Thursday, July 23, 2015

1.22. நோக்கப் பழம் தித்திக்குமா (கால மகள் கைகொடுப்பாள்)

 
 
ம்ருதுமத்யாதி மாத்ரத்வாத் 
ததோ ஸபி விசேஷ : ||
சாதனையின் தீவிரம்
சாதனையின் தீவிரத்திற்கேற்ப பயன் கிடைக்கிறது. ஆழ்ந்த தீவிரம் விரைந்தும் , மிதமான தீவரம் சிறிது தாமதித்தும் , குறைந்த தீவிரம் தாமதித்தும் பலன் தரும்.
___________________________________________________

நோக்கப் பழம் தித்திக்குமா சொல்லய்யா
நாம் பார்க்கப்-பசி சென்றிடுமா என்னய்யா

(2)
நோவது தான் நோன்பு என்று இல்லையா
அந்த நோவில்-தான் பலனிருக்கு இல்லையா

நோக்கப் பழம் தித்திக்குமா சொல்லய்யா
நாம் பார்க்கப்-பசி சென்றிடுமா என்னய்யா
(MUSIC)
சின்னச்-சின்ன குச்சிகள்-தான் பின்னப்-பின்ன கூடுகளாம்
ஆவதெல்லாம் முயற்சியிலே இருக்கு-அறியடா
(2)
ஒரு பொழுதும் விரதங்களும் யாகங்களும் பூஜைகளும்
மனம்-கழுவ இல்லை என்றால் உனக்கு ஏனடா
தம்பி பிறகு ஏனடா..தம்பி நினைத்துப் பாரடா
(SM)

நோக்கப் பழம் தித்திக்குமா சொல்லய்யா
நாம் பார்க்கப்-பசி சென்றிடுமா என்னய்யா
(MUSIC)
ஆஆ .. + (SM)
கல்லுக்கு நீ தேனும் பாலும் மிகச் சொரிந்த போதும்
ஆயிரமாய் இறைவன் பேரை தினம்-உரைத்த போதும்
 (1+Short Music+1)
நெஞ்சுக்குள்ள பகையை வெறுப்பினிலே மதியை
உள்ளுக்குள்ளே வைப்பதனால் பலனும் ஏதடா
தம்பி பலனும் ஏதடா தம்பி முழுதும் வீணடா 
( Short Music )

நோக்கப் பழம் தித்திக்குமா சொல்லய்யா
நாம் பார்க்கப் பசி சென்றிடுமா என்னய்யா

ஆஆ ..
 
_____________
 
 


No comments:

Post a Comment