைந்திடும் அலையெனப்பெரிதாய் 
எண்ணம்திரண்டிடும் எழுச்சியாக 
பின்னர்மறைந்திடும் கலைதனைஎளிதாய்ப் 
பெற்றுச்சுருண்டிடும் வீழ்ச்சியாக
மாந்தர்விழைந்திடும் புலன்தனைக்கடிதாய்ப்
பற்றியேஉழன்றிடும் சுழற்ச்சியாக 
வந்தோர்இடத்தினில் இருந்திடச்செய்யும் 
யோகம்மனத்தினை சாட்சியாக..!
____________
இடர்ப்படும் மனத்திடை எழுந்துரும் நினைவலை 
தொடர்ந்திடும் வினைத்தொகை வளர்தலும் இலாமலே 
அடக்கலும் அடங்கலும் இலாதுறும் பரன்நிலை 
விழைதலின் அளிக்குமிந்த   யோகமென்ற உயர்கலை..!
____________
பதஞ்சலியார் அளித்ததிந்த நூற்றி தொண்ணூற்றாறு
அதன்தலையாய் நிற்குமிதன் சாரமதைத் தேறு
வதன்பயனாய் கூடும்யோகப் பாத்திரமாய் மாறு 
எமன்செயலால் வாடுமந்த சாவுமில்லை பாரு ..! 
 
 

योगश्चित्तवृत्तिनिरोधः ॥२॥
yogaś-citta-vṛtti-nirodhaḥ ||2||
When you are in a state of yoga, all misconceptions (vrittis) that can exist in the mutable aspect of human beings (chitta) disappear. ||2||

yogah (योगः, yogaḥ) = (nom. sg. m. from yoga (योग, yoga)) yoga
chitta (चित्त, citta) = (iic.) all that is mutable in human beings; thoughts
vritti (वृत्ति, vṛtti) = (iic.) thought-wave; mental modification; mental whirlpool; a ripple in the chitta. A vritti alters perception like a misconception, or as waves on the surface of a pond obscure or distort our view of the bottom.
nirodhah (निरोधः, nirodhaḥ) = (nom. sg. m. from nirodha (निरोध, nirodha)) to find tranquility; to control
-------------------------------------------------------------------------------------------------------

3. ததா த்ரஷ்டு :
ஸ்வரூபேஸ வஸ்தானாம் ||

யோகத்தின் பயன்
யோகம் மூலம் மனத்தை ஒருமுகப் படுத்தும்போது சொந்த இயல்புடன் சுதந்திரமாக விளங்கலாம் 

தெளிந்தநீரில் துல்லியக் காட்சியாகும் பிம்பமாய் 
கனிந்தநெஞ்சின் மென்மையில் மலர்ச்சியாகும் பாசமாய் 
விளங்குமந்த நுண்ணிய சாட்சியாகும் ஆத்துமா 
துலங்குமிடம் யோகியர் தூய்மையான நெஞ்சமாம்..!
 

तदा द्रष्टुः स्वरूपेऽवस्थानम् ॥३॥
tadā draṣṭuḥ svarūpe-'vasthānam ||3||
For finding our true self (drashtu) entails insight into our own nature. ||3||

tada (तदा, tadā) = (adv.) then
drashtuh (द्रष्टुः, draṣṭuḥ) = (g. sg. m./abl. sg. m.) the true self
sva (स्व, sva) = (icc.) their own
rupa (रूप, rūpa) = (loc. sg. n./acc. du. n./nom. du. n.) form
svarupe (स्वरूपे, svarūpe) = (loc. sg. n. from svarupa (स्वरूप, svarūpa)) in (its) own form; true essence; true being; true nature
avasthanam (अवस्थानम्, avasthānam) = (nom. sg. n./acc. sg. n. from avasthana (अवस्थान, avasthāna)) residence; quiet place; place of business; place to stay; rest in; recognize.

-------------------------------------------------------------------------------------------------------

4. வ்ருத்தி சாருப்ய மிதரத்ர ||

மனத்தின் மருட்சி
நாம் மன அலைகளுக்குள் சிக்கியிருக்கும்போது அந்த மன அலைகளுக்கு ஏற்பவே செயல் படுகின்றோம். நம் உண்மையான தன்மையிலிருந்து விலகி விடுகின்றோம்

சுடர்தனின் கவர்ச்சியில் கொளுந்துகின்ற விட்டிலாய் 
இடர்தரும் உணர்ச்சியில் அழுந்துகின்ற தாதலால் 
படர்ந்திடும் மருட்சியில் வருந்துகின்ற மனதினால் 
அடர்ந்திருக்கும் காட்சிதன்னில் ஆன்மஉண்மை இல்லையே..!

இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க

वृत्ति सारूप्यमितरत्र ॥४॥
vṛtti sārūpyam-itaratra ||4||
Lacking that, misconceptions (vritti) skew our perceptions. ||4||

vritti (वृत्ति, vṛtti) = (nom. sg. f.) waves; changes; thought waves; lack of clarity
sa (सा, sā) = (icc.) similar
rupyam (रूप्यम्, rūpyam) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n.- rupya (रूप्य, rūpya)) form
sarupyam (सारूप्यम्, sārūpyam) = (acc. sg. m. from sarupya (सारूप्य, sārūpya)) similar form, as opposed to proprietary form of svaruupa (see above). In other words, we identify with something that is merely similar to our true nature, thus engendering a skewed perception.
itara (इतर, itara) = different, otherwise
itaratra (इतरत्र, itaratra) = (adv.) in other states, otherwise

Thanks to :
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-1/item/vritti-sarupyam-itaratra-4/

-------------------------------------------------------------------------------------------------------

5. வ்ருத்தய பஞ்சதய்ய :
க்லிஷ்டாக்லிஷ்டா: ||

மன அலைகள் ஐந்து வகை  
மன அலைகள் ஐந்து வகைப்படும். அவற்றுள் துன்பம் தரக்கூடியவைகளும் உள்ளன. இன்பம் தரக்கூடியவைகளும் உள்ளன.

ஐந்துமைந்து மாயிருந் தலைந்திருக்கு மெண்ணமே
வந்துவந்து இன்பதுன்பம் தந்திருக்கும் திண்ணமே
துறந்துவந்து கொள்ளும்தள்ளும் தன்மைகொண்டு முன்னமே 
அறிந்துஉய்யும் திறனளிக்கும் யோகம் அமுதக்கிண்ணமே  ..! 

இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க

वृत्तयः पञ्चतय्यः क्लिष्टाक्लिष्टाः ॥५॥
vṛttayaḥ pañcatayyaḥ kliṣṭākliṣṭāḥ ||5||
There are five types of misconceptions (vrittis), some of which are more agreeable than others: ||5||

vrittayah (वृत्तयः, vṛttayaḥ) = (nom. pl. f. from vritti (वृत्ति, vṛtti)) waves; lack of clarity; thought waves; misconceptions
panchatayyah (पञ्चतय्यः, pañcatayyaḥ) = (nom. pl. f. from panchatayya (पञ्चतय्य, pañcatayya)) five-fold, of a five-fold nature
klishta (क्लिष्ट, kliṣṭa) = (iic.) burdensome, painful, disagreeable, unpleasant
aklishtah (अक्लिष्टः, akliṣṭaḥ) = (nom. pl. m./acc. pl. f./nom. pl. f. from aklishta (अक्लिष्ट, akliṣṭa)) carefree, unencumbered, painless, agreeable, pleasant

-------------------------------------------------------------------------------------------------------
6. ப்ரமாண - விபர்யாய - விகல்ப 
நித்ரா - சம்ருதய ||

மன அலைகள் ஐந்து
அந்த ஐந்து வகையாவது : சரியாகப் புரிந்து கொள்வது , தவறாகப் புரிந்து கொள்வது , பொருளற்ற கற்பனை, நினைவு(Memory) , தூக்கம் 


கடலின்அலையைப் போன்றது மனதிலைகள்  ஐந்தது 
சிலதுநன்று அறிவது சிலதுதவறாய்ப் புரிவது 
சிலதுநினைவில் நிற்பது கற்பனைவெற் றுருவது
சிலதுஉலகை மறக்குமந்த  உறக்கத்திலும் தொடர்வது..!


प्रमाण विपर्यय विकल्प निद्रा स्मृतयः ॥६॥
pramāṇa viparyaya vikalpa nidrā smṛtayaḥ ||6||
insight, error, imaginings, deep sleep, and recollections.

pramana (प्रमाण, pramāṇa) = (iic.) insight; accurate perception; accurate knowledge
viparyaya (विपर्यय, viparyaya) = (iic.) error; false perception; false knowledge
vikalpa (विकल्प, vikalpa) = (iic.) imagining; illusion; mental construct; the illusion that a semantic construct such as “praise” actually exists
nidra (निद्रा, nidrā) = (icc. / nom. pl. f./acc. pl. f.) sleep; deep sleep
smriti (स्मृति, smṛti) = (icc.) recollections; memory
-------------------------------------------------------------------------------------------------------

7. பிரத்யக்ஷானுமானாகமா:
ப்ரமாணானி ||


சரியான அறிவு
சரியான அறிவென்பது கீழ்கண்ட மூன்றின் மூலம் பெறப்படும்

நாமே நேராக உணர்ந்து அறிவது , மற்றொன்றன் மூலமாக ஆராய்ந்து அறிவது , கற்றோர் மூலமோ சாத்திரங்கள் மூலமோ அறிவது

எடுத்துக்கொள்ளும் அறிவிலொன்று  உனக்குநீயே அறிவது 
கடினமான தென்றுதோன்றில் அனுமானத்தை அணுகிடு  
படிப்பதாக மண்ணில்நாடு புனிதமான நூலது 
புலப்படாத கேள்விக்கெல்லாம் பதிலைக்கூறும் பாரது ..!

प्रत्यक्षानुमानागमाः प्रमाणानि ॥७॥
pratyakṣa-anumāna-āgamāḥ pramāṇāni ||7||
Insight arises from direct perception, conclusions, or learning that are based on reliable sources. ||7||

pratyaksha (प्रत्यक्षा, pratyakṣā) = that which is right in front of our eyes; that which is directly seen or perceived
anumana (अनुमान, anumāna) = that which comes from the intellect (manas); a conclusion that is reached
agamah (आगमः, āgamaḥ) = (nom. from agama (आगम, āgama)) legacy; learning from reliable sources; testimony; pronouncements by others; documentary knowledge
pramanani (प्रमाणानि, pramāṇāni) = (from pramana (प्रमाण, pramāṇa)) insight; accurate perception; accurate knowledge
-------------------------------------------------------------------------------------------------------

8.விபர்யயோ மித்யா 
ஞானமதத்ரூப பிரதிஷ்ட்டம் 

அறிவின்  திரிபு
உண்மைக்கும் போலிக்கும் வித்யாசம் தெரியாத போது அறிவில் மயக்கம் உண்டாகும் 


இருட்டில்கயிற்றை மருளுமறிவு பாம்புஎன்றே எண்ணுது
பெருத்தவயிற்றில் பசியினாலே விடமுமுணவாய்ச் செல்லுது
சுட்டெரிக்கும் வெய்யில்தன்னில் கானல்நீராய்த் தோன்றுது
கெட்டபுத்திதுரியனுக்கு தரையும்நீராய்த் தெரிந்தது..!
 
 

विपर्ययो मिथ्याज्ञानमतद्रूप प्रतिष्ठम् ॥८॥
viparyayo mithyā-jñānam-atadrūpa pratiṣṭham ||8||
Error arises from knowledge that is based on a false mental construct. ||8||

viparyaya (विपर्यय, viparyaya) = (nom. sg. m.) error; false perception; false knowledge
mithya (मिथ्या, mithyā) = (nom. sg. f.) false; misleading
jnanam (ज्ञानम्, jñānam) = (acc. sg. n./nom. sg. n. from jnana (ज्ञान, jñāna)) knowledge; insight; idea; concept
a (अ, a) = not
tad (तद्, tad) = that; which; whose
rupa (रूप, rūpa) = form; nature
atadrupa (अतद्रूप, atadrūpa) = (iic.) different form
pratishtham (प्रतिष्ठम्, pratiṣṭham) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n. from pratishtha (प्रतिष्ठा, pratiṣṭhā)) rooted, calming, compatible
-------------------------------------------------------------------------------------------------------

9.சப்தஞானானுபாதீ 
வஸ்துசூன்யோ விகல்ப: 

பொருளற்ற கற்பனை வெற்றுரை
அர்த்தமற்ற வார்த்தைகளாலான வெற்றுரையில் எந்த உண்மையும் இருப்பதில்லை. அவை மயக்கத்தையே தருகின்றன 


கவர்ந்திழுக்கும் தன்மையா யிருந்திருக்கு மாயினும் 
சுமந்துபெற்ற தாயைப்பிள்ளை மலடி என்றுரைப்பதும் 
உவந்துபேசும் ஒருவன்தன்னை ஊமைஎன் றிரைவதும்   
போன்றதாகும் அர்த்தமற்ற வார்த்தைகொண்ட வெற்றுரை 

 

शब्दज्ञानानुपाती वस्तुशून्यो विकल्पः ॥९॥
śabda-jñāna-anupātī vastu-śūnyo vikalpaḥ ||9||
Imaginings are engendered by word knowledge without regard for what actually exists in the real world. ||9||

shabda (शब्द, śabda) = (iic.) word
jnana (ज्ञान, jñāna) = (iic.) knowledge
anupati (अनुपाती, anupātī) = (acc. sg. n./nom. sg. n.) consequent upon; real
vastu (वस्तु, vastu) = (acc. sg. n./nom. sg. n.) reality; object; thing; entity
shunya (शून्य, śūnya) = (nom. sg. m.) devoid; empty; unrelated;
vikalpah (विकल्पः, vikalpaḥ) = (nom. sg. m. from vikalpa (विकल्प, vikalpa)) imagining, illusion, semantic confusion; the illusion that a semantic construct actually exists
-------------------------------------------------------------------------------------------------------

10.அபாவ - பிரத்யயாலம்பனா 
வ்ருத்திர்நித்ரா 

தூக்கம் 
மனது எண்ண அலை இல்லையென்று உணரும் நிலை தூக்கமாகும் 
இல்லைஇல்லை என்றுஒன்றைச் சொல்லுகின்ற போதிலே 
இல்லையென்ற அந்தஒன்றி ருந்திருத்தல் போலவே 
தொல்லையான எண்ணம்யாவும் ஓயும்தூக்கம் என்பது 
எண்ணுமெண்ண மில்லையென்று எண்ணுகின்ற எண்ணமே..!

अभावप्रत्ययालम्बना तमोवृत्तिर्निद्र ॥१०॥
abhāva-pratyaya-ālambanā tamo-vṛttir-nidra ||10||
Deep sleep is the absence of all impressions resulting from opacity in that which is mutable in human beings (chitta). ||10||

abhava (अभाव, abhāva) = absence; non-presence; lack
pratyaya (प्रत्यय, pratyaya) = impressions; that which is in the mind; opacity of chitta, i.e. impressions in chitta via vrittis.
alambana (आलम्बन, ālambana) = support, basis, interrelationship, based on
tamo (तमो, tamo) = inertia. Tamas is one of the three gunas, i.e. the basic properties of matter.
vritti (वृत्ति, vṛtti) = lack of clarity; waves; thought waves
nidra (निद्रा, nidrā) = sleep; deep sleep

-------------------------------------------------------------------------------------------------------

11.அனுபூத விஷயாஸஸம்ப்ரமோஷ:
ஸ்ம்ருதி : ||

நினைவுப் பதிவு(Memory)
முன்பு வாழ்வில் அனுபவித்த விஷயம் திரும்பவும் மனதில் தோன்றுகின்ற அலையே நினைவு என்பதாகும். நினைவு மனதில் பல பதிவுகளை ஏற்படுத்துகின்றது. பின்னர் அந்த பதிவுகளே மேல் தளத்துக்கு வருகின்றன. 

கிணற்றிலூறும் நீரைவெள்ளம் கொள்வதில்லைபோலவே
மனத்திலூறும் ஆசையாவும் அழிந்துபோவதில்லையே
கணங்கள்தோறும் தோன்றுமெண்ணம் எளிதில்கரைவ தில்லையே
கனன்றெழும்பும் காற்றுபோல பின்னெழும்பும்மெல்லவே ..! 
 
 

अनुभूतविषयासंप्रमोषः स्मृतिः ॥११॥
anu-bhūta-viṣaya-asaṁpramoṣaḥ smṛtiḥ ||11||
Recollections are engendered by the past, insofar as the relevant experience has not been eclipsed. ||11||

anu (अनु, anu) = (prep/adv) from
bhuta (भूत, bhūta) = (iic.) that which has been experienced; the past
vishaya (विषय, viṣaya) = (iic.) entity; situation; experience
a (अ, a) = not
sam (सं, saṁ) = fully; completely
asam (असं, asaṁ) = (acc. sg. m. from asa (आस, āsa)) incomplete
pramoshah (प्रमोषः, pramoṣaḥ) = (m. from pramosha (प्रमोष, pramoṣa)) rob; remove; eliminate; obscure
smritih (स्मृतिः, smṛtiḥ) = (nom. sg. f. from smriti (स्मृति, smṛti)) memory; recollections
-------------------------------------------------------------------------------------------------------

PREVIOUS                                                                                  NEXT

<<< முதல் பக்கம் >>>No comments:

Post a Comment