Saturday, November 5, 2011

விபூதி பாதம் சூத்ரம் 21 - 30



ENGLISH




21. காயரூப சம்யமாதத் க்ராஹ்ய சக்தி ஸ்தம்பே
சக்ஷூஷ் ப்ரகாசா சம்யோகே எ ந்தர்த்யானம்   

மாயமாய் மறைதல்
உடல் மீது கொண்ட சரியான சம்யமத்தால் உடல் தெரியாமல் மாயமாய் மறையும் திறன் சித்தி யாகிறது 
பார்ப்பவர் கண்ணிலிருந்து பார்க்கும் திறனை யோகியால் பிரிக்க முடிகிறது.

மிகுந்தஒளியில் கூசும்கண்ணில் சூரியனும் மறையுது 
பகுத்தறியும் அறிவினாலே  சூரியனும் தெரியுது  
யோகம்கூட பெரியசக்தி கண்கூடாகக் கிடைக்குது
முதலில்கிடைக்கும்  கண்படாது  உருவமங்கு மறைவது  

कायरूपसंयमात् तत्ग्राह्यशक्तिस्तम्भे चक्षुः प्रकाशासंप्रयोगेऽन्तर्धानम् ॥२१॥
kāya-rūpa-saṁyamāt tat-grāhyaśakti-stambhe cakṣuḥ prakāśāsaṁprayoge-'ntardhānam ||21||

Through meditation on the form of one's own physical body, it becomes possible to impede the capacity that renders the body visible. This precludes a connection between light and the eyes and renders the body invisible to others. ||21||
kaya (काय, kāya) = (iic) body
rupa (रूप, rūpa) = (iic.) form
sanyamat (संयमात्, saṁyamāt) = (abl. sg. m. from sanyama (संयमा, saṁyamā)) by practicing contemplation; samyama; meditation
tat (तत्, tat) = (acc. sg. n./nom. sg. n. from tad (तद्, tad)) that
grahya (ग्राह्य, grāhya) = perceptible
shakti (शक्ति, śakti) = (iic.) power; capacity
arhtah (अर्ह्तः, arhtaḥ) = (nom. sg. m. from arhta (अर्ह्त, arhta)) impediment
chakshuh (चक्षुः, cakṣuḥ) = (acc. sg. n. /nom. sg. n., chakshus (चक्षुस्, cakṣus)) eye
prakasha (प्रकाश, prakāśa) = (iic.) light
asanprayoge (असंप्रयोगे, asaṁprayoge) = (loc. sg. m., asanprayoga (असंप्रयोग, asaṁprayoga)) no connection
antardhanam (अन्तर्धानम्, antardhānam) = (acc. sg. n./nom. sg. n. from antardhana (अन्तर्धान, antardhāna)) disappear; invisibility

Thanks to:

--------------------------------------------------------------------------------------------
22. ஏதேன சப்தாதி அந்தர் த்யான முக்தம்

பார்ப்பவர் கண்ணுக்கு தெரியாமல் பார்க்கும் தன்மையைப் பிரித்தல் போலவே மற்ற புலன் தன்மைகளையும் யோகியால் பிரிக்க முடிகிறது. இந்த சித்தினால்  யோகி மிக உயர்ந்த நிலைக்கு செல்கிறார்.

பார்த்தல்பிரித்து மாயமாய் மறைந்திருக்கும் சித்துபோல்
காதுகேட்டல்  நாசிமுகறல்  நாக்குசுவைத்தல்  தோலின்உணர்தல்
யாதும்கூட கைவரவே செய்திருத்தல் என்பது
யோகம்தன்னில் முனைப்பெடுத்த  சம்யமத்தால் ஆகுது

--------------------------------------------------------------------------------------------
23.சோபதிரமம் நிருபதிரமம்  ச கர்ம தத்சம்யமாத 
பரந்த ஞானம் அரிஷடேப் யோவா   

பிராரப்தம் என்னும் நின்று பலனளிக்கும் கர்மங்களின் மேலும், ஆகாம்யம் என்னும் உடன் பலனளிக்கும் கர்மங்களின் மேலும் சம்யமம் கொள்வதால் நாளை நம் வாழ்வில் நடக்கப் போவதை  அறியலாம்

நின்றுவரும் பிராரப்தம் இன்றுவரும் ஆகாம்யம்
இந்தவிரண்டு கருமம்மீது கூர்ந்துகொண்ட த்யானத்தால்
தொடரவிருக்கும் வாழ்வின்நிகழ்வு தெரிந்துநாமும் அறியலாம்
இடரைத்தவிர்த்து இறையில்படரும் வழியைநாமும் அடையலாம்

सोपक्रमं निरुपक्रमं च कर्म तत्संयमातपरान्तज्ञानम् अरिष्टेभ्यो वा 
sopa-kramaṁ nirupa-kramaṁ ca karma tatsaṁyamāt-aparāntajñānam ariṣṭebhyo vā 

Meditation (samyama) on foreseeable and unforeseeable causes and causal relationships (karma) gives rise to knowledge (jnana) concerning fate. 

sopa (सोप, sopa) = based on
krama (क्रम, krama) = sequence; succession
sopakramam (सोपक्रमं, sopakramaṁ) = based on the process; understandable; foreseeable
nirupa (निरुप, nirupa) = not supported; empty
nirupakramam (निरुपक्रमं, nirupakramaṁ) = not based on the process; unforeseeable; not understandable
cha (च, ca) = and
karma (कर्म, karma) = karma; action; cause or effect of an action; fate
tat (तत्, tat) = that
sanyamat (संयमात्, saṁyamāt) = (abl. sg. m. from sanyama (संयमा, saṁyamā)) by meditating on; by practising samyama as regards
aparanta (अपरान्त, aparānta) = death; end
jnana (ज्ञान, jñāna) = knowledge; understanding
arishta (अरिष्ट, ariṣṭa) = fate
ibhya (इभ्य, ibhya) = its
va (वा, vā) = or

Thanks to:

--------------------------------------------------------------------------------------------
24. மைத்திரியாதிஷூ பவானி

அன்பின் த்யானம் நற்பண்புகளையும் மனதின் வலிமையையும் பெருக்கும்

துன்பமான நினைவுகள் துன்பமேதான் தருகுது 
இன்பம்துய்த்த நினைவினால் இன்பம்மனதி லோங்குது 
முன்புநடந்த நிகழ்வுகள் நினைக்கமனதில் தோன்றுது 
அன்பைத்யானம் செய்திடு  பண்புபெருகும் பார்த்திடு  

मैत्र्यदिषु बलानि ॥२३॥
maitry-adiṣu balāni ||23||

Meditating on love (maitri) and the other positive attitudes (see ys 1.33) engenders the necessary strength. ||23||
maitri (मैत्री, maitrī) = love; congeniality; friendliness
adishu (आदिषु, ādiṣu) = and so on
balani (बलानि, balāni) = power; strength
Meditation enables you to determine the nature of your feelings, thoughts and actions. Selecting a trait, characteristic or emotion for samyama will result in its developing within you. However, Patanjali advises us to strengthen only positive emotions and traits through meditation, as they help us on our spiritual path. If your samyama focuses on hatred, this feeling will grow within you and will distract you from your inner path – and thus you will never attain the state of yoga. You can only progress on the path of yoga on the basis of positive characteristics. This will enable you to feel the love, empathy and gratitude that a genuinely advanced yogi emanates.

Thanks to:

--------------------------------------------------------------------------------------------

25. பலேஷூ ஹஸ்தி பலாதீனி

யானையை நினைத்து சம்யமம் கொள்ள யானையின் மிகுந்த பலமும் கைவரும்.

ராமகிருஷ்ணர் அனுமன்த்யானம் வால்முளைக்கச் செய்தது
வாமதேவர் சங்கல்பமே விண்ணைக்கடந்து நின்றது
நாமரூப த்யானத்தாலே எதுவுமாக லாகுதே
கரியைநினைத்து த்யானம்கொள்ள கரியின்பலமும் சேருதே..!


*கரி = யானை
बलेषु हस्तिबलादीनी ॥२४॥
baleṣu hastibalādīnī ||24||

Meditating on strength itself engenders the strength of an elephant. ||24||
baleshu (बलेषु, baleṣu) = in the strength
hasti (हस्ति, hasti) = elephant
baladini (बलादीनि, balādīni) = strength of

Thanks to:

--------------------------------------------------------------------------------------------

26. பிரவிர்த்திய லோக நியாசத் சூட்சும
வியவஹித விப்ரக்ருஷ்ட ஞானம்

இதயக் கமலத்தின் ஞானம் தூரம் கடக்கும், தூலத்தை  நோக்கும் திறனளிக்கும்

இதயம்தன்னில் ஓர்கமலம்  ஒளியில்விளங்கி நிற்குது
அதையேநினைத்து த்யானம்கொள்ள எதுவும்விளங்க லாகுது
உதயமாகும் சிறப்புப் பார்வை தூலம்தூரம் கடக்குமே
அதையும்கொண்டு யோகம்தொடர  ஞானப்பார்வை 
கிடைக்குமே

*தூலம் கடத்தல் = தூலப் பொருளைக் கடந்து சூக்குமத்தையும் காணும் திறன்

प्रवृत्त्यालोकन्यासात् सूक्ष्माव्यावहितविप्रकृष्टज्ञानम् ॥२५॥
pravṛtty-āloka-nyāsāt sūkṣmā-vyāvahita-viprakṛṣṭa-jñānam ||25||

Meditating on the source of the inner light gives rise to knowledge (jnana) of subtle, concealed and remote entities. ||25||
pravritti (प्रवृत्ति, pravṛtti) = source
aloka (आलोक, āloka) = inner light
nyasa (न्यासा, nyāsā) = by directing; by projecting
sukshma (सूक्ष्म, sūkṣma) = refined entities; subtle entities
vyavahita (व्यवहित, vyavahita) = hidden; concealed; veiled
viprakrishta (विप्रकृष्ट, viprakṛṣṭa) = distant; remote
jnana (ज्ञान, jñāna) = knowledge


Thanks to:

--------------------------------------------------------------------------------------------
27. புவன ஞானம் சூர்யே  சம்யமாத்

சூரியன் மேல் சம்யமம் செய்வதால் உலகில் நடக்கும் யாவும் அறியப் பெறலாம்

சூரியனும் கிரணம்கொண்டு ஒளிமயமாய்  எரிகிறான்
அறிவதாகப்  பொருளின்காட்சி நமக்குமவன் தருகிறான்
புரிவதான யோகம்தன்னில்  அவன்மேல்  த்யானம்கொண்டிட
தெரிவதாகும் புவனமெங்கும் நடக்குமெதுவும்   கண்டிட

भुवज्ञानं सूर्येसंयमात् ॥२६॥
bhuva-jñānaṁ sūrye-saṁyamāt ||26||

Meditation (samyama) on the sun gives rise to knowledge (jnana) of the ethereal and physical worlds. ||26||
bhuvana (भुवन, bhuvana) = world; realm; ethereal and physical worlds
jnana (ज्ञान, jñāna) = knowledge; understanding
surye (सूर्ये, sūrye) = (loc. from surya (सूर्य, sūrya)) concerning the sun; concerning surya
sanyamat (संयमात्, saṁyamāt) = (abl. sg. m. from sanyama (संयमा, saṁyamā)) deep contemplation; meditation

Thanks to:

--------------------------------------------------------------------------------------------
28 சந்த்ரே தாரா வியூக ஞானம்

சந்திரன்  மேல் சம்யமம் செய்வதால் வானில் இருக்கும் நட்சத்திரங்களின் அமைப்பையும் (Astronomy) அறிய முடியும் 

பானைக்கொரு சோறின்பதம் போதுமான தாகுமே
யானைக்கொரு அங்குசமே  அடக்கியாளப் போதுமே
மீனைப்போன்று வானிருக்கும் நட்சத்திர அமைப்புமே
சந்திரனை சம்யமிக்க  தோன்றுவதில் வியப்புமேன் ? 

चन्द्रे तारव्यूहज्ञानम् ॥२७॥
candre tāravyūha-jñānam ||27||

Meditating on the moon (chandra) gives rise to knowledge (jnana) concerning the arrangement of the stars. ||27||
chandre (चन्द्रे, candre) = (loc. sg. m./acc. du. n./nom. du. n./loc. sg. n./acc. du. f./nom. du. f. from chandra (चन्द्र, candra)) moon
tara (तार, tāra) = (iic.) star
vyuha (व्यूह, vyūha) = (iic.) arrangement; oneness; configuration
jnanam (ज्ञानम्, jñānam) = (acc. sg. n. / nom. sg. n. from jnana (ज्ञान, jñāna)) knowledge; insight
tara vyuha jnana (तार व्यूह ज्ञान, tāra vyūha jñāna) = knowledge concerning the arrangement of the stars; astrological knowledge

Thanks to:

--------------------------------------------------------------------------------------------
29. துருவே தக்கதி  ஞானம் 

துருவ நட்சத்திரம் மேல் செய்யும் சம்யமத்தால் விண்மீன்களின் இயக்கம் புரிபடும்

துருவனான  நட்சத்திரம் நிலைத்துவிண்ணில் நிற்குது
அருவமான உருவமான விண்ணின்பொருளைக் காணுது
பொருளதாகக் கொண்டதன்மேல் சம்யமமே கொள்வதால்
புரிவதாகத் தெரியும்விண்ணின் மீன்கள்இயக்கம் தானது

ध्रुवे तद्गतिज्ञानम् ॥२८॥
dhruve tadgati-jñānam ||28||
Meditating on the polestar engenders knowledge (jnana) of its constellation. ||28||
dhruve (ध्रुवे, dhruve) = (loc. sg. m./acc. du. n./nom. du. n./loc. sg. n./acc. du. f. nom. du. f. from ) polestar
tat (तत्, tat) = (acc. sg. n./nom. sg. n. from tad (तद्, tad)) its; their
gati (गति, gati) = (iic.) movement; constellation
jnanam (ज्ञानम्, jñānam) = (acc. sg. n. / nom. sg. n. from jnana (ज्ञान, jñāna)) knowledge; insight
Thanks to:

--------------------------------------------------------------------------------------------
30. நாபிசக்ரே காய வ்யூக ஞானம் 

நாபி சக்கரத்தின்  மேல் செய்யும் சம்யமத்தால் உடலின் அங்க இயக்கம் புரிபடும்

கடலும்கரையில் அலைகள்கொண்டு ஆர்ப்பரித்து தோன்றுது
படகில்சென்று நடுவில்காண அதனின்அமைதி தெரியுது
அதனைப்போல  உடலின்நடுவாம் நாபிமீது சம்யமம்
செய்வதனால் அங்கம்யாவும் தெள்ளத்தெளிவாய்த்  தெரிந்திடும் 

नाभिचक्रे कायव्यूहज्ञानम् 
nābhicakre kāyavyūha-jñānam 

Meditation on the energy center of the navel (nabhi chakra) gives rise to knowledge (jnana) concerning the arrangement and structure of the physical body. ||29||
nabhi (नाभि, nābhi) = (iic.) navel
chakre (चक्रे, cakre) = (acc. du. n./nom. du. n./loc. sg. n. from chakra (चक्र, cakra)) energy center; wheel
kaya (काय, kāya) = (iic) body; physical body
vyuha (व्यूह, vyūha) = (iic.) arrangement; configuration
jnanam (ज्ञानम्, jñānam) = (acc. sg. n. / nom. sg. n. from jnana (ज्ञान, jñāna)) knowledge; insight

Thanks to:
--------------------------------------------------------------------------------------------

இந்த சூத்திரங்களில் கூறப்படுவதால் சாரம்:
சித்திகள் பற்றி பேச ஆரம்பிக்கிறார் பதஞ்சலி
ஸம்யமப் பொருளைப் பொறுத்து என்னென்ன சித்திகள் கைகூடும் என்று தனித்தனியாகக் கூறுகிறார் பதஞ்சலி முனிவர்.



11 - 20                                     31 - 40


<<< முதல் பக்கம் >>>

No comments:

Post a Comment