ஆட்டமில்லா ஓர்-மனதில் த்யானம் கொள்வாய் அய்யா
மாசு-இல்லா பரம்பொருளில் வைப்பாய்-மனதை மெய்யாய்
(1+SHORT MUSIC+1)
பார்-நடக்கும் நாடகத்தில் உந்தன் பங்கு (2)
நீ நடித்தல் கூட புரிந்திடுவாய் பூஜை-என்று
சேவை-தனை நீயும் செய்வாய் பூஜை-போலே
மேலாம் அன்புதனை ஏற்றிடுவாய் தீபம்-போலே
அன்பு-மனம் ஒதிடுமே வேதம்-தானே
ஆட்டமில்லா ஓர்-மனதில் த்யானம் கொள்வாய் அய்யா
மாசு-இல்லா பரம்பொருளில் வைப்பாய்-மனதை மெய்யாய்
(MUSIC)
உன்-ஜோலி மானிடத்தின் சேவை ஐயா
என்று-பார்த்தனிடம் சொன்னது-தான் கீதை மெய்யாய்
பாரிருக்கும் நிலையில்-இன்று உண்மை-பூஜை
என்றும் அன்பு-கொண்டு துன்பம்-போக்கும் சேவைதானே
அன்புடனே உதவுதலே மெய்யின்-மெய்யே
ஆட்டமில்லா ஓர்-மனதில் த்யானம் கொள்வாய் அய்யா
மாசு-இல்லா பரம்பொருளில் வைப்பாய்-மனதை மெய்யாய்
(MUSIC)
உதடுகளில் கொண்டிருப்பாய் இறைவன்-பேரை
உன்-கைகளிலே கொண்டிருப்பாய் மானிட-சேவை
வேதத்திலே உள்ளதெல்லாம் இதுதான்-ஐயா
இதை உணர்ந்து-கொண்டால் உண்மையெல்லாம் விளங்கும் தன்னால்
உணர்வது-தான் உண்மையிலே த்யானம்-அய்யா
ஆட்டமில்லா ஓர்-மனதில் த்யானம் கொள்வாய் அய்யா
மாசு-இல்லா பரம்பொருளில் வைப்பாய்-மனதை மெய்யாய்
No comments:
Post a Comment