Wednesday, August 31, 2011

சமாதி பாதம் சூத்ரம் 41 - 51

41. க்ஷீண வருத்தேரபிஜாதாஸ்யேவ   
மணேர் க்ரஹீத்ரூ க்ரஹண க்ராஹ்யேஷூ
தத்ஸ்த்தததஞ்ஜநதா சமாபத்தி: 

சமாதி
காணும் காட்சி,பொருள் & காண்பவர் மூன்றும் ஒன்றாவதே சமாதி 
(சம = ஒன்றாக/சமமாக ஆத = தெரிவது )

பின்னேமறைந்த பொருளாய்ச்சுத்தப் பளிங்குமங்கே     தோன்றுமே
நன்றாய்த்தெளிந்த நெஞ்சில்சித்தம் காணும்பொருளாய்    மாறுமே
காட்சிவேறு சித்தம்வேறு பொருளும்வேறு என்பதாய்
பிரிந்திடாமல் ஒன்றுசேர்ந்து தோன்றுதல் சமாதியே..!
क्षीणवृत्तेरभिजातस्येव मणेर्ग्रहीतृग्रहणग्राह्येषु तत्स्थतदञ्जनता समापत्तिः ॥४१॥
kṣīṇa-vṛtter-abhijātasy-eva maṇer-grahītṛ-grahaṇa-grāhyeṣu tatstha-tadañjanatā samāpattiḥ ||41||

Once the misconceptions (vritti) have been minimized, everything that is mutable in human beings (chitta) becomes as clear as a diamond, and perceptions, the perceived, and perceiver are melded with each other. - One builds on and colors the other. This is enlightenment (samapatti). ||41||
kshina (क्षीन, kṣīna) = reduced, minimized, emptied
vrittih (वृत्तिः, vṛttiḥ) = (nom. from vritti (वृत्ति, vṛtti)) opacity; thought waves; waves
abhijatasya (अभिजातस्य, abhijātasya) = clear; transparent
eva (एव, eva) = how; really; truly
mani (मणि, maṇi) = diamond; jewel; crystal; precious stone
grahitri (ग्रहीतृ, grahītṛ) = perceiver; subject
grahana (ग्रहण, grahaṇa) = perception; subject-object relationship
grahyeshu (ग्राह्येषु, grāhyeṣu) = the perceived; the object
tatstha (तत्स्थ, tatstha) = one builds on the other
tadanjanata (तदञ्जनता, tadañjanatā) = one colors the other
samapattih (समापत्तिः, samāpattiḥ) = (nom. from samapatti (समापत्ति, samāpatti)) samapatti; a state of enlightenment; samadhi

Thanks to:

--------------------------------------------------------------------------------------

42. தாத்ரா சப்தார்த்த ஞான விகல்பை :  சந்கீர்ணா சவிதர்கா ஸமாபத்தி

சவிதர்க்  சமாதி
பெயர்/வார்த்தை, அதன் பொருள் , உருவம் ,பொருளைப் பற்றிய அறிவோ (knowledge based on Logic) அல்லது ஊகமோ (Imagination – Deduction) இருக்கும் சமாதி நிலை சவிதர்க சமாதி ஆகும்.
இந்த நிலையிலும் மேல் கூறியவை இருக்கும் வரையில் (இருப்பதாலே ) மயக்கத்துக்கு இடமுண்டு.

அலையிலாச் சமாதியே எனினுமுண்டு மீதியே
பெயருமன்றி  பொருளதன்றி  உருவின்பதிவும் தேவையே
பெயரில்பெயரின் பொருளில்பொருளின் அறிவில்இல்லை தூய்மையே
மயக்கமிந்த மூன்றினாலும் விளையக்கூடலாகுமே..!   
இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க

तत्र शब्दार्थज्ञानविकल्पैः संकीर्णा सवितर्का समापत्तिः ॥४२॥
tatra śabdārtha-jñāna-vikalpaiḥ saṁkīrṇā savitarkā samāpattiḥ ||42||
In conjunction with word and object knowledge, or imagination, this state is savitarka samapatti. ||42||

tatra (तत्र, tatra) = this; these
shabda (शब्द, śabda) = word
artha (अर्थ, artha) = image; picture; object; truth
jnana (ज्ञान, jñāna) = knowledge
vikalpah (विकल्पः, vikalpaḥ) = (nom. from vikalpa (विकल्प, vikalpa)) an imagining; an illusion
sankirna (संकीर्ण, saṁkīrṇa) = skewed; distorted; mixed
savitarka (सवितर्क, savitarka) = with acceptance
samapattih (समापत्तिः, samāpattiḥ) = (nom. from samapatti (समापत्ति, samāpatti)) samapatti; a state of enlightenment
savitarka samapattih (सवितर्क समापत्तिः, savitarka samāpattiḥ) = a specific form of samapatti

Thanks to:

--------------------------------------------------------------------------------------

43. ஸ்ம்ருதி பரிசுத்தெள
ஸ்வரூப சூன்யேவார்த்த
மாத்ர நிர்பாஸா நிர்விதர்கா ||


நிர்விதர்க்க சமாதி
பெயர், பொருளின் ஞானம் (ஊகத்தின் அன்றி தர்க்கத்தின் பாற்பட்டதான) நினைவுப் பதிவின் துணை இல்லாமல் பொருள் விளக்கம் தோன்றுகின்ற சமாதி நிலையே நிர்விதர்க்க சமாதி. (தர்க்கம் = logic ).

நிர்விதர்க்கம் என்பது நினைவின் பதிவுஅற்றது
நின்றவந்த பதிவிலாகும் மயக்கம் ன்னை வென்றது
கற்பிக்கவோர் துணையிலாது தானேஅறியப் பெற்றது
சொற்பதத்தில்  அடங்கிடாத உண்மையிங்கே  மின்னுது ..!
இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க
स्मृतिपरिशुद्धौ स्वरूपशून्येवार्थमात्रनिर्भासा निर्वितर्का ॥४३॥
smṛti-pariśuddhau svarūpa-śūnyeva-arthamātra-nirbhāsā nirvitarkā ||43||
Once all previous impressions (smriti) have been purged and one’s own nature is clearly perceptible, then only the object of contemplation emanates light. This is nirvitarka samapatti. ||43||

smriti (स्मृति, smṛti) = remembrance; previous impression
parishuddhau (परिशुद्धौ, pariśuddhau) = purged
svarupa (स्वरूप, svarūpa) = own form; own nature
shunya (शून्य, śūnya) = without; empty; eliminate
iva (इव, iva) = as if
artha (अर्थ, artha) = image; picture; object; truth
matra (मात्र, mātra) = only
nirbhasa (निर्भासा, nirbhāsā) = luminous; reflecting; radiant
nirvitarka (निर्वितर्का, nirvitarkā) = without acceptance; the next, more subtle state of samapatti
Thanks to:

--------------------------------------------------------------------------------------

44. நிர்விசார ச சூக்ஷ்ம ஏதயைவ ஸவிசாரா விஷய வ்யக்யாத


சவிதர்க்க நிர்விதர்க்க சமாதி போன்றே சூக்குமப் பொருளின்பாற்பட்ட சமாதியும், ஆய்ந்து அறிதல் , ஆய்தலின்றி அறிதல் என இரு வகைப் படும்.

சூக்குமத்துப் பொருள்நினைத்து யோகம்கொள்ளல் ஆயினும் 
வாக்கும்நோக்கும் கொண்டிலதாய் உளவிரண்டு போலவே
ஆய்ந்து அறிந்துகொள்வது ஆய்விலாது அறிவதென்று 
கொண்டிருக்கலாகு திந்த வகையின்த்யானப் பயிற்சியும்

விளக்கம்
வாக்கு: வாக்கில் வெளிப்படும் பெயர், நோக்கு=உருவம் / நோக்கி அறிவது

இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க

Thanks to:

--------------------------------------------------------------------------------------

45. சூக்ஷ்ம விஷயத்வம் சாலிங்க பர்யவஸானம்சூக்குமப் பொருள்
ஸ்தூலப் பொருளுக்கு பதில் சூக்குமமே த்யானப் பொருளாகும் இந்த நிலையிலும் சவிசார சமாதி ( ஆய்ந்து அறிதல் ),
 நிர்விசார (ஆய்தலின் துணையும் தேவையற்ற உயர் நிலை) ) என்னும் இரண்டு வகை சமாதிகள் உள்ளன.  (விசாரம் = Inquiry)

சூக்குமப் பொருள் என்பது வரையறுத்து சொல்ல முடியாத வகையில் சூக்குமமாய் இருக்கலாகும்.

ஆற்றுக்குண்டு இருகரை காற்றுக்கேது வரையறை
காற்றைக்கலத்தில் அடைப்பதாலே காற்றினுருவம் தோன்றுமோ?
உற்றவுருவும் நின்றஇடமும் அற்றதான காற்றுபோல் 
சாற்றுமொரு வரையறைக் கடங்கிடாது சூக்குமம்..!

 --------------------------------------------------------------------------------------

46. தா ஏவ சபீஜ : சமாதி : ||

விதைகொண்ட சமாதி
சவிதர்க்க ,  நிர்விதர்க்கசவிசார,நிர்விசார ஆன   இந்த நான்கு சமாதி நிலைகளும் விதைகொண்ட சமாதி எனப்படுபவை. இவற்றில் வினைப்பதிவுகள் முற்றிலும் முளையறுக்கப் படுவதில்லை  
   
சித்தம் கொண்ட சத்வநிலை சமநிலையைக் கொடுக்குது  
சமாதியென்ப தாவதந்த மனப்பதிவைக் கடப்பது 
வென்றுவந்த  நான்கில்தூய்மை படிப்படியாய்ப் பெருகுது 
 என்றுமங்கும் கடைநிலையின் வித்துமட்டும்  தங்குது..!
सूक्ष्मविषयत्वम्चालिण्ग पर्यवसानम् ॥४५॥
sūkṣma-viṣayatvam-ca-aliṇga paryavasānam ||45||
An object can be subtle to the point of indefinability. ||46||
s

ukshma (सूक्ष्म, sūkṣma) = subtle; etheric

vishaya (विषय, viṣaya) = object 
cha (च, ca) = andalinga (अलिङ्ग, aliṅga) = the undefined, unmanifested state paryavasanam (पर्यवसानम्, paryavasānam) = (from paryavasana (पर्यवसान, paryavasāna)) limit; extending to


Thanks to:

  
--------------------------------------------------------------------------------------


47. நிர்விசார வைசாரத்யேத்யாத்ம   பிரசாத : ||


நிலையான சுத்த நிர்விசார சமாதி கூடுவதென்பது விரைவில் தெரியவரும் உண்மைக்காட்சியை அறிவிப்பதாகும். மழையின்வருகை விரைவிலென்று மயிலினாட்டம் சொல்லுது
அடிக்கும்மண்ணின் வாசம்மழையின் அறிவிப்பாய்த்தான் ஆகுது
நிர்விசாரம் நிலைத்துநெஞ்சில் நின்றிருப்ப தாவது
விரைவில்தோன்றும் உண்மைக்காட்சி செய்தியைத்தான் சொல்லுது..!

Thanks to: 

--------------------------------------------------------------------------------------

48. ரிதம்பர தத்ர ப்ரக்ஜ்ஞா : ||
ரிதம்பர சமாதி
தொடர்ந்த சாதனையால் படிப்படியாக மாசு களையப்பட்டு நிலைத்து நிற்கும் நிர்விசார சமாதியில் தோன்றும் ஞானம் கலப்பில்லாத சுத்த உண்மையே. (ரிதம்பர சமாதி. ரிதம் = உண்மை )

பாற்க்கடலைக் கடையக்கடைய மாசு களையப்பெற்றதே
பிரிந்துவந்த  விடமும்கூட சிதம்பரத்தான் கொண்டதே
தேவருக்கு முடிவில்கிடைத்த அமுதம்ன்னைப் போலவே 
சித்தம்கடைந்த ரிதம்பரத்தில் சுத்தஉண்மை விளங்குமே ..! 
Thanks to:
--------------------------------------------------------------------------------------

49. ஸ்ருதா நுமான ப்ரஜ் ஞாப்யாமன்ய விஷயா விசேஷார்த்தத்வாத்


விஷய ஞானமோ அனுமான உதவியோ தேவையற்ற நிலையே ரிதம்பரம் ஆகும். 


மனதின்பதிவு என்பது கேட்டறிந்து கொள்வது
பிரிதுமொன்றுமான தந்த அனுமானத்தின் அறிவது 
முன்னர்வந்த நிலைகள்யாவும் பதிவைக்கொண்டு அறிவது
ரிதம்பரத்தின் உணர்வது பதிவின்தேவை அற்றது  
அறியுமந்த பொருளினோடு சிறப்பு உறவுகொண்டது

śruta-anumāna-prajñā-abhyām-anya-viṣayā viśeṣa-arthatvāt ||49||
Consciousness is characterized by a special relationship to the object. This relationship exceeds the bounds of knowledge that is received and followed. ||49||

shruta (श्रुत, śruta) = (acc. pl. m.) heard; received
anu (अनु, anu) = from
mana (मान, māna) = mind; understanding
anumana (अनुमान, anumāna) = (acc. pl. f./nom. pl. f.) conclusion
prajna (प्रज्ञा, prajñā) = (nom. sg. f.) consciousness; true knowledge
anya (अन्य, anya) = other; different
vishaya (विषया, viṣayā) = (nom. pl. m./acc. pl. f./nom. pl. f.) object; content
vishesha (विशेष, viśeṣa) = (iic.) special
artha (अर्थ, artha) = image; picture; object; truth
arthatvat (अर्थत्वात्, arthatvāt) = (abl. sg. n.) truth in respect to; relationship to
Thanks to:
--------------------------------------------------------------------------------------

50. தஜ்ஜா :   சம்ஸ்காரோ ஸந்ய சம்ஸ்கார பிரதிபந்தி || 

வினைப் பதிவற்ற நிலை என்பதல்லாது, வினை முளைத்தலையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது ரிதம்பர சமாதி ஆகும்.


ரிதம்பரத்தின் திறத்தினாலே வினைகள்யாவும் அழியுது 

விரைந்தெழும்பும் வினையின்விதை முளைப்பதையும் தடுக்குது 
சுத்தசத்வ ரூபமிங்கு பழக்கமாகிப் போகுது 
பதமடைந்து உண்மைகாணும் நேரம்கூட நெருங்குது

Thanks to:
--------------------------------------------------------------------------------------


51. தச்யாபி நிரோதே சர்வநிரோதாந்நிர்பீஜ : சமாதி :||


பிரக்ஞானம் பிரம்மா = தன்னுணர்வே பிரம்மம் - ஆத்ரேய உபநிஷத் 
அயம் ஆத்மா பிரம்மா = ஆத்மாவே பிரம்மம் - மாண்டுக்ய உபநிஷத் 
தத் தவம் அஸி = நீ தான் அது. அதுதான் நீ. இரண்டும் ஒன்று. அது தான் பிரம்மம் - சாந்தோக்ய உபநிஷத் 
அஹம் பிரம்மாஸ்மி= நானே பிரம்மம் - ப்ரஹதாரண்ய உபநிஷத் 

சர்வம் பிரம்ம மயமாகிறது ..!
மேல்கண்ட உபநிஷத் மகாவாக்யங்கள் நிதர்சனமாகின்றன..!
என்னே அந்த உயர் நிலை..!
எல்லையற்ற பேரானந்தம் பேரானந்தம் காண்கிறது..!
பேரானந்தம் தவிர வேறெதுவும் இல்லததாகிறது..!

நிர்விசார நிலையில்தூய உண்மைஅறியத் தோன்றினும்
காணப்படுவ தாவது கண்டுகொண் டிருப்பது
என்றிருக்கும் அவ்விரண்டின் பன்மையும் மறைந்திட
உண்மைகாணும்  உண்மையாக உண்மை  ஒன்றித்தோன்றிடும்..!
Thanks to:

--------------------------------------------------------------------------------------
PREVIOUS                                                                                  NEXT

No comments:

Post a Comment