தத் ப்ரதிஷேதார்த்தமேக தத்வாப்யாஸ : ||
தடை நீக்கம்
ஒரு மனப்பட்டு ஒரே பொருளை நிலையாக சிந்திக்கும்போதுதான் த்யான
முன்னேற்றத் தடைகளை நீக்க முடியும்
______________________________________________________
ஒன்றே ஒன்றென்று வாழுவோம் நன்றே ஒருமனத்தில் தேடுவோம்
யோகத் தடைகள்-நீங்க மனது நின்று-ஓய எங்கும் ஒரு-தெய்வம் என்று த்யானம் பூணுவோம்
(2)
ஒன்றே ஒன்றென்று வாழுவோம் நன்றே ஒருமனத்தில் தேடுவோம்
(MUSIC)
அலை அலையாய் தோன்றும் எண்ணம் வீணடா
அதனை விலக்குதலே யோகம் என்று காணடா
(2)
அந்த மனம்-ஓயலே ஒன்றும் இலை-சாயலே
என்னும் நிலை-காண நல் த்யானம் நீ பூணடா
ஒன்றே ஒன்றென்று வாழுவோம் நன்றே ஒருமனத்தில் தேடுவோம்
(MUSIC)
மாயம் இந்த உலகம்-என்று நீ அறி
இந்த உண்மை-தோன்ற தோன்றும்-மெய்யே ஸ்ரீ-ஹரி
(2)
இந்த மொழியொன்று-தான் கீதை என-அன்று தான்
வந்து குருவாகிச் சொன்னானே அதைப் போற்றுவோம்
ஒன்றே ஒன்றென்று வாழுவோம் நன்றே ஒருமனத்தில் தேடுவோம்
(MUSIC)
யுகம் யுகமாய் கடவுள் வந்து தோன்றினான்
அவன் என்றும்-மெய்யை மெய்யைக்-கொண்டு கூறினான்
(2)
சொன்ன படி வாழடா உண்மை அது தானடா
என்றும் இறை தானே குருவாக வருவானடா
ஒன்றே ஒன்றென்று வாழுவோம் நன்றே ஒருமனத்தில் தேடுவோம்
நன்றே ஒருமனத்தில் தேடுவோம் (2)
____________
No comments:
Post a Comment